சீன அற்புதம்: இயேசு கிறிஸ்துவை தரிசனத்தில் கண்ட இஸ்லாமியர்
4 வருடங்களுக்கு முன்பு நான் ஹாலிட் என்பவை சந்தித்தேன். அவரை சந்தித்த நாள் முதல் அவரது ஜனத்தார் மத்தியிலே ஆண்டவர் வல்லமையாக அவரை பயன்படுத்த போகிறார் என்று அறிந்துகொண்டேன். ரமதான் காலத்திலே ஒரு நாள் இரவு ஹாலித் தம்முடைய கனவை எம்முடன் பகிர்ந்துகொண்டான். அவன், ‘என்னுடைய கனவிலே ஒரு மனிதன் என்னிடமாக வந்து என் கரத்தை பிடித்தான், அவன் யார் என்று நான் அறிந்திருக்கவில்லை ஆனாலும் அவர் நல்லவர் என்று அறிந்திருந்தேன். அவர் என்னை மலைக்கு அழைத்துகொண்டு சென்றார், நான் களைப்படைந்து அவரது கரத்திலிருந்து என்னுடைய கரத்தை இழுத்துவிட்டேன். நான் ஓய்வு எடுக்கும் வரையில் அவர் எனக்காக காத்திருந்தார்,
பின்பு மறுபடி என்னுடைய கரத்தை பிடித்து மேலே நோக்கி நடந்தார். மேலே போய் நாம் எமது எல்லையை அடையும் வரையிலே நான் என்னுடைய கரத்தை அவரிடமிருந்து விலக்கிக் கொள்ள முயற்சித்தேன். ஆனாலும் அவர் அருமையாகவும் அப்போதும் உறுதியாக பிடித்துக் கொண்டார் அதனாலே அவரை விட்டு வெளியேற முடியவில்லை. அந்த நேரத்திலே நான் விழித்துக் கொண்டேன்’ என்றான். ஹாலிட் தன்னுடைய நண்பன் ஒருவனிடம் (அவனும் ஒரு இஸ்லாமியன்) அதன் அர்த்தத்தை புரிந்துகொள்ள உதவி செய்வார் என்று இதனை பகிர்ந்துகொண்டான். அவன் ‘ஹாலித், உன்னுடைய கனவிலே வந்த அந்த மனிதன் இயேசு என்கிற மேசியா’. என்றான். ஹாலித் நினைவுகூர்ந்து ‘இதனை நான் கேட்டவுடன், இது உண்மையானது என்று அறிந்திருந்ததோடு இயேசுவை பின்பற்ற வேண்டிய நேரம் என்று ஆண்டவர் என்னுடன் பேசினார். நான் அவரது கரத்தை தள்ளினாலும் கூட அவர் எப்போதும் எம்முடைய கரத்தை பிடிக்க காத்திருக்கிறார் என்று காண்பித்தார். இப்போது நான் அவரை தள்ளினாலும் கூட அவர் என்னுடைய அருகில் இருக்கிறார் மற்றும் அவர் எனக்கு எப்போதும் அவசியம் என்பதை நான் அறிந்து கொண்டேன். என்னாலே இந்த அன்பை புரிந்துகொள்ள முடியவில்லை ஆனாலும் எனக்கு அது அவசியம் மற்றும் அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது’. ஹாலித் வேதாகமத்தை வாசித்ததோடு தன்னுடைய சமூகத்தினருடன் இந்நற்செய்தியை பகிர்ந்து கொண்டான்.
ஆண்டவர் ஆச்சரியமான காரியங்களை செய்தாலும்கூட சீனாவின் ஹ}யி மக்களிடையே ஹாலித் தற்போது அனுபவிக்கும் காரியத்தை குறித்து அறியாத 10 மில்லியனை காட்டிலும் அதிகமானோர் காணப்படுகிறார்கள். அநேகர் ஆண்டவரை குறித்து அதிகளவு வாஞ்சை மற்றும் கீழ்படிய வேண்டும் என்ற ஆவல் காணப்பட்டாலும் பயத்தினாலே வாழ்கிறார்கள், அதனை எவ்வாறு செய்வது என்று அறியாதிருக்கிறார்கள்.
ஜெப குறிப்புகள்
இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்திலே ஆண்டவர் ஹுய் மக்களுக்கு தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்று ஜெபம்
செய்யுங்கள் (அப்போஸ்தவர் 2:17)
ஹுயிலுள்ள சீன மக்களின் பயமானது அன்பினாலே நிரப்பப்பட வேண்டும் என்று ஜெபியுங்கள் (1 யோவான் 4:18).
இயேசுவை குறித்து ஏற்கனவே அறிந்துள்ள ஹுய் மக்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அதனை
பகிர்ந்தளிக்கக்கூடிய ஞானத்தையும் தைரியத்தையும் கேட்டு ஜெபம் செய்யுங்கள்
(எபேசியர் 6:18-20)
Leave a Reply