தாய்வானில் வார முடிவில் இந்தோனேசிய தொழிலாளர் செல்லுமிடம்?
ரமதான் மாதத்தின் முடிவான் இஃதுல் பித்தார் நாள் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வந்தது. தாய்ப்பே பிரதான புகையிரத நிலைய வீதிக்கு முன்பாக ஒன்றுகூடிய பத்தாயிரத்திற்கும் அதிகமான இந்தோனேசிய தொழிலாளர்க்கு அது மிகவும் சந்தோஷமாக ஆரம்பிக்கப்பட்டது. அவாகளின் பிரதான இஸ்லாமிய விடுமுறையை கொண்டாடுவதற்காக மண்டபத்தின் முகப்பிற்குள் அதிகளவாக ஒன்றுகூடினார்கள். இந்த பெரும் கூட்டத்தினரின் கூட்டமானது பிரதான வீதி துணை வீதி மற்றும் அதிகளவு வேகமாக செல்லும் வழித்தெருக்கள் அனைத்தையும் மூடுவதாய் காணப்பட்டது.
பயணிகளின் முறைப்பாடுகளை பெற்றபின்பு தாய்ப்பே புகையிரத நிலைய பிரதான முகப்பின் பெரும்பகுதிகளை வார இறுதிகளிலே மூட ஆரம்பித்தார்கள். அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்துள்ள இந்தோனேசிய தொழிலாளர் மீது அதிகளவு கோபத்துடன் கிரியைகளை காண்பித்தார்கள். ஆகவே செப்டம்பர் மாதம் 12ம் திகதி ஐம்பது தொழிலாளர்கள் அளவிலே புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டார்கள். அவர்கள் ‘இன பிரிவினையற்ற’ பதாதைகளை ஏந்திக்கொண்டு அவர்கள் பொது இடத்திலே ஒன்றுகூடி ‘எமக்கு சந்தோஷப்பட ஒரு இடம் அவசியம்’ என்று கூறியவாறு அவர்கள் நேரடியாக நிலையத்திற்கு சென்று பிரதான முகப்பு வாசலிலே அமர்ந்தார்கள்.
தாய்ப்பேயில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வார இறுதியிலே ஒன்று கூடுவது சாதாரண காரியமாக காணப்பட்டது. அது டையு ஆன் மற்றும் டய்ச்சுங் ஆகிய இடத்திலும் கூட இந்த வழக்கம் காணப்பட்டது. அவர்கள் நிலையங்கள், பூங்காக்கள் மேலும் குறிப்பிட்ட வீதிகளின் நடைபாதைகளிலும் குழுக்களாக காணப்படுவார்கள். அந்த எதிர்ப்புகளுக்காகவே அவர்கள் ஒன்றுகூடுகிறார்கள், ஆனாலும் அவர்களில் யாருமே தங்களுக்காக ஒரு தீர்வை பெறும்படியாக அந்த இடத்திலே ஒன்றுகூடவில்லை.
இன்று தாய்வானிலும் ஹொங்கொங்கிலும் இந்தோனேசிய தொழிலாளர்கள் உள்நாட்டு தொழிலாளர்களாக காணப்படுகிறார்கள். செப்டம்பர் மாதம் 2012 இலே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படியாக 155000 பேர் தாய்வானிலும் 151000 பேர் ஹொங்கொங்கிலும் காணப்படுகிறார்கள். அவர்களுள் பெரும்பாலானோர் கிறிஸ்தவ ஊழியருக்கு தொழிலாளர்களாக காணப்படுகிறார்கள்.
ஒரு சில ஹொங்கொங்கிலே உள்ள திருச்சபைகள் இந்தோனேசிய உள்நாட்டு ஊழியர்கள் என்றழைக்கப்படும் கூட்டத்தினருக்கு ஊழியங்களை செய்கிறார்கள். அவர்கள் இணையத்தளம், சமூகம் கணணி கல்வி மற்றும் மொழிப்பயிற்சியை வழங்கும் பயிற்சி நிலையங்களை நிறுவி உதவி செய்கிறார்கள். மற்றைய கிறிஸ்தவ உதவிகளாக ஹொங்கொங் உட்பட தாய்வான் நமஸ்கார மற்றும் ஐக்கிய ஸ்தானங்கள் மற்றும் தங்குமிட வசதிகள கொண்ட மனைகளினூடாக உதவிகளை செய்கிறார்கள்.
தாய்வானிலே உள்ள இந்துநேசிய தொழிலாளர்கள் மத்தியிலே ஒரு சில கிறிஸ்தவ சபைகள் மாத்திரமே ஊழியஞ் செய்கின்றார்கள்.
ஜெப குறிப்புகள்
ஹொங்கொங் போல தாய்வானிலும் சபைகள் இந்துநேசிய தொழிலாளருக்கு நிலையங்களை ஸ்தாபிக்கும்படியாக ஜெபம் செய்வோம்.
தாய்வானிலுள்ள சபைகள் தங்களுடைய நீண்டகால உள்நாட்டு வேலையாட்களை அன்பினாலே போய் சேர தேவ ராஜ்ய தரிசனத்தை உடையவர்களாக செயற்பட வேண்டுமென்று ஜெபம் செய்வோம்.
எவ்வாறு வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சுவிசேஷம் அறிவித்து அவர்களை சீஷராக்க வேண்டும் என்ற நீண்டகால திட்டங்களை வகுத்து ஸ்தாபனங்களோடு சேர்ந்து சபைகளும் இசைந்து செயற்பட வேண்டும் என்று ஜெபம் செய்வோம்.
இந்துநேசியாவின் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது இருதயத்தை ஆண்டவருக்கு திறக்க வேண்டும் என்று ஜெபம் செய்ய வேண்டும்.
Leave a Reply