அழுத்தத்தின் கீழ் – இஸ்லாமிற்கு பயந்தோர்
பிலால் பயத்துடன் எழுந்திருந்தான். இது தொடர்ந்து ஒரு சில வாரங்களாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆவிக்குரிய உலகிலே ஒரு போராட்டம் நடைபெறுவதை அவன் கண்டதோடு இது தன்னுடைய விதி என்று அவன் தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டான்.அவனாலே தன்னுடைய வேலையிலே கவனம் செலுத்த முடியவில்லை தீவிரமான அவனது
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் ஓடி போய்விட்டான். இதனை இனிமேலும் சுமக்க முடியாது, அவன் கனத்திற்குரிய மக்கா யாத்திரை சென்றுள்ள ஒரு எழுத்தாளரான ஒரு ஷெய்க்கிடம் போனான். பிழையான புரிந்துணர்வுகளை எல்லாம்
விளக்கப்படுத்திய பின்பு, இந்த ஆவிக்குரிய தலைவர் பிலாலுடைய இடுப்பை சுற்றிலும் ஒரு வெள்ளை நிற நூலை கட்டும்படியாக கூறினார்;. மேலும் தலையணையுடன் இணைக்கும்படியாக ஒரு தாயத்தையும் கொடுத்தார்.
பாரம்பரிய இஸ்லாமுடன் கலந்ததாகவே இந்த பயத்துடன் கூடிய இஸ்லாம் காணப்படுகிறது. பெரும்பாலும் இஸ்லாமிய பயிற்சியானது இஸ்லாமிய பயந்த கூட்டத்தின் வடிவத்தை கொண்டுள்ளது. அவர்கள் எப்போதும் ஆவிகளினாலே
சோதிக்கப்படுவதோடு அவர்கள் இந்த ஆவிகளை சாந்தப்படுத்துவதற்காக பல்வேறு வைபவங்களை நடாத்துவார்கள்.
இந்தோநேசியாவிலே ஒரு வீட்டை கட்ட முன்பு ஒரு கோழியை பலிசெலுத்துவது பொதுவான ஒரு வைபவமாகும். கோழியின் தலை கிழக்கு பக்கமாக நோக்கும் விதத்திலே அரிசி மற்றும் வாசனைத்திரவியங்கள் சேர்த்து, பாதம் மற்றும் சிறகுகள் என்பன அத்திவார கற்களுடன் புதைக்கப்படும். கோழியின் இரத்தமானது ஒவ்வொரு கற்கள் மீதும் தெளிக்கப்பட்டு ஒவ்வொரு மூலைக்கல்லின் கீழும் ஒரு காசு வைக்கப்படும். இது நடைபெற்ற பின்பு வீடு கட்டப்படும். இன்னுமொரு பயந்த இஸ்லாமியர் வல்லமை உள்ள இடங்களுக்கு யாத்திரைகள் மேற்கொள்வார்கள். அந்த யாத்திரைகள் பெரும்பாலும் கல்லறையிலே குறிப்பிட்ட கடமைகளை மேற்கொண்டு, குர் ஆனின் ஒரு பகுதி மரித்தவரின் பெயருடன் உச்சரிக்கப்படும். அண்மையிலே உள்ள கட்டிடத்திலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அச் சமாதியின் மீது ஊற்றப்படும். கல்லறை வாசலுக்கு அவர்கள் மலர்களை தூவுவார்கள். அந்த தண்ணீரும் மலரும் அப்புனிதரின் ஆசீர்வாதங்களை உறிஞ்சிக்கொள்வதோடு அதனை அவர்கள் தங்கள் வீட்டிற்கு கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறார்கள். ஒரு நபர் சுகவீனமுற்றிருந்தால் அந்நபர் சுகமடையும்படியாக அத்தண்ணீரை குடிப்பார்கள். ஒரு நபரின் ஆத்துமாவை சுத்திகரித்து கொள்ளும்படியாக அவர்கள் குளிக்கும் தண்ணீரிலே அப்பூவினை தூவுவார்கள். பிலால் தான் முயற்சி செய்தும் இந்த இரா கனவு அவனை வேதனை செய்தது. உடனே அவன் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ சபைக்கு கடந்து போனான். அவனது அனுபவத்திலிருந்து வெளியேற அவனுக்கு சற்று காலஞ்சென்றதோடு இன்று அவன் அந்த பயபக்தியுள்ள கூட்டத்தினருக்கு இறுதியாக தான் பெற்றதான் அந்த சுதந்திரத்தை பற்றி பேசுகிறான்.
ஜெப குறிப்புகள்
இஸ்லாமியர், அவர்கள் கட்டப்பட்டுள்ள இந்த அரண்களிலிருந்து விடுதலைபெற வேண்டுமென்று ஜெபம் செய்யவும். (மத்தேயு 8:16, 10:1, மாற்கு 5:2-13, அப்போஸ்தலர் 16:16-18)
இந்த ஜனங்கள் மேசியாவிடம் வரும்போது, ஆவிக்குரிய உலகிலே அவர்களின் பங்களிப்பிலிருந்து தன்களது உடன்பாட்டை அவர்கள் விலக்கி தங்களது கடந்தகால வாழ்க்கையிலே இருந்து வெளியேற வேண்டும் என்று ஜெபம்
செய்வோம்.
அந்தகாரத்திலே வாழ்கிறவர்களுக்கு சாட்சி பகிர்கிற கிறிஸ்தவ ஊழியர்கள் ‘உலகத்திலுள்ள பிரகாசிக்கிற நட்சத்திரங்களாக” காணப்பட வேண்டும் என்று ஜெபம் செய்வோம் (பிலிப்பியர் 2:15).
ENGLISH :http://www.30-days.net/muslims/muslims-in/asia-east/indonesia/folk-islam-fuels-fear/
Leave a Reply