கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே இந்த கட்டுரையின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த கட்டுரை அப்போஸ்தலர் பவுல் அவர்களை குறித்த வேதாகம குறிப்புகளை மட்டும் கொண்டதாகும்.கிறிஸ்தவத்தை விமர்சிக்கும் அதிகமானவர்கள் அப் பவுலை விமர்சிக்கின்றனர்.அவர்தான் கிறிஸ்தவத்தை உருவாக்கினார் என்ற பிரம்மையை ஏற்படுத்த பார்க்கிறார்கள் .அதற்கும் மேலே சில இஸ்லாமிய அறிஞர்கள் அப்.பவுல் அவர்கள் யூத கைக்கூலி என்றும்,இயேசு கிறிஸ்துவின் போதனைகளை சிதைக்கவே அவர் கிறிஸ்தவராக மாறினார் என்று வாதம் வைத்து தங்கள் அறியாமையை வெளிக்காட்டி வருகிறார்கள்.
முதலில் அப்.பவுல் அவர்களின் சாட்சியில் முரண்பாடு என்ற வாதத்திற்கு அவருடைய சாட்சி எந்த ஒரு முரண்பாடும் இல்லாதது என்பதற்கு ஆதாரமாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.அதன் தொடுப்பை இங்கு உங்களுக்கு தருகிறேன்.
அப்.பவுல் அவர்களின் உபதேசங்கள் இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களுக்கு எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளது என்பதை முன்பே சில கட்டுரைகள் மூலம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.அதன் தொடுப்பை இங்கு மீண்டும் தருகிறேன்.
பாகம் 1 :http://iemtindia.com/?p=547
பாகம் 2:http://iemtindia.com/?p=549
இஸ்லாமிய அறிஞர்களின் அடுத்த குற்றச்சாட்டு அப்.பவுல் அவர்கள் பொய் சொல்ல சொல்லி இருக்கிறார் என்பதாகும்.இதற்கான பதிலையும் நாம் முந்தைய கட்டுரைகளிலேயே விளக்கியுள்ளோம்.அதனுடைய இணைப்பையும் இங்கு தருகிறோம்.
மேலும் அப்.பவுல் அவர்கள் யூத கைகூலி என்றும் ,அவர் இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களை சிதைக்க கிறிஸ்தவரானார் என்பதும் சில இஸ்லாமிய அறிஞர்களின் மிக முக்கியமான வரட்டு வாதங்கள் ஆகும்.அப்.பவுல் அவர்கள் யூத மார்கத்தில் பக்தி வைராக்கியமாக இருந்து கிறிஸ்தவர்களை ஒடுக்கியவராவார்.எதிப்பவர்களை தம் பிள்ளைகளாக மாற்றும் அன்பு தெய்வத்திடம் சரணடைந்த அப்.பவுல் அதை விட பலமடங்கு பக்தி வைராக்கியத்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்தார்.முன்பு இருந்த யூத மத பக்தியின் காரணமாக அநேகரை கொலை செய்ய தூண்டுதலாகவும்,அநேகரை துன்புறுத்தி தன் மத பக்தியை காட்டுபவராகவும் இருந்த அப்.பவுல் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை சந்தித்தவுடம் மற்றவர்களுக்காக தன்னுடைய உயிரையும் கொடுக்கு புனிதமான உபதேசத்துக்கு தன்னை அர்பணித்தார்.வாழ்ந்துகாட்டினார்.அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களின் குறிப்புகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.கீழே உள்ள வசனங்கள் மூலம் அப்.பவுல் அவர்கள் தன் வழ்க்கையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக கொண்டிருந்த பக்தி வைராக்கியம் எப்படிப்பட்டது என்பதை அறிந்துகொள்ளலாம்.
அப்போஸ்தலன் பவுல்
I வைராக்கிய வாலிபன் பவுலுடைய பின்னணி:-
1) பரம்பரை:-
a. ஊர் :- சிலிசியா நாட்டின் தர்சு பட்டணத்தை சேர்ந்தவர் – (அப் 21:39, 22:3, 23:34)
b. கோத்திரம்:- இஸ்ரவேல் வம்சத்தின் பென்யமீன் கோத்திரம் – (ரோமர் 11:1, பிலி 3:4,5,2 கொரி 11:22)
2). கல்வி:-
a. எருசலேமிலே கமாலியேலிடத்தில் கல்வி கற்றவர்:- (அப் 22:3)
b. நியாயப்பிரமாணத்தின் படி ஒரு பரிசேயன்:- (அப் 23:6,26:4,5,கலா 1:13,14,பிலி 3:5)
c. கூடாரத் தொழில் செய்யக் கற்றிருந்தார். ( அப் 18:3)
3). குணம்:-
a. நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவர்:- (பிலி 3:6)
b. எருசலேம் யூதர்கள் அறிய ஒரு கண்டிப்பான பரிசேயனாக வாழ்ந்தவர்:- (அப் 26:- 4,5)
c. தேவனைக் குறித்து வைராக்கியமாயிருந்தவர்:- (அப் 22:3)
d. அறியாமல் அவிசுவாசத்தினால் கொடுமைசெய்கிறவராகவும் சபையை துன்பப்டுத்துகிறவராக
இருந்தார்:- (1 தீமோ 1:13)
II. திருச்சபையின் எதிரியாக சவுல்:-
a. ஸ்தேவான் கொலை செய்யப்படுவதற்கு சம்மதிருந்தார்:-(அப் 7:57- 8: 2, 22:20)
b. சபையை பாழாக்கி கொண்டிருந்தார்:- (அப் 8:3)
c. கிறிஸ்தவர்களுடைய வீடுகளுக்குள் நுழைந்து அவர்களை சிறைக்கு இழுத்துக் கொண்டு போய்
காவலிலே போட்டார்:- (அப் 8:3)
d. பல பட்டணங்களிலிருந்த கிறிஸ்தவர்களையும் தண்டனைக்குட்படுத்தினார். (அப் 22:5)
e. விசுவாசிகளை ஜெப ஆலயங்களில் வைத்து அடித்தார். (அப் 22:19)
f. பரிசுத்தவான்கள் அநேகர் கொலை செய்யப்படுகையில் அதற்கு சம்மதித்திருந்தார். (அப் 26:10)
g. அவர்களை தண்டித்து தேவதூஷணம் சொல்ல கட்டாயப்படுத்தினார். (அப் 26:11)
III. கிறிஸ்துவை தரிசித்த சவுல்:-
1) கிறிஸ்துவுடனான முதல் சந்திப்பில்:-
a. சூரியப் பிரகாசத்திலும் அதிகமான ஒரு தெய்வீக ஒளியால் சூழப்பட்டார். (அப் 9:3,22:6, 26: 13)
b. தரையிலே வீழ்ந்தார்:- (அப் 9:4,22:7,26:14)
c. பேரொளியில் இயேசு கிறிஸ்துவின் சத்தத்தை கேட்டார்
:- (அப் 9:4, 22:7,26: 14)
d. அவர் இயேசு என்ற கண்டபோது முற்றிலும் அவருக்கு கீழ்படிய காலூன்றி நின்றார்
(அப் 9:4-8, 22:8-11, 26:15-16)
e. இயேசுவுக்கு கீழ்படிய ஒப்புக்கொடுத்தார்,உபவாசித்தார், ஜெபித்தார், பரிசுத்த ஆவி
பெற்றுக் கொண்டார், பாவங்கள் போகக் கழுவப்பட ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார்.
(அப் 9: 9,11,17,18, 22:16)
g. இயேசுவை தரிசித்ததினால் அநேகருடைய கண்களை திறக்கிறவனாக மாறினார்
:- (அப் 9:17,27, 22:14, 26:16,1 கொரி 9:1, 15:8, அப் 26:18)
2) இயேசு கிறிஸ்துவை குறைந்தபட்சம் 4 முறை தரிசித்த பவுல்:-
a. தமஸ்குவுக்கு போகும் வழியில்:- (அப் 9:17,27)
b. கொரிந்துவிலே:- அப் 18: 9-10
c. மனந்திரும்பின பின் முதல் முறை எருசலேமில் வந்தபோது:- (அப் 22: 17-21)
d. எருசலேமிற்கு கடைசியாக வந்த போது (அப் 23:11)
IV. கிறிஸ்துவின் அப்போஸ்தலனாக மற்றும் சுவிசேஷகனாக பவுல்:-
1) பவுலுடைய அப்போஸ்தல அழைப்பு:-
a. மனுஷரால் அல்ல பிதாவாகிய தேவனாலும் ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவினாலும் அப்போஸ்தலனாக்கப்பட்டவர். (கலாத் 1:1, 2:7)
b. அப்போஸ்தலனாகும் படி அழைக்கப்பட்டவன். (ரோமர் 1:1,7, 11:13, 1கொரி 1:1,9:1,2,
2கொரி 1:1,11:15, எபே 1:1,கொலோ 1:1, 1தீமோ 1:1, 2:7, 2தீமோ 1:1, 1:11, தீத்து 1:1)
2) தேவனுடைய சுவிசேஷகனாக:-
a. தேவனுடைய சுவிசேஷத்திற்காக பிரிக்கப்பட்டவர். (ரோமர் 1:1, அப் 13:2)
b. தேவனுடைய கிருபையினால் சுவிசேஷத்திற்கு ஊழியக்காரனானார். (எபே 3:7)
c. தன்னால் இயன்ற மட்டும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க விரும்பினார். (ரோமர் 1:15)
d. எருசலேம் முதல் இல்லிரிக்கம் வரை சுவிசேஷத்தை பூரணமாக பிரசங்கித்தவர். (ரோமர் 15:19)
e. கிறிஸ்துவின் நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை பிரசங்கிக்க நாடினார். (ரோமர் 15:21)
f. கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரண ஆசிர்வாதத்தை ஜனங்களுக்கு கொண்டு சென்றவர்.
(ரோமர் 15:29)
g. சுவிசேஷத்தை பிரசங்கிக்காவிட்டால் அவருக்கு ஐயோ. (1 கொரி 9:16)
h. தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாக பிரசங்கித்தார். (2 கொரி 11:7)
i. சரீர பெலவீனத்திலும் சுவிசேஷத்தை பிரசங்கித்தார். (கலாத் 4:13)
j. தான் தைரியமாய் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு விசுவாசிகளை விண்ணப்பிக் கேட்டுக் கொண்டார்.
(எபே 6:20)
k. வசனத்தோடும், வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் சுவிசேஷத்தை
பிரசங்கம் பண்ணினார். (1 தெச 1:5)
l. சுவிசேஷத்திற்கு பாத்திரமாய் நடந்துகொண்டு சாட்சி பெற்றிருந்தார்.
(பிலி 1:27,1 தெச 1:5)
aa)இரவும் பகலும் வேலை செய்து சுவிசேஷத்தை பிரசங்கித்தார். (1 தெச 2:9)
bb). சுவிசேஷத்திற்காக தீங்கனுபவித்தார்.(1 தெச 2:2@ 2 தீமோ 1:18@ 2: 9)
m. அப்போஸ்தலனாகிய பவுல் பிரசங்கித்த சுவிசேஷம்:-
aa. தேவனால் வெளிப்படுத்தப்பட்ட சுவிசேஷம்:- (கலாத் 1:11,12,எபே 3:3)
bb. விசுவாசிக்கிறவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு தேவ பெலனாயிருக்கின்ற சுவிசேஷம். (ரோமர் 1:16)
cc. விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதியை வெளிப்படுத்துகின்ற சுவிசேஷம். (ரோமர் 1:17)
dd. இயேசு கிறஸ்துவைப்பற்றிய பிரசங்கமே அந்த சுவிசேஷம். (ரோமர் 16:26, கலாத் 1:16)
ee. கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் பற்றிய பிரசங்கம் (எபே 3:8)
VI. கிறிஸ்துவுக்காக அப்போஸ்தலனாகிய பவுல் அடைந்த பாடுகள்:-
1. பவுலுக்கு விரோதமான சதியோசனைகள்:
a. மனந்திரும்பியவுடனே தமஸ்கு பட்டணத்திலே (அப் 9:23-25, 2 கொரி 11:32,33)
b. ஒரு விசுவாசியாக எருசலேமுக்கு அவர் முதன் முறை சென்ற போது (அப் 9:29)
c. தன்னுடைய மூன்றாவது மிஷனரி பயணத்திலே மக்கெதோனியாவிலே (அப் 9:29)
d. எருசலேமிலே யூதக் கலகக் கூட்டத்தாருக்கு முன்பாக (அப் 21:30,31)
e. எருசலேமிலே ஆலோசனை சங்கத்தார் முன்பாக (அப் 23:10)
f. எருசலேமிலே நாற்பது பேருக்கும் அதிகமானோருடைய சதியோசனை(அப் 23:12-22)
g. சில யூதருடைய சதியோசனை (அப் 25:3)
2. முதன் முதலில் விசுவாசிகளே அவரை நம்பவில்லை. (அப் 9:26)
3. சில விசுவாசி போர்வையில் இருந்தவர்களால் அவர் வெறுக்கப்பட்டார் (பிலி 1:14-15)
4. அவருடைய பணிகள் அருடைய சொந்த யூத ஜனங்களாலும் மற்றவர்களாலும் தொடர்ச்சியாக
எதிர்க்கப்பட்டது.
a. அந்தியோகியாவிலே (அப் 13:45,50)
b. இக்கோனியா பட்டணத்திலே (14:2-5)
c. தெசலோனிக்கே (அப் 17:5, 1 தெச 2:2, 14-16)
d. பெராயாவிலே (அப் 17:13)
e. கொரிந்துவிலே (18:6, 12)
f. எபேசுவிலே (அப் 19:26)
5. கல்லெறியப்பட்டு மரிக்கும் நிலையில் விடப்பட்டார் (அப் 14:19)
6. பிலிப்பி பட்டணத்திலே அடிக்கப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்டார் (அப் 16:19-24)
7. பரிகசிக்கப்பட்டார்
a. அத்தேனே பட்டணத்திலே (அப் 17:18, 32)
b. செசரியாவிலே (அப் 26:24)
8. அடிக்கடி பொய்யாய் குற்றம்சாட்டப்பட்டார் (அப் 24:5-9, 25:7)
9. சமுத்திர கொந்தளிப்பில் அகப்பட்டார் (அப் 27:14-20)
10. விஷப்பாம்பால் கடிபட்டார் (அப் 28:3,4)
11. சிறைவைக்கப்பட்டார்
அ. இரண்டு வருடங்கள் செசரியாவிலே (அப் 24:27)
ஆ. ரோமாபுரியில் (2 தீமோ 1:8, 2:9,எபே 6:20, பிலி 1:13, பிலே 1:9)
12. எல்லாராலும் கைவிடப்பட்டார் (2 தீமோ 4:10, 16)
13. பவுல் தன்னுடைய உபத்திரவத்தை குறித்து கூறும் சாட்சிகள்: (2 கொரி 1:6, 4:8-10, 6:4-10,7: 5,11:24-28,
பிலி 3:7, 8, 10,ரோமர் 8:18)
முடிவுரை:
அன்பு சகோதரர்களே அப்.பவுல் அவர்கள் வாழ்க்கையின் முக்கிய சம்பவங்கள் அனைத்தையும் மேலே உள்ள வசனங்கள் மூலம் அறிந்துகொண்டு இருப்பீர்கள்.இஸ்லாமிய அறிஞர்கள் குற்றம் சாட்டுவது போல் பவுல் கிறிஸ்தவத்திற்குள் இயேசு கிறிஸ்துவுக்கு சம்மந்தம் இல்லாத உபதேசத்தை புகுத்திவிட்டார் என்பது வெற்றுக்கூற்றே ஆகும்.இதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது.அப்.பவுல் அவர்கள் தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் தன்னை சந்தித்த தெய்வத்துக்கு முழுமையாக அர்பணித்தார்.அவரை கொண்டும் மற்ற அப்போஸ்தலர்களை கொண்டும் ஆண்டவர் தன்னுடைய வேலையை இந்த உலகத்தில் நிறைவேற்றினார்.பவுல் அவர்களும்,மற்ற அப்போஸ்தலர்களும் கிறிஸ்துவின் சிலுவைக்கு எதிராக எழும்பிய கள்ள மக்களை நமக்கு அழகாக அடையாளம் காட்டி உள்ளனர்.
நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.கலாத்தியர் 1 : 8,
1 யோவான் 4:1. பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.2. தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.3. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.14. பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.15. இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.
இன்னும் பல வசனங்களில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கும் ஜனங்கள் எழும்புவார்கள் என்பதை நமக்கு தெளிவாக அறிவித்து உள்ளார்கள்.திருவசனத்தை ஜாக்கிரதையாக வாசித்து ,அதன் படி நடக்கிறவர்களாக எச்சரிக்கையோடு இருக்க வேண்டுகிறேன்.
Noble Raja says
அருமையான விளக்கம்
Immanuvel says
Romba sandosam
Osi says
அருமை நண்பரே
Santhosh kumar s says
Very very useful …….
P. Selvanayakam says
Migavum thelivana vilakkam