முதலில் முழு இஸ்லாமிய உலகமும் கிறிஸ்தவத்தை தூற்ற எடுக்கிற வசனம் ரோமர் 3:7 வசனம் ஆகும்.எப்படியாவது பைபிள் பொய் சொல்லச்சொல்லுகிறது.அப் பவுல் பொய் சொல்ல சொல்லுகிறார் என்று சொல்லிவிட்டால் பிறகு அவர்களின் வேலை எளிதாகிவிடும் என்று நினைக்கிறார்கள்.
பொய் சொல்லுவதை பற்றி பரிசுத்த வேதாகமம் என்ன சொல்லுகிறது என்று அறிந்துகொள்வதற்கு முன்பாக குர்ஆனும்,ஹதீஸ்களும் பொய் சொல்லுவதை குறித்து என்ன சொல்லுகிறது என்று அறிந்துகொண்டால் அது அதிக நன்மை அளிக்கும் என்று விசுவாசிக்கிறேன்
முதலாவது நாம் இஸ்லாமில் பொய்யை பற்றி அறிந்துகொள்ள வேண்டுமானால் அவர்களின் அல்லாஹ் குரானில் நேரடியாக பொய் சொல்லுவதை ஆதரிக்கிறார்.
1,இஸ்லாமை ஏற்றுக்கொண்ட மனிதர் மற்றவர்களின் நிர்பந்தம் காரணமாக அல்லாவை நிராகரித்தால் தவறல்ல உள்ளத்தில் மட்டும் அல்லாவை உறுதியாக பற்றிக்கொண்டால் போது என்று போதிக்கிறார்.
அதாவது தன் நம்பிக்கையை உள்ளத்தில் வைத்துவிட்டு வெளியே அல்லாவை வணங்குவதை விட்டு விடுகிறேன் என்று சொல்லுவது தவறலல்ல.இது அல்லாவின் வாக்கு.
குர்ஆன் :16:106
அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப் பெற்ற நிலையில் நிர்பந்திக்கப்பட்டவர் தவிர
2,யாரிடமாவதும் உடண்படிக்கை செய்துவிட்டு நமக்கு அதை முறித்து விட சரியாண காரணம் இருந்தால் அந்த உடண்படிக்கையை நாமாகவே முறிக்கலாம் என்று அல்லாஹ் சொல்லியுள்ளார்.
3.இஸ்லாமை பொருத்தவரை நபிமார்கள்(தீர்க்கதரிசிகள்) எதையாவது செய்து அல்லாஹ் அதை சிலாகித்து சொல்லி அதை கண்டிக்கவில்லையானால் அதை பின்பற்றுவது தவறல்ல.
அப்படி பார்க்கும் பொழுது இப்ராஹிம் நபி தன் வாழ்க்கையில் சொன்ன பொய்யை அல்லாஹ் குரானில் சிலாகித்து சொல்லியுள்ளார். இறை நம்பிக்கையற்றவர்களிடம் பொய் சொல்ல அல்லாஹ் அனுமதி அளித்துள்ளான்.
4.பொதுவாக இஸ்லாமியர்கள் மூன்று இடத்தில் பொய் சொல்ல அனுமதியுண்டு என்று ஒப்புக்கொள்ளுவார்கள்
A,மனைவியிடம்
B,போர்களத்தில் உயிரை காப்பாற்றிக்கொள்ள
C,நண்பர்கள் மத்தியில் இணக்கத்தை எற்படுத்த ஆகிய இது மூன்றுக்கும் அல்லாஹ் பொய் சொல்ல நேரடியாகவே நபி மூலம் அனுமதி அளித்துள்ளான்.
குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் பொய் எதற்காக சொல்லவேண்டும் என்பதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் ஒரு பெரிய விவாதமே நடத்தவேண்டும்.அந்த அளவுக்கு பொய் சொல்லுவதற்கான அனுமதிகள் மலிந்துகிடக்கிறது.இதோ கீழே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கு ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர்கள் என்ன பதில் சொல்லுகிறார்கள் என்பதை சுருக்கமாக பார்க்கலாம்..
///////? ஏகத்துவம் மே மாத இதழில், களியக்காவிளை காட்டுகின்ற அடையாளம் என்ற தலையங்கம் கண்டேன். அதில், சுன்னத் ஜமாஅத்தினர் பேசுவதாகப் பொய் சொல்லி தொலைபேசியில் பேசியிருப்பது முழுக்க முழுக்க குர்ஆன், சுன்னாவிற்கு எதிரான செயல். இதற்கு எந்தவொரு குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ உங்களால் ஆதாரம் காட்ட முடியுமா? அவர்கள் செய்தது தவறு என்றால் நீங்கள் செய்ததும் அதை விடத் தவறு தானே?
அப்துல் காதர்
திருவனந்தபுரம்
ஜாக் அமைப்பினர் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவதாகக் கூறி மக்களை வழி கெடுத்து வருகின்றனர்; தனி மனித எதிர்ப்பின் காரணமாகக் கொள்கையை விட்டு வெளியேறவும் துணிந்து விட்டனர் என்பதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆதாரங்களின் அடிப்படையில் நாம் தோலுரித்துக் காட்டி வருகிறோம்.
களியக்காவிளை விவாதம் தொடர்பாக ஜாக்கின் நிலைப்பாடு எப்படியிருக்கும்? என்று விவாதித்துக் கொண்டிருந்த போது நமது மார்க்க அறிஞர்களில் சிலர், கொள்கை விஷயத்தில் ஜாக் இயக்கத்தினர் அசத்தியவாதிகளுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என்ற கருத்தைத் தெரிவித்தனர். சிலர் அதை மறுத்தனர். இந்த நிலையில் ஜாக்கின் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள இவ்வாறு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.
சத்தியத்திற்கு எதிரான கொள்கையுடையவர்களிடமிருந்து உண்மையை வர வைப்பதற்காக அல்லது சத்தியத்தை மேலோங்கச் செய்வதற்காக, சத்தியத்தின் எதிரியைப் போன்று நம்மைக் காட்டிக் கொள்வதற்கோ, நம்மை மறைத்துக் கொள்வதற்கோ ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.
//////
5)இதுமட்டும் அல்லாமல் அவர்களின் ஹஸ்ரத் முகமது அவர்களும் தன் வாழ்நாளில் தனக்கு பிடிக்காத ஒரு மனிதனை கொல்ல தன் சஹாபியிடம் பொய் சொல்ல அனுமதி அளித்து அவனை கொல்ல வைக்கிறார்.பல இடங்களில் தாமாகவே செய்த உடண்படிக்கைகளை முறித்துள்ளார்.
பொய் சொல்லி ஒருவரை ஏமாற்றி அவரை கொல்ல அனுமதி
முஸ்லீம் 3682 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கஅப் பின் அல்அஷ்ரஃபை வீழ்த்துவதற்கு (தயாராயிருப்பவர்) யார்? அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்” என்று சொன்னார்கள்.
உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள்,94 “அல்லாஹ்வின் தூதரே! நான் அவனைக் கொல்வதை தாங்கள் விரும்பு கிறீர்களா?” என்று கேட்டார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம்’ என்று விடையளித்தார்கள்.
முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், “நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்பவைப்பதற்காக உங்களைக் குறை கூறிப்) பேச என்னை அனுமதியுங்கள்” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பேசு’ என அனுமதியளித்தார்கள்………………….
தாங்கள் செய்த சத்தியத்தையும் முறித்துக் கொள்ளவும் அனுமதி
புகாரி பாகம் 6, அத்தியாயம் 72, எண் 5518
ஸஹ்தம் இப்னு முளர்ரிப் அல்ஜர்மீ (ரஹ்) கூறினார்
………….. உங்களுக்கு (விவரமாக)த் தெரிவிக்கிறேன்’ என்று கூறி (விட்டுப் பின் வருமாறு சொன்)னார்கள்: …………………………………..அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வே உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பிடச் செய்தான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி எந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாததை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்து அதற்காகப் பரிகாரமும் செய்துவிடுவேன்’ என்று கூறினார்கள்.37 (Sahih al-Bukhari, Volume 7, Book 67, Number 427 in English)
புகாரி பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6722
அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா (ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) ‘ஆட்சிப் பொறுப்பை நீயாக (விரும்பிக்) கேட்காதே! ஏனெனில், நீ கேட்காமல் அது உனக்கு வழங்கப்பட்டால், அது தொடர்பாக உனக்கு (இறைவனது) உதவி அளிக்கப்படும். (நீ) கேட்டதால் அது உனக்கு வழங்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவனது உதவி கிட்டாது.) நீ ஒரு சத்தியம் செய்து, அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் செய்துவிட்டு, உன்னுடைய சத்தியத்(தை முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்து விடு’ என்று கூறினார்கள்.22
இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது… (Sahih al-Bukhari, Volume 9, Book 89, Number 260 in English)
அல்லாஹ்வின் நபி இப்ராஹிம் அவர்கள் சொன்ன பொய்கள்
முஸ்லீம் 4726 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் ஒருபோதும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத் தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவை யாகும்………………….
இத்தோடு முடிந்துவிடவில்லை இன்னும் உள்ளது.
அல்லாஹ்வே யூசுஃப் நபிக்கு கொடுத்த தந்திரம்…..
குர்ஆன் 12:76 அவரது சகோதரரின் சுமைக்கு முன் இவர்களின் சுமைகளை (யூசுஃப் சோதிக்க) ஆரம்பித்தார். பின்னர் அவரது சகோதரரின் சுமையிலிருந்து அதை வெளியே எடுத்தார். இவ்வாறே யூஸுஃபுக்கு தந்திரத்தைக் கொடுத்தோம்.அல்லாஹ் நாடினால் தவிர அந்த மன்னரின் சட்டப் படி தமது சகோதரரை எடுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார். நாம் நாடி யோருக்குத் தகுதிகளை உயர்த்துவோம். ஒவ்வொரு அறிந்தவனுக்கு மேல் அறிந்தவன் இருக்கிறான்.
இதை குறித்து மவ்லவி பிஜே அவர்களின் விளக்கம் தேவையான பகுதிகளை மட்டும் கீழே கொடுத்துள்ளேன்.
162.
ஏனெனில் இந்தச் சான்றை நாம் தான் அவருக்கு வழங்கினோம் என்று 6:83 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். இவ்வாறு அவர் வாதிட்டது நபியாக ஆன பின் அல்லாஹ் கற்றுக் கொடுத்த அடிப்படையில் தான் என்பது இதிலிருந்து தெரிகிறது. மக்களுக்குப் புரிய வைப்பதற்காகவே இவ்வாறு இப்ராஹீம் நபியவர்கள் கூறினார்கள் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
இப்ராஹீம் (அலை) அவர்கள் உண்மையைப் புரிய வைப்பதற்காகச் சில தந்திரமான வழி முறைகளைக் கையாண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய வரலாற்றைப் படிப்பினையாக அல்லாஹ் நமக்குச் சொல்லிக் காட்டுவதால் பிறருக்குப் புரிய வைப்பதற்காக படிப்படியாகச் செய்தி களைச் சொல்லலாம் என்ற படிப்பினை யையும் இதிலிருந்து பெறலாம்.
மார்க்கம் தடை செய்துள்ள அம்சங் கள் ஏதும் இடம் பெறாமல் நாடகம் போன்ற வடிவில் நல்ல அறிவுரைகளைக் கூறலாம் என்பதற்கும் இவ்வசனத்தைச் சான்றாகக் கொள்ளலாம்.
இப்ராஹீம் நபியின் இந்தப் போக்கை அல்லாஹ்வும் அங்கீகரிக்கிறான். (திருக்குர்ஆன் 6:83)
236. காரியம் சாதிக்க தந்திரம் செய்யலாமா?
யூசுஃப் நபியவர்கள் தமது சகோதரரைத் தம்முடனே வைத்துக் கொள்வதற்காக அவர் மீது திருட்டுப் பட்டம் சுமத்தி, அதையே காரணம் காட்டி, பிடித்து வைத்துக் கொண்டதாக இவ்வசனம் (12:76) கூறுகிறது.
இதை யூசுஃப் நபி, தன்னிச்சையாகச் செய்தார் என்று கருத முடியாது. ஏனெனில், இந்தத் தந்திரத்தை நாமே அவருக்குக் கற்றுக் கொடுத்தோம்’ என்று இதே வசனத்தின் தொடர்ச்சியாக அல்லாஹ் கூறுகிறான்.
இறைவனே இந்தத் தந்திரத்தைக் கற்றுக் கொடுத்திருப்பதால் இந்த நிகழ்ச்சியில் எந்தக் கருத்து அடங்கி யுள்ளதோ அது போன்ற நிலையில் நாமும் தந்திரத்தைக் கையாளலாம்.
336. தீமையில் பங்கெடுக்காதிருக்கப் பொய் சொல்லுதல்
இவ்வசனத்தில் (37:89), நான் நோயாளி யாக இருக்கிறேன்’ என்று இப்ராஹீம் நபி சொன்னதாகக் கூறப்படுகிறது.
இது இறைவனுக்காக இப்ராஹீம் நபி சொன்ன பொய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். (பார்க்க: முஸ்லிம் 4371)
இப்ராஹீம் நபியவர்கள் நோயாளி யாக இல்லாவிட்டாலும், இறைவனுக்காக நோயாளி என்று கூறியுள்ளார்கள் என் பது இந்த ஹதீஸிலிருந்து தெரிகின்றது.இது போல் ஒரு தீமையில் பங்கேற்காமல் இருப்பதற்காக இது போன்ற பொய்களை நாம் சொன்னால் அது குற்றமாகாது
இப்படியே நாம் இந்த பொய் சொல்லுவதற்கான அனுமதிகளை ஆராய்ச்சி செய்தால் ஒரு டாக்டர் பட்டமே கிடைக்கும் அந்த அளவுக்கு பொய்சொல்ல அனுமதிகள் குவிந்து கிடக்கிறது.
தங்களின் மார்கத்துக்காக பொய் சொல்லுதல் என்ற ஒரு தனி கொள்கையே இஸ்லாமியர்களிடம் உண்டு.அதன் பெயர் ”தக்கியா” என்பதாகும்.
இதனால் தங்கள் மார்கத்தின் இந்த கேவலமான நிலையை மறைப்பதற்கு கிறிஸ்தவம் பொய்சொல்ல சொல்லுகிறது,அப் பவுல் பொய் சொல்லச் சொல்லுகிறார் என்ற பிரச்சாரத்தை இஸ்லாமிய நண்பர்கள் கிளப்பிவிட்டுள்ளனர்.
இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் மார்கம் தங்களை பொய் சொல்ல அனுமதிப்பதை மறுக்க முடியாமல் அதை மறைக்க பைபிளையும்,கிறிஸ்தவர்களையும் குறைசொல்லி பிழைக்கபார்க்கிறார்கள் .அந்த வகையில் இந்த வீடியோவில் மவ்லவி பிஜே அவர்கள் ஒருவர் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் போது பைபிள் வசனங்களை திரித்து பொருள் கூறுவதை காணலாம்.
அதற்கு அவர்கள் முக்கியமாக உபயோகிக்கும் வசனமே ரோமர் 3:7 ஆகும்.
எதை வேண்டுமானாலும் செய்து மார்கத்தை பரப்புவதை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வன்மையாக கண்டிக்கிறார்.
மத்தேயு 23:15 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.
பைபிளை பொருத்தவரை நிர்பந்தத்தின் காரணமாக கூட தேவனை யாரும் மறுதலிக்கக்கூடாது என்பது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்கு கற்றுகொடுத்த சத்தியமாகும்.
மத்தேயு 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
மத்தேயு
10 அதிகாரம்
33. மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.
வெளி 2:10 நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
அப்படியானால் அப் பவும் ரோமர் 3:7 என்ன சொல்லுகிறார்.
முதலாவது ரோமர் நிருபம் ரோமாபுரியில் இருக்கும் யூதருக்கும், இஸ்ரவேலரல்லாத விருத்த சேதனம் செய்யப்படாத புறஜாதிகளுக்கு எழுதப்பட்டது ஆகும்.
முக்கியமாக 2 ,3 ஆம் அதிகாரங்களில் பவுல் என்ன சொல்ல வருகிறார் என்பதை நாம் முதலாவது அறிந்துகொள்ள வேண்டும்.
யூதர்களின் செய்கைகள் புறஜாதிகளுக்கு முன்பாக தூஷிக்கப்படுவதை பவுல் சுட்டிக்காட்டுகிறார்.(2:24)
விருத்தசேதனம் செய்த யூதர்கள் நீயாயப்பிரமாணத்துக்கு உட்பட்டவர்களாக இருந்தும் அதை மீறி செயல்படுவதை இங்கு தெளிவாக குறிப்பிடுகிறார்.ஆனால் புறஜாதியாய் இருக்கிற ஒருவன் நீயாயபிரமாண கட்டளைகளின் படி நடக்கும் பொழுது அவன் ஆவிக்குரிய வகையில் விருத்த சேதனம் பெற்றவனாக மாறுகிறான் என்பதை சொல்லிகிறார்.(2:25 -29)
மூன்றாம் அதிகாரத்தின் தொடக்கத்தில் இருந்து புறஜாதிகளை பார்த்து எழுதுகிறார் யூதர்கள் மேன்மையான எழுத்துக்களை பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் அதைக் கைக்கொள்லவில்லை என்ற காரணத்தினால் வசனம் அவமாய் போவதில்லை என்று விளக்கிக்காட்டுகிறார்(3:1-3)
இப்பொழுது ”மனுஷர் பேசுகிற பிரகாரமாகபேசுகிறேன்” என்று அப் பவுல் சொல்லுவது நாம் யாரிடமாவது பேசும் பொழுது உங்க பாணியில் சொன்னால் தான் உங்களுக்கு புரியும் என்ற வரியை நாம் உபயோகப்படுத்தும் சொல்லர்த்ததிலேயே பயன்படுத்தியுள்ளார்.அதாவது ஒரு விசயத்தை நமக்கு புரிய வைக்க நாம் பயன்படுத்தும் மொழியமைப்பிலேயே பேசுவதாகும்.
அப் பவுல் என்ன சொல்லுகிறார் நாம் ஒரு அநியாயத்தை செய்வதால் அது காக்கை உட்காருவதால் பனம்பழம் விழுந்த கதையாக அது தேவனின் நாமத்துக்கு மகிமையாக மாறிவிடுகிறது என்ற காரணத்துக்காக தேவன் அநீதியுள்ளவர் என்று நாம் சொல்ல முடியுமா?முடியாது தேவன் என்றைக்கும் தேவன் நீதிபரரே.
இதை புரிந்துகொள்ள வேதத்தில் இருந்து ஒரு உவமையை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.உதாரணத்துக்கு பிலயாம் என்ற ஒரு தீர்க்கதரிசியை பற்றி வேதம் சொல்லுகிறது.அவன் இஸ்ரவேல் ஜனங்களை சபிக்க நினைத்தது இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆசீர்வாதமாக தேவன் மாற்றினார்.இந்த இடத்தில் பிலயாமின் தவறை தேவ ஜனங்களுக்கு ஆசீர்வாதமாக தேவன் மாற்றினார் என்பதால் பிலயாம் செய்த செயல் கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்ட செயல் என்று நால் சொல்ல முடியாது அல்லவா?
யூதா 1:11………. பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, ……கெட்டுப்போனார்கள்.
அது போன்ற ஒரு விசயத்தையே அப் பவுல் சொல்லும் 3:5,6 வசனத்திலும் உள்ளது .அதை தொடர்ந்தே 7 வசனம் வருகிறது.
7. அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?
8. நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.
மேலே உள்ள இரண்டு வசனங்களை என்ன நோக்கத்துக்காக அப் பவுல் எழுதியுள்ளாரோ அதற்கு நேர் எதிரான கருத்தை இஸ்லாமிய நண்பர்கள் அதற்கு பொருத்துகிறார்கள்.
7ஆம் வசனத்தில் சொல்லுகிறார் நாம் சொல்லும் பொய்களின் சத்தியத்துக்கு மகிமைவரப்பண்ணுகிறது என்று வைத்துக்கொள்ளுவோம் அப்படி இருக்கும் பொழுது பொய் சொல்லுவது பாவம் ,பொய் சொல்லுகிறவன் பாவி என்று வசனங்கள் தீர்பிடுவது எதற்காக என்று கேள்வியாக கேட்கிறார்.
இன்னும் இயேசுகிறிஸ்து பொய் சொல்லுகிறவன் பிசாசே என்று தெளிவாக சொல்லுகிற வசனம் உண்டு
யோவான் 8:44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
இப்படி இருக்கும் பொழுது பொய் சொல்லுவதால் ஒரு வேளை ஆண்டவரின் நாமம் மகிமைப்பட்டாலும் அது எந்த விதத்திலும் பொய் சொன்ன மனிதனை காப்பாற்றாது.அவன் நியாயத்தில் நிறுத்தப்படுவான் என்பதே அதன் முழுமையான சத்தியமாகும்.
அதாவது 7,8 வசனங்களை இணைத்தால்
அன்றியும், என் பொய்யினாலே( தீமைசெய்வோமாக) தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால்( நன்மை வரும்படிக்குத்), இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?(நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.)
மேலும் பவுல் (பவுல் கிறிஸ்தவத்தை பரப்ப பொய் சொல்ல சொல்லுகிறார் என்று சொல்லும் இஸ்லாமியர்களை போலவே)நன்மையான காரியம் வரும் படி தீமை செய்யலாம் என்று போதிக்கிறார் என்று அன்றைக்கு இருந்த மக்களில் ஒரு சிலர் பரப்பிவந்துள்ளனர்..அவர்களை பார்த்தே 8 ஆம் அவசனத்தில் அப் பவுல் சொல்லுகிறார் ”அவர்கள் எங்களை தூஷித்துச் சொல்லுகிறார்கள்.அவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு வந்தால் அது நீதியாயிருக்கும் என்று”.
அன்பு நண்பர்களே இப்பொழுது சொல்லுங்கள் ஒரு வசனத்தில் சொல்லப்பட்ட அர்த்தங்களுக்கு நேர் முரணான விளக்கங்களை சொல்லி மக்களை திசைதிருப்ப வேண்டிய நிர்பந்தமான நிலையில் இன்றைக்கு இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிரார்கள் என்றால் அது மிகையல்ல.ஏன் என்றால் அவர்கள் மார்கத்தை காப்பாற்ற அவர்கள் எப்படிப்பட்ட பொய்யையும் சொல்லுவார்கள்.அது அவர்கள் அல்லாஹ்வின் விருப்பமாகும்.
இஸ்லாமியர்கள் இந்த ரோமர் 3:7 வசனத்துக்கு துணையாக கொண்டுவரும் இன்னொரு சில வசனங்கள் கீழ் கண்டவையாகும்.
1 கொரிதியர் 9:19. நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.
20. யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.
21. நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்.
மேல் கண்ட வசனங்களை தங்கள் நிலைக்கு ஆதாரமாக காட்டுகிறார்கள்.ஆனால் இதுவும் அவர்களின் பொய் கூற்றுக்கு எந்த விதத்திலும் உதவி செய்கிறதாக இல்லை.
மேலே உள்ள வசனம் அப் பவுல் அவர்களின் உயர்வான தகுதிய கான்பிக்கிறதேயல்லாமல் குறைக்கவில்லை.
குரானின் 80:1,2
தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்.
என்ற வசனம் அல்லாஹ் முகமது அவர்களை கடிந்துகொண்டதான வசனமாக இஸ்லாமியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வசனமாகும்.
இந்த வசனத்துக்கு கீழ்கண்டவாறு விளக்கம் அளிக்கிறார்கள் இஸ்லாமிய அறிஞர்கள்.
//////இந்த அத்தியாயத்தில் (80:1-12) முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. உம்மு மக்தூம் என்பவரின் மகன் அப்துல்லாஹ். இவர் கண் தெரியாதவர். அன்றைய சமுதா யத்தில் இழிவாகக் கருதப்பட்டவர். ஆரம்ப கால முஸ்லிம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயர் குலத்தாரோடு பேசிக் கொண்டிருக்கும் சபைக்கு இவர் வந்து நபிகள் நாயகத்துக்கு ஸலாம் கூறுகிறார்.
‘உயர் குலத்தவர்களோடு பேசும் போது, இந்தச் சாதாரண மனிதர் வந்து இடையூறு செய்கிறாரே’ என்று நபிகள் நாயகத்திற்குக் கோபம் வந்து முகத்தைச் சுளித்து விடுகிறார்கள்.நபிகள் நாயகம் கோபம் அடைந் ததோ, முகத்தைச் சுளித்ததோ கண் தெரியாத இந்த மனிதருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்காது.
ஆனால், உடனடியாக இறைவன் புறத்திலிருந்து எச்சரிக்கை வருகிறது.
உம்மை ஆர்வத்தோடு தேடி வருகிற இவரை உயர் குலத்தவர்களுக்காக விரட்டியடிக்கிறீரா? என்று அல்லாஹ் நபிகள் நாயகத்தைக் கண்டிக்கிறான். இதைக் கண்டித்த பிறகு தான் அந்தக் குருடருக்கே இந்தச் செய்தி தெரிகிறது..///
இந்த இடத்தில் ஹசரத் முகமது அவர்களே உயர்குலத்தவருடன் அவர்கள் பாணியில் பேசிய அதே நேரத்தில் குருடனை பார்த்து கடுகடுத்தார் என்று வாசிக்கிறோம்.ஒரு வேளை குருடனை பார்த்து அவர் புரிந்துகொள்ளும் வண்ணம் பேசியிருந்தால் அல்லாஹ் கோபப்பட்டிருக்கமாட்டார் அல்லவா?ஆனால் அப் பவுல் உயர் குலத்தவர்,கிரேக்கர்,அடிமைகள் யாரிடம் போனாலும் கிறிஸ்துவின் நிமித்தம் நான் அவர்களை போலவே மாறி அவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பை போதிக்கிறேன் என்று சொல்லுகிறார்.
இது ஒரு பள்ளி ஆசிரியை ஒன்றாம் வகுப்பு குழந்தைக்கும் ,அதே வேளையில் 8 ஆம் வகுப்பு குழந்தைக்கும் ஒரே மாதிரியான அணுகு முறையோடு கூட அணுக முடிவு செய்வார்கள் என்றால் அந்த இரண்டு வகுப்பு பிள்ளைகளும் நிச்சயம் புரியமுடியாது என்பதை காட்டுகிறது.
ஒரு அரசாங்கம் படித்த உயர் தகுதியில் உள்ள மக்களுக்கும் கிராமத்தில் படிக்காமல் அறிவில் குறைந்தவர்களுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையுடன் செயல்பட்டால் அவர்கள் சொல்லும் விசயம் சம்மந்தப்பட்டவர்களுக்கு பரிமாறிக்கொள்ள முடியாது
இதை தெளிவாக அறிந்த அப் பவுல் அவர்கள் தெளிவாக மக்களின் தகுதிக்கேற்ப தன் பாணியை மாற்றி சுவிசேசம் பிரசங்கித்தார் என்பதே அவருடைய தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் காட்டுகிறதேயல்லாமல் அவர் பொய்சொல்ல சொல்லுகிறார் என்று சொல்ல ஒரு அணு அளவும் ஆதாரம் கிடையாது.
மேலும் பொய் என்பது இஸ்லாமை போல் கிறிஸ்தவத்தில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஒன்றல்ல.
அப் பவுலே பொய் சொல்லக்கூடாது என்று நேரடியாக சொல்லும் வசனங்கள்
எபேசியர் 4:25 அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.
கொலோசெயர் 3:9 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,
அப் யாக்கோபு
யாக்கோபு 3:14 உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.
அப் யோவன்
வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
வெளி 21:27 தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.
வெளி 22:15 நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
பொய் சொல்லுகிறவர்கள் எதற்காக சொன்னாலும் அதில் அவர்கள் மனஸ்தாபப்பட்டு கர்த்தரிடத்தில் மனந்திரும்பாவிட்டால் அவர்களுக்கு நித்திய நரகம் என்று உன்னதமான உபதேசத்தை போதிக்கும் நம்முடைய பரிசுத்த வேதபுத்தகத்தை விமர்ச்சிக்க யாருக்கும் தகுதியில்லை என்பதை கூறிக்கொள்ளுகிறேன்.
DAWAH REFUTED says
I really hope there will be some pure English section in this site without the need of Google translation.
God Bless
RICHARD says
NICE BROTHER………REALLY NICE…………
jabastin says
fine article
ABDUL HACKIM says
இப்ப நீ என்னதான் சொல்லவர?
விருத்தசேதனம் பண்ணலாம்மா வேண்டாம்மா
admin says
தராளமாக விருத்தசேதனம் பண்ணலாம்.அதில் உலக நன்மைகள் இருக்கலாம்.ஆனால் அதினால் ஆன்மீக நன்மை உண்டு என்றோ,அப்படி செய்வதினால் தனக்கு ஏதாவதும் சிறப்பு கிடைக்கும் என்றோ நம்புவதும் தடைசெய்யப்பட்டதாகும்..
abdulrahuman says
Anpulla ennudaia christva nanpanukku naan pala vishayangalai telivu padutha ninaikrean enna enraal virutha sethanam patri biple enna koorukirathu aanmika reethiaka proyojanam illai enru biple koori ullatha jesus avarkal mel iraivanun saanthiyum samadanamum nilavattumaka avarkal virutha sethanam seidu aanmika reethiaka udanpadikkai peramal vitu vittaara arthamillamal ularatheerkal ap pavul ean viruthasethanamai nirakarikka vendum ap pavul viruthasethanam seidara ? Ap pavulin poikku vilakka malikkum nanparkale neengal kurippita vasanathilea muranpattu pesukireerkal athai insha allah naam adutha vivathathil telivu paduthuvoam ungalukku avakasam undu ennavenalum ularunga aana naanga pidichi keatkum pothu ithaiye sollunga appo irukku ingalukku naanga enna ungala madri onnume research pannama padichittu aarvakolarula eluduvomnu ninaikiya nanga keatathukku vivathathula unga jerrye pathil kudukka enaku avasiamillainu olarunathu maranthutta
Chander says
The problem is because they read the Bible like they read the Quran. How can a carnal mind infer the spiritual meaning of the texts in the Bible? Besides they read the Bible to find fault. Many of them blindly follow the comments of their scholars such as Mr. Ahamad Deedat, Dr. Zakir Naik. Lastly their minds does not think with reasoning because it has been surrendered hence their doctrine control their thinking
smile says
பொய் சொல்ல அல்லாஹ் அனுமதி அளித்துள்ளான்.
4.பொதுவாக இஸ்லாமியர்கள் மூன்று இடத்தில் பொய் சொல்ல அனுமதியுண்டு என்று ஒப்புக்கொள்ளுவார்கள்
1,மனைவியிடம்
2,போர்களத்தில் உயிரை காப்பாற்றிக்கொள்ள
3,நண்பர்கள் மத்தியில் இணக்கத்தை எற்படுத்த ஆகிய இது மூன்றுக்கும் அல்லாஹ் பொய் சொல்ல நேரடியாகவே நபி மூலம் அனுமதி அளித்துள்ளான்.
5)இதுமட்டும் அல்லாமல் அவர்களிம் ஹஸ்ரத் முகமது அவர்களும் தன் வாழ்நாளில் தனக்கு பிடிக்காத ஒரு மனிதனை கொல்ல தன் சஹாபியிடம் பொய் சொல்ல அனுமதி அளித்து அவனை கொல்ல வைக்கிறார்.பல இடங்களில் தாமாகவே செய்த உடண்படிக்கைகளை முறித்துள்ளார்.
தங்களின் மார்கத்துக்காக பொய் சொல்லுதல் என்ற ஒரு தனி கொள்கையே இஸ்லாமியர்களிடம் உண்டு.அதன் பெயர் ”தக்கியா” என்பதாகும்.
அன்பு சகோதரரே! இவைகளுக்கு குரான் வசனங்களை ஆதாரமாக வெளியிடுங்கள். அதனை வேறு கலரில் தெளிவாக தெரியும்படி போடுங்கள். மேலும் இந்த தக்கியா பற்றி விரிவாக விளக்குங்கள். நமது மக்களுக்கு அவர்கள் பயனடபடுத்தும் அநேக அரபு வார்த்தைகள் புரியாது.
இவங்க முதல்ல ஓதுரத அரபு மொழிய விட்டு தமிழ் அமாழிக்கு மாற வேண்டும். அப்படி இல்லையானால் ஒன்று அல்லாவுக்கு தமிழ் தெரியாதவராக இருக்க வேண்டும். அப்படி இல்லையானால் தமிழ் மொழியில் ஓதினால் அல்லாவுக்கு பிடிக்காததாயிருக்க வேண்டும்.இந்த இரண்டில் எது உண்மை என்பதை அல்லாவின் ஆட்கள் கொஞ்சம் குல்லாவை கழற்றி யோசிக்க வேண்டும்.
Rameesh says
ஹீ ஹீ.. உங்களால BIBLE GOD’S WORD அப்டின்னு ஒரு ஆதாரம் கூட காட்ட முடியல, BIBLE பத்தி பேசறத தவிர மற்ற எல்லா செஞ்சிங்க,
அந்த கழுத உறுப்புக்கு என்ன பதில், அப்பா கூடவே மகள் இருவரும் ஜல்சா பண்ண MATTER KUM பதில் இல்லை, உங்களால ஒரு ஆதாரம் கூட காட்ட முடியலேய் ஏன்,, ஏனென்றால் BIBLE GOD’S WORD இல்லை
Vanan says
Super brother. God bless you.
ஷாபு says
என்ன Rameesh எதுவாவது சோல்லனும் என்னு மட்டும் சோல்லி பைபிளை குற்ற படுத்தவதை மட்டும் முதலில் நிருத்துங்க. எதுக்கும் தகுந்த பைபிள் அதாரத்தை காட்டி பேசுங்க. உங்கள் வலகரத்துக்கு சோந்தமாணவர்களிண் அப்பா மகள் ஜல்சா, கழத உறுப்பு, மாமனார் மருமகள் உரவுகளை கன்டிப்பாக சேய்யலாம் என்று உங்கள் அல்லா போல என்ன எங்கள் பைபிளில் எதாவது வசணம் உள்ளதா என்று குறுங்கள் பார்கலாம்.
abdulrahuman says
Mr.SHABU …….. YAAR ATHARAMILLAMAL PESURATHU NAANGALA NEENGALA UNGA JERRY KEVALAPATTU ODINATHU TERINJUDTHAAN KEATKREENGALA AVVALAVU APASANGALAI ALLI POTTU VIVATHATHULA KEALVI KEATOM NOT ANSWER ! JERRYKITA IRUNTHU VERUM KAATHUDHAAN VANTHUCHI PATHADUKKU UNGA VENGADESH ATHUKKU MELA NAANGA AAPASA VASANATHAIYE SUTTI KAATUNOAM TENSION AAYI AVANGALAVE ULARIKOTTI BIPLE VETHAME ILLAINU SOLLAMA SOLLIKATINAGA (LINK REMOVED) ANTHA APATHANGAL ATHARATHODA POADA PATTURUKKU VENUMNA PAATHUKONGA OK VA APURAM ENNAMO QURAN VIPACHARATHA THOONDUTHU HATHEES VIPACHARATHA THOONDUTHUNULAAM OLARI KOTRAANGA MUTHALLA BIPLEAIYE OLUNGA PADIKKA TERIYALA APM EPDI QURAN HADEESA PADIPANUNGA NEENGA KURIPPITA PUKARI HADEES UNGALUKKUTHAAN VILLANGAMAKA NIKKUTHU INSHA ALLAH NAAN INTHA MADRI ARIVUJEEVIKALUKKU INAIATHALATHAI THANIYAKA THODANGA ULLEAN ATHIL IVARKALIN APATHANGALUM IVARKALIN PATHILUM ONNUKUME UTHAVADU ENRU NIRUPITHU MAKKALUKKU UNMAIAI SOLLA INSHA ALLAH NEENGA BIPLEKU VARINJIKATTI KUDUKKURA ATHUNAI PATHILUM MURANPATODA OLARI IRUKEENGANRATHA NIRUPIPEAN MUDINJA MARUPPU KUDUNGA SAVAAL VIDURAN UNGALUKKU APPURAM 865 KATTURAIKAL ATHARATHODA ULLATHU INSHA ALLAH SAKSHI TIME EPDILAAL MAKKALA EMATHURANUGANRATHA NEENGA PURINJIPEENGA