IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ
You are here: Home / பொதுவானவை / ரமலான் நோன்பு நாள் -12 ஜெபக்குறிப்புகள்

ரமலான் நோன்பு நாள் -12 ஜெபக்குறிப்புகள்

July 22, 2013

தடைகளுக்கு எதிராக ஜெபம் செய்தல் 
 பெரும்பாலும் இஸ்லாமியர் சுவிசேஷத்தை நிராகரிப்பதில்லை, மாறாக அவர்கள் அதற்கு செவிகொடுப்பதில்லை.

நிக் ரிப்கின் எழுதிய ஆண்டவரின் பைத்தியம் என்னும் புத்தகத்திலே இஸ்லாமிய பின்னணியை கொண்ட ஒரு  விசுவாசியான ப்ரமானா என்பவரை குறித்து ஒரு கதையை எழுதியுள்ளார். கிறிஸ்துவுக்குள் வருவதற்கு முன்பு ப்ரமானா தன்னுடைய வாழ்க்கை அழிவிலேகாணப்பட்டதாக உணர்ந்தார். உள்ளூர் இமாம் ஒருவரின் ஆலோசனையின் பேரிலே அவர் தன்னுடைய பிரச்சினைகளுக்கான தீர்வாக மூன்று நாட்கள் உபவாசமிருந்து தியானத்திலே ஈடுபட்டார். மூன்றாவது
நாளிலே ஒரு சத்தம் அவனுடன் பேசி ‘இயேசுவை கண்டடை, நற்செய்தியை கண்டடைவாய்” கட்டுப்பாடுள்ள இஸ்லாமிய நாட்டிலே ப்ரமானா ஒருபோதும் இயேசு கிறிஸ்துவை குறித்து கேள்விப்பட்டதில்லை. இந்த நேரத்திலே ப்ரமானா இயேசு
என்பவர் ஒரு கனியோ அல்லது ஒரு கன்மலையோ ஒரு மரமோ என்று கூட அறிந்திருக்கவில்லை. அத்தொனியானது தொடர்ந்து எவ்வாறு இயேசுவை கண்டடைவது என்ற அறிவுறுத்தல்களை அவனுக்கு கொடுத்துக் கொண்டேயிருந்தது. ப்ரமானா உடனே எழுந்து, இரவு முழுதும் நகரம் முழுவதுமாக நடந்தான், அவன் அத்தொனியின் சத்தத்திற்கு செவி கொடுக்கவேயில்லை. ப்ரமானாவின் பயணம் இருபத்தினான்கு மில்லியன் ஜனத்தாரின் மத்தியிலே மூன்று விசுவாசிகளை மாத்திரம் வைத்திருந்த ஒரு வீட்டை நோக்கி வழிநடத்தியது. இந்த மனுஷன் இயேசு கிறிஸ்துவை குறித்து ப்ரமானாவுடன் பகிர்ந்துகொண்டதோடு அந்த நாளே அவன் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறவனாக மாறினான்.

closed-doors-p19-30-days-prayer-300x225

உபத்திரவத்துடன் பொறுமையுடன் காணப்படும் கிறிஸ்தவர்களை குறித்து கையாளும் உலக நோக்கு பட்டியலில் (World watch list)) முதல் பத்து இடங்களிலே ஒன்பது இஸ்லாமிய நாடுகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. பல்வேறு நாடுகளிலே இயேசு கிறிஸ்துவை குறித்து பேசுவது மிகவும் கடினமான ஒரு காரியமாகும்.
இயேசு கிறிஸ்துவை அவரது நாமத்தினாலே அழைக்கிறவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று வேதாகமம் கூறுகிறது….. மற்றும் அவரை குறித்து கேள்விப்படாமல் எவ்வாறு அவர்கள் அவரை நம்புவார்கள்? (ரோமர் 10:13-14). அற்புதமாக பரிசுத்த ஆவியானவர் ப்ராமானாவை சந்தித்தது போல இஸ்லாமியரை சந்தித்துக்கொண்டுள்ளார். ஆனாலும்
இஸ்லாமியர் இயேசு கிறிஸ்துவை தம்முடைய வாழ்க்கைக்கு பிரயோகப்படுத்த இன்னும் சுதந்திரம் அவசியமாயுள்ளது, மற்றும் அது வேதாகமத்திற்கும் கிறிஸ்தவ சாட்சிக்கு மாதிரியாக வாழவும் வழியமைக்கிறது. சமுதாயத்தாலும் இஸ்லாமிய அரசாங்கத்தினாலும் போடப்படும் தடைகள் நீக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

ஜெப குறிப்புகள்
இயேசு கிறிஸ்துவை பற்றி அறிய முடியாதுள்ள வண்ணமாக உங்களாலே நினைத்து பார்க்கமுடியகிறதா? நற்செய்தியை கேட்காத மில்லியன் அளவிலான இஸ்லாமியர் நித்தியத்திற்கு முகங் கொடுப்பதை உங்களாலே காணக்கூடியதாக  உள்ளதா? நினைத்து உங்களது முகத்தை தாழ்த்தி இயேசு கிறிஸ்துவை குறித்து அறியத்தக்க வாசல்கள் கிடைக்க வேண்டும் என்று ஜெபம் செய்யவும்.
இஸ்லாமிய நாடுகளிலே அடைக்கப்பட்ட வாசல்கள் திறக்கப்பட வேண்டும் என்று ஜெபம் செய்யவும். அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் சமுதாய அழுத்தங்கள் அழிக்கப்பட வேண்டும். வேதாகமம் கொண்டு செல்ல அனுமதி கிடைக்க
வேண்டும் என்றும் அதினூடாக தங்களது மொழியிலே வேதாகமத்தை வாசிக்கத்தக்க
திறனை அனேகர் பெற்றுகொள்வார்கள்.இஸ்லாமிய நாடுகளிலே உள்ள கிறிஸ்தவர்கள்
தொடர்ந்து அந்த நாடுகளிலே வசிக்கத்தக்கதாக
ஆண்டவர் பெலப்படுத்த வேண்டும் என்று ஜெபம்
செய்யுங்கள். (மத்தேயு 5:3-16)

 

english :http://www.30-days.net/muslims/muslims-in/mid-near-east/against-restrictions/

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network