பெத்லகேமிற்கான ஜெபம்
வாஷிங்டனில் பாலஸ்தீன வி.இ. தலைவர் யாசர் அரஃபாத்தும், இஸ்ராயேல் பிரதமர் யிட்ஷாக் ராபின் அவர்களும் சமாதான உடன்படிக்கையை கைச்சாத்திட்டதும் கைக்குழுக்கினர்;. இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் ஸ்தலமான பெத்லகேம் ஜீவனுள்ள விசுவாசத்திலே வெறுமையாக காணப்படக் கூடுமா? சூழ்நிலை இதுவரை அவ்வாறாக இல்லை ஆனாலும் அது போகிற திசையானது அதற்கு ஒத்ததாக காணப்படுகிறது. காசா உட்பட பலஸ்தீனாவின் எல்லையிலுள்ள ஜனத்தொகையினர் மத்தியிலே உள்ள சனத்தொகை கணக்கெடுப்பின்படியாக கிறிஸ்தவர்களின் ஜனத்தொகையானது ஒரு
சதவீதத்தை காட்டிலும் சற்று அதிகமாகும். அநேக பாலஸ்தீன கிறிஸ்தவர்கள் வெளிநாடுகளிலே வாழ்கிறார்கள். புனித பூமியிலே வாழ்கிறதான கிறிஸ்தவர்கள் அளவற்ற அழுத்தங்களுக்கு முகங்கொடுப்பதினாலே அவர்கள் குடியகழ்கிறார்கள்.
இவ் அழுத்தமானது வெவ்வேறான வழிகளிலே வருகிறது. ஒரு உள்நாட்டு கிறிஸ்தவ மேய்ப்பனுக்கு அரசியல் சூழ்நிலை வேறுவிதமாக காணப்படுகிறது. கிறிஸ்தவர்களாக நாம் சமாதானமாக நாட்டில் வாழவேண்டும் என்று விரும்புகிறோம் ஆனாலும் மத்திய கிழக்கிலே சமாதானத்திற்கான அடையாளத்தை கூட காணமுடியாதுள்ளது. அண்மையிலுள்ள அரபு நாடுகளிலே ஏற்படும் புரட்சிகளின் ஊற்றானது சமாதான எதிர்காலத்தை உருவாக்குவதாய் இல்லை. பொருளாதார
ரீதியில், எமக்கு குறைந்தளவு எதிர்பார்ப்பே உள்ளது.
40 சதவீதமான பாலஸ்தீன கிறிஸ்தவர்கள் வேலைவாய்ப்பற்று காணப்படுகிறார்கள் அதற்கான காரணம் அவர்களுக்கு ஒரு சில தொழில்வாய்ப்பே காணப்படுகிறது. மற்றும் சமுதாயத்திலே சிறிதளவிலே குறிப்பிடத்தக்க விதத்திலே காணப்படுகிறார்கள். ஆவிக்குரிய ரீதியிலே, நாம் இயேசுகிறிஸ்துவை குறித்து அடையாளப்படுத்தாத இரண்டு பிரதான மதங்களினாலே சூழப்பட்டுள்ளோம். அவர்களின் கண்களுக்கு நாம் ‘நாஸ்தீகர்கள்” போல காணப்படுகிறோம் ஆதலால் இலக்கானது துஷ்பிரயோகமும் வேதனையுமாகும். அது போதாமற்போகுமானால், உள்நாட்டு சபைகளானது உலகளாவிய திருச்சபையினாலே கைவிடப்பட்ட உணர்வினால் அதைரியம் மற்றும் பெலவீனப்படுகிறது என்றார். ஆனாலும் ஒரு எதிர்பார்ப்பு இன்னும் காணப்படுகிறது.பாலஸ்தீன எல்லைக்குள் வித்தியாசமான சபைகள் மற்றும் சபை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பாரம்பரிய கிறிஸ்தவர்கள் மத்தியிலே உங்களாலே வெளியரங்கமாக வேலை செய்ய முடியும்.இஸ்லாமியர் மத்தியிலே வேலை செய்வது மிகவும் சவாலானது. சபையானது ஞானமாக வேலை செய்ய வேண்டியது அவசியமாகும். சபைகளானது இயேசு கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசத்தினுள் வருகிறதற்கு உதவுகிறது. பெத்லகேமிலே ஒரு சுவிசேஷ சபையானது ஐந்து குடும்பங்களிலிருந்து 56 குடும்பங்களாக வளர்ச்சியடைந்தது.அவர்களின் மேய்ப்பன் ‘நாம் அதனை கண்டதோடு இங்கே ஜனங்களை ஆண்டவர் இரட்சிக்கிறார் என்று சாட்சி பகிர்வதோடு அற்புதங்கள் இன்றே நடைபெறும் என்று அறிக்கை செய்கிறோம்” என்றார்.
ஜெப குறிப்புகள்
பலஸ்தீன எல்லையிலே காணப்படும் கிறிஸ்தவர்கள் தங்களது சூழலுக்கு உப்பாகவும் வெளிச்சமாகவும் காணப்படும்படி
தைரியப்பட வேண்டும் என்று ஜெபம் செய்வோம்.
இஸ்லாமிய பின்னணியில் இருந்து கிறிஸ்துவின் விசுவாசத்திற்குள் வருகிறவர்கள் மீது ஆண்டவரின் பாதுகாப்பிற்காக
ஜெபம் செய்வோம்.
கிறிஸ்துவின் சரீரத்திற்காக விசுவாசிகளை சீஷத்துவத்திற்குள் கொண்டு வர தேவையான ஞானத்தை போதகர் பெற்று
கொள்ளும்படியாக ஜெபம் செய்வோம்.
ENGLISH :http://www.30-days.net/muslims/muslims-in/mid-near-east/wisdom-in-bethlehem/
Leave a Reply