IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ
You are here: Home / பொதுவானவை / ரமலான் நோன்பு நாள் -11 ஜெபக்குறிப்புகள்

ரமலான் நோன்பு நாள் -11 ஜெபக்குறிப்புகள்

July 21, 2013

ஷெய்க் இஸ்லாமியரின் கொன்கானி


உலகம் முழுவதுமாக 200 மில்லியனுக்கும் அதிகமான ஷெய்க் இஸ்லாமியர் வாழ்கின்றனர் அதிலே மூன்றில் இரண்டு பகுதியினர் இந்தியாவிலே வாழ்கின்றனர். ஏனையோரில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் வங்காளதேசத்தில் வாழ்கிறார்கள். மத்திய இந்தியாவின் பிரதேசத்திலே ஷெய்க் இஸ்லாமியர் சுன்னி இஸ்லாமியரின் பெரும்பகுதியை  உள்ளடக்கியவர்களாக வாழ்கிறார்கள். இந்தியாவின் மாநிலமான கோவாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும், மேலும் ஆய்வினூடாக கொன்கானி மொழியை பேசும் ஷெய்க் இஸ்லாமியர் மேற்கு இந்தியாவில் மும்பாய் முதல் கோவா வரையிலான கரையோரப்பகுதியிலே வாழ்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் மொத்த சனத்
தொகையானது ஏறத்தாழ 2 மில்லியனாகும். ‘ஷெய்க்” என்னும் பதமானது அராபிய வம்சத்திலே வந்தவர்களுக்கு    மாத்திரமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனாலும் தற்போது அது இரண்டு மூன்றுதலைமுறையினருக்கு முன்பாக மத்திய மற்றும் தென் இந்தியாவிலிருந்து தாழ்வான இந்து பின்னணியிலிருந்து மனந்திரும்பிய மற்றும் வட
இந்தியாவிலே சுஃபி இஸ்லாமிய மிஷனரிகளின் வேலையினிமித்தம் மனந்திரும்பிய உயர் இந்து குலத்தோரை குறித்தும் குறிப்பிடப்படுகிறது. 

 

crowded-fruit-market-p18-30-days-prayer200x389

சிலவேளை இந்திய ஷெய்க் சமூகத்தினர் அவர்களை சூழ உள்ள ஏனைய இஸ்லாமியரை
காட்டிலும் வித்தியாசமானவர்களாக உள்ளதோடு, பெரும்பாலும் அவர்கள் தங்களுக்குள் சம்பந்தம் கலக்கிறர்கள். அது உப ஷெய்க் குழுக்களிடையே வித்தியாசமாக உள்ளது, ஆனாலும் ஒவ்வொரு எல்லையிலும் உள்ள மொழிவழக்கமானது அவர்களை வேறுபடுத்த உதவி செய்கிறது. மேலும் எல்லா ஷெய்க் மற்றும் சுன்னி இஸ்லாமியரிடையே அவர்களின் பாரம்பரிய பழக்கவழக்கத்தினிடையே வித்தியாசமுள்ளது. மொத்தமாக, இந்தியாவிலுள்ள இஸ்லாமியர் ஆழமான தியானத்தினூடாக பெற்றுக்கொள்ளலாம் என்பதற்கான ஆதாரங்களை உடையவர்களாக காணப்படுகிறார்கள். கனத்திற்குரிய இஸ்லாமிய புனிதர்கள் மிகவும் பொதுவாக காணப்படுவதோடு பயனற்ற விதத்திலே அவர்களின் சவச்சாலை அலங்கரிக்கப்பட்டு காணப்படுதல் இந்துக்களுக்கும் நமஸ்கரிக்க, பக்தி இசைகளை வாசித்தல் மற்றும் புனிதருக்கு பாடல் போன்றவற்றை மேற்கொள்ள வழியமைக்கிறது. தியானமானது ஒரு ஆழமான உணர்வாகும். ஒரு பரந்த நோக்கிற்காக எல்லா மதங்களின் மார்க்கமும் அல்லாவை நோக்கியே செல்கிறது என்று சுஃபியின் போதனைகள் போதிக்கின்றன. கொன்கானி மொழியிலே வேதாகமமோ அத்துடன் சம்பந்தப்பட்ட எழுத்தாக்கம் எதுவும் இல்லை, பாரம்பரிய கொன்கானி மொழியிலே வேதாகமம் காணப்படுகிறது. உருது மற்றும் ஹிந்திமொழிகளில் பேசுகிறவர்களுக்கு வேதாகமம் மற்றும் இயேசுவின் திரைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன.
ஜெப குறிப்புகள்
கொன்கானி பேசும் ஷெய்க் மக்களிடையே கிராமங்கள் தோறும் போய் இயேசு கிறிஸ்து -வை அறிக்கை செய்து மீன்பிடிக்கத்தக்கதாக ஆண்டவர் வேலையாட்களை ஆயத்தம் செய்யும் படிக்காய் ஜெபம் செய்வோம்.
அண்மையிலே விசுவாசத்திலே இணைந்த விசுவாசிகளுக்காக ஜெபம் செய்வோம் அவர்கள் கடினத்தை மறந்து இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள கிருபை மற்றும் அறிவிலே வளரவும் தைரியமாக தங்களது விசுவாசத்திலே வளரவும் வேண்டுமென்று ஜெபம் செய்வோம்.

புதிய விசுவாசிகள் தங்களது சமூகமான கொன்கானி ஷெய்க் உள்ளே சீடர்களை உருவாக்க தங்களை ஆயத்தப்படுத்த
வேண்டும் என்று ஜெபம் செய்வோம்.
தற்போது உள்ள பழைய விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் தங்களது புதிய சகோதர சகோதரிகளை அன்பினாலும் திறந்த கரத்தினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜெபம் செய்வோம்.

 

 

ENGLISH :http://www.30-days.net/muslims/muslims-in/asia-south-central/india/shaikh-muslims-of-india/

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network