தமஸ்கு சிரியா – இரத்த பூமி
ஐரோப்பிய பாராளுமன்றம் சிரியாவில் நடந்த மனித உரிமை மீறலால் பொருளாதார உதவிகளை தடை செய்தது.அது 1974 ம் ஆண்டு நான் சுவிட்சர்லாந்திலிருந்தும் என்னுடைய மனைவி பாகிஸ்தானிலிருந்தும் வந்து பெய்ரூட்டில் சந்தித்தோம். நாம் வேதாகம உலகமான யோர்தான், லெபனான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலேசுற்றுப்பயணத்தை மேற்கொண்டோம். நாம் தமஸ்குவிலே இருக்கும் போது அந்த இரவு கனவு வந்தது. ஒவ்வொரு பூமியும் இரத்தத்தினாலே உறைந்து ‘எவ்வளவு காலம்?” என்று கதறுவதைப்போல கண்டேன். நான்கு வருடங்களுக்கு முன்பு நான் இதனை என்னுடைய சிரிய நாட்டு சகோதரனுடன் பகிர்ந்துகொண்டேன். அவன் இது கடந்த காலத்தை குறித்து சொல்லப்பட்டது என்றான். அப்படியாக உலகத்தின் ஆதிகால குடியேற்றம் நிறைந்த ஸ்தானமாக தமஸ்கு காணப்படுகிறது. இது அளவற்ற ரீதியிலே படையெடுப்புகள் மற்றும் தீய விடயங்களினூடாக நடாத்தப்பட்டது. இந்த கனவானது எதிர்காலத்தை குறித்து கூறுகிறது என்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை.
கணக்கெடுப்பின்படியாக 2012 ஆம் ஆண்டு இறுதியிலே ஏற்பட்ட போராட்டத்தில் ஏறத்தாழ 40,000 பேர் அளவிலே கொல்லப்பட்டார்கள். நேற்று, நாம் மறுபடி சந்தித்தோம். அவரது ஊழியப்பணியகம் இந்த இரத்தம் சிந்தும் நாட்டிற்காக ஜெபத்தை விஸ்தாரப்படுத்தும்படியாக அழைத்திருந்தது. அவர்என்னுடைய சொப்பனமானது ஏறத்தாழ 40 வருடங்கள் கழிந்துவிட்டது, அவர் மேலும் ‘சுதந்திர போராளிகள்” என்றழைக்கப்படும் வாஹாபிஸ், அல்கைதா போன்ற குழுவினராலே ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இலக்கு வைக்கப்பட்டது மாத்திரமல்ல சிதறடிக்கப் பட்டார்கள் என்று கூறினார். இதனிடையே, அவரது தந்தை, தமஸ்குவின் கீழ்பகுதியிலே ஒரு மேய்ப்பனாக உள்ளார் அவர் தம்முடைய மந்தையை விட்டு விட்டு செல்வதை நிராகரித்துவிட்டார் ஆச்சரியமாக, ஆண்டவர் ஒரு புதிய காரியத்தை செய்கிறார். கிறிஸ்தவர்கள் அவர்களது சபையானது அதிசயமாக கிறிஸ்தவர்களினாலே நிறையப்பெறுவதை கண்டு அதிர்ச்சியுற்றனர். முக்காடுடன் கூடிய இஸ்லாமிய பெண்கள் தங்களது கணவன்மார் உட்பட பிள்ளைகளுடன் நூற்றுக்கணக்காக ஆண்டவரை நோக்கி பயணித்தார்கள். வஞ்சகப் புகழ்ச்சியான சிரியாவானது அயல் நாடான (லெபனானோடு) கிறிஸ்தவர்கள் உட்பட ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ளது. அரசியல் படுகொலைகள் நடாத்தும் அவர்கள் என்ன விதைத்தார்களோ அதனை அறுக்க வேண்டும்.மெய்யாகவே ஆண்டவர் தேசங்களை அசைக்கிறார்.மத்திய கிழக்கிலே நடந்துகொண்டு செல்லும் இத்தொடர் போரிற்கு ஒரு முடிவு உள்ளதா? இயேசு கிறிஸ்து சமாதான பிரபு. அவரை ஜனங்கள் நிராகரிக்கும் அளவிற்கு அங்கே சமாதானம் இல்லை. நிச்சயமாகவே, ஆண்டவர் மனிதனுடைய முடமாவதற்கு காரணரல்ல, ஆனாலும் தீமையினின்று எவ்வாறு நன்மையை கொண்டுவருவது என்பதை அவர் அறிவார். அதனை நாம் சிரியாவிலே இன்று காணக்கூடியதாக உள்ளது.
ஜெப குறிப்புகள்
ஆளுநர்களிடமிருந்து மதச் சுதந்திரத்தினூடாக சமாதானம் வர வேண்டும் என்று ஜெபம் செய்யுங்கள்.
சிரியாவிலே தங்குகிறோம் என்று முன் வந்த கிறிஸ்தவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஜெபம் செய்யுங்கள்
அவர்களின் சாட்சியானது அவர்களை சூழ உள்ள அயலகத்தாருக்கு புதிய நோக்கை பெற்றுகொள்ள உதவி செய்ய வேண்டும் என்று ஜெபம் செய்வோம்.
சிரியாவினுள் வேதனைப்படுகிற மற்றும் தற்போது அகதிகளாக உள்ளவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து ஜெபிக்கிற மற்றும் உதவி செய்வோருக்காக ஜெபம் செய்வோம்…இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதனையும் செய்வீர்களானால்…” (மத்தேயு 25:40)
ENGLISH: http://www.30-days.net/muslims/muslims-in/mid-near-east/damascus-syria/
Leave a Reply