IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ
You are here: Home / புதுவெளியீடுகள் / ரமலான் நோன்பு நாள் -18 ஜெபக்குறிப்புகள்

ரமலான் நோன்பு நாள் -18 ஜெபக்குறிப்புகள்

July 28, 2013

முஸ்லீம் குழந்தைகளுக்காக ஜெபிப்போம்

உலக முழுவதிலும் பிறக்கும் பிள்ளைகளில் நான்கில் ஒரு பங்கு முஸ்லீம் பிள்ளைகள்

கடந்த வருடம், ஆப்பிரிக்காவிஸ்ன் சஹாரா பாலைவனத்தைச் சுற்றியுள்ள நாடுகளில் ஏழில் ஒரு குழந்தை ஐந்தாவது பிறந்த நாளைக் காண்பதற்;குள் இறந்து விட்டது. பிழைத்த குழந்தைகளுள் 65% மட்டுமே பள்ளிக்குச் செல்லும் வாய்ப்புடையதாய் இருந்தது ஆனால் வெகு சிலரே சென்றனர்.

மிகப் பெரிய சதவிகித முஸ்லீம் பிள்ளைகள் கடும் வறுமையில் பிறக்கின்றன. பல குழந்தைகள் உயிர் பிழைப்பதற்காக பிச்சை எடுக்க தள்ளப்படுகின்றனர், பலர் தவறாகப் பயன்படுத்தப் படுகின்றனர். போதை மருந்துகளைக் கடத்துவதிலும், பாலியல் தொழிலிலும் இழுக்கப்படுகின்றனர். இன்னும் சிலர் குற்றங்கள் புரியும் கூட்டத்திலும், புரட்சி செய்யும் இராணுவத்துடனும் மற்றும் தீவிரவாத குழுக்களுடனும் சேருகின்றனர்.

அநேக தேவனடைய பிள்ளைகள் சிறு பிள்ளைகள் மேல் மனதுருக்கம் நிறைந்தவர்களாய் தெரு விடுதிகள், காப்பகங்கள் ஆகியவைகள் அமைத்து அப்பிள்ளைகளைப் போஷிக்கவும், கல்வி கற்பிக்கவும் நல்ல கிரியைகளை செய்து வருகின்றனர். ஆனால் இது போதாது. இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது.

உலகிலுள்ள 240 கோடி பிள்ளைகளில் நான்கில் ஒரு பங்கு இஸ்லாமிய நாடுகளில் வாழ்கின்றனர். அது கிட்டதட்ட 60 கோடி பிள்ளைகள் ஆவர். உலகமெங்கும் உள்ள

இஸ்லாமியர்களில்  பிள்ளைகள்  40%

ஆவார்கள். இஸ்லாமிய நாடுகளில் வாழும் சில பிள்ளைகள் மாத்திரம் உலகிலேயே பாக்கியசாலிகளாய் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையானவர்கள் மிகவும் ஏழைகள் மத்தியிலும், புறக்கணிக்கப்பட்டவர்கள் மத்தியிலும், சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள் மத்தியிலும் வாழுகின்றனர்.

ஐக்ககிய நாடுகளின் அங்கமான  இஸ்லாமிய உலகின் பிள்ளைகள் என்ற அறிக்கையின்படி.”இஸ்லாமிய நாடுகளில் ஒவ்வொரு

ஆண்டும் 43 இலட்சம் பிள்ளைகள் மரிக்கின்றனர், இலட்சக்கணக்கானவர்கள் ஆரம்பக் கல்வி கூட பயிலுவதில்லை மேலும் சில நாடுகளில் குழந்தைப் பிறப்பின் போது ஆறில் ஒரு பெண் மரித்து விடுகிறாள். இது மிகப் பெரிய தேவையாயிருக்கிறது அல்லவா ?

ஆப்பிரிக்காவின் உயர்ந்த புல்வெளியின் வழியாக நடந்து சென்ற தம்பதியர் ஒருவரைப் பற்றிய கதை சொல்லப்படுகிறது. அவர்கள் இருவரும் தங்கள் மகனின் கையை ஆளுக்கு ஒரு பக்கமாக பிடித்துக் கொண்டு சென்றனர். அவர்கள் அப்புல்வெளியை விட்டு வெளியே வந்த போது அவர்கள் இருவரும் தங்கள் மகனின் கையை மற்றவர் பிடித்திருக்கிறார் என்று எண்ணி அவர்களது கையை விட்டுவிட்டதை அறிந்து கொண்டனர். அவர்கள் அந்த இளைஞனுக்காக மிகவும் சிரத்தையுடன் தேடினர். பக்கத்திலிருந்த கிராம மக்களையும் தேடும்படி உதவிக்கு அழைத்தனர். மூன்று மணி நேரம் கழித்து அந்த தகப்பனார் சொன்னார், “ நாம் கைகளைக் கோர்த்துக் கொண்டு புல்வெளியில் தேடுவோம்” என்று. அவ்விதமே அவர்கள் செய்து பிள்ளையைக் கண்டுபிடித்தார்கள். ஆனால் அதற்குள் காலதாமதமாகி விட்டது. அந்த தகப்பனார்-இன்னும் சீக்கிரமாய் கைகளைக் கோர்த்து இருந்தால் ஒரு வேளை அவனைக் காப்பாற்றியிருக்கலாம் என்று துக்கத்தோடு அலறினார்.

முஸ்லீம் நாடுகளின் பிள்ளைகளை பாதுகாக்கவும், ஆசீர்வதிக்கவும் உழைக்கின்ற மக்களோடு நாமும் நம் கரங்களைக் கோர்த்துக் கொள்ளுவோம்.

ஜெபக்குறிப்புகள்

•    வார்த்தையினாலும் செய்கையினாலும், சுவிசேஷத்தின் செய்தியினை பிள்ளைகளுக்கு எடுத்துச் செல்லும் தேவையை (புலம்பல் 2:19) சந்திப்பதற்கு அதிகமான மக்கள் கைகளைக் கோர்த்துக் கொள்ள முன்வர ஜெபியுங்கள்.

•    இஸ்லாமிய நாடுகளிலுள்ள பிள்ளைகளுக்கு தேவனின் பாதுகாப்பு மற்றும், இரக்கம் கிடைக்கவும் நாம் கைகளைக் கோர்த்துக் கொள்ளுவோம். (நீதி.22:6)

•    தேவையிலுள்ள முஸ்லீம் பிள்ளைகளுக்கு உதவுவதற்கு நாம் எவ்வாறு ஈடுபாடு கொள்ள முடியும் என்பதை தேவன் உங்களுக்குக் காண்பிக்க நாம் இணைந்து ஜெபிப்போம்.

•    இஸ்லாமிய நாடுகளின் அரசாங்கங்களும் அதிகாரிகளும் ஐ.நா சபையோடு இணைந்து தங்கள் பிள்ளைகளின் நல் வாழ்விற்காக
செயல்பட ஜெபியுங்கள்.

Comments

  1. haja says

    August 7, 2013 at 3:26 PM

    assalamu alikkum nikkal yakku eruthu ethai ayvu aethi kal pls give me the proof,vulahathu lai yaa cristin thivira vathi hal than athikam entru ninai ki ren

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network