IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ
You are here: Home / பொதுவானவை / ரமலான் நோன்பு நாள் -9 ஜெபக்குறிப்புகள்

ரமலான் நோன்பு நாள் -9 ஜெபக்குறிப்புகள்

July 19, 2013

தொழிற்சார் நகர் வன்கூவரிலுள்ள இஸ்லாமியர் – வளரும் காலம்


 கொலம்பியா என்பது மிகப்பெரிய கடற்துறைமுகமும் கனடாவின் மூன்றாவது பெரிய நகரமுமாகும். அதன் வட பகுதி மலைகளிலே உச்சியிலே உணவு விடுதிகள் உள்ளதோடு 2010 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தும் தகுதியை பெற்ற ஸ்தானமாகவும் உள்ளது. வன்குவர் நகரமானது கனடாவின் அதிகளவு இனமக்கள் மற்றும் மொழியை பேசுவோர்  வாழும் ஸ்தானமாகும். இங்கே வாழ்பவர்களிலே 40% (2006 ன்படி)ஆங்கிலம் அவர்களின் முதல் மொழியல்ல. 1931 ஆம் ஆண்டு இஸ்லாமியரின் குடி புகல் வான்குவரில் காணக்கூடியதாக இருந்தது. 1970களில் ஆபிரிக்காவிலிருந்து இஸ்லாமிய பெரிய குழுக்கள் வந்து இறங்கினார்கள். 1980 களிலே வான்குவர் நகரிலே வெள்ளிக் கிழமை தொழுகைக்காக ஒரு இடம் மாத்திரமே காணப்பட்டது. இன்று, பதினைந்திற்கும் அதிகமான தொழுகை ஸ்தலங்கள் காணப்படுகின்றன. கனடாவின் 2001 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படியாக வன்குவர் நகரத்தின் மொத்த சனத்தொகை 1.99 மில்லியனாக காணப்பட அதில் இஸ்லாமியர் 52,600 பேர் அளவிலே காணப்பட்டார்கள் இதனிடையே 2006 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படியாக பொதுவாக 2.1 மில்லியன் சனத்தொகை காணப்பட அதிலே ஏறத்தாழ 90,000 பேர் அளவிலே சனத்தொகையினர் காணப்படுகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. (2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பானது ஒரு தேச அளவீடாக எடுக்கப்படவில்லை). இந்த வேகமான இஸ்லாமிய சனத்தொகை அதிகரிப்பிற்காக காரணமாக குடிப்புகுதலின் எண்ணிக்கை அதிகரிப்பு, அகதிகள் மீள குடியேற்றம் செய்யப்பட்டுள்ளமை மற்றும் அதிகளவு பிறப்பு வீதம் என்பனவற்றை குறிப்பிட முடியும். இன்று கனடாவிலே பிறந்த இஸ்லாமியர் ஈரான், பாகிஸ்தான், இந்தியா, கிழக்கு ஆபிரிக்கா, ஈராக்கு, எகிப்து, மத்திய ஆசியா, பிஜி, ஆப்கானிஸ்தான்,பொஸ்னியா, கொவொவோ, சர்பியா, இலங்கை,அமேரிக்கா, இந்தோனேசியா, பிரித்தானியா இன்னும் பல நாடுகளிலே இருந்து வந்துள்ளவர்களுடன் கலந்துள்ளனர்.

canada-protests-p16-30-days-prayer185x295

பஞ்சாபியர்கள் மற்றும் ஈரானியர்கள் என்போர் இரண்டு பிரதான பெரிய குழுக்களாவார்கள். மேலும் சவுதி அரேபிய அரசாங்கத்தாலே 2007 ஆம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டுள்ள ஒரு விசேட புலமைப்பரிசில் நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வான்குவர் நகரிற்கு வருகிறார்கள். ரமழான் காலத்திலே நூற்றுக் கணக்கானோர் வான்குவார் பள்ளிவாசலண்டையிலே இஃப்தார் (உபவாசத்தை நிறைவு செய்தபின்பு உண்ணும் மாலை உணவு), தாராவி (இரவிலே இஸ்லாமியரினாலே நடாத்தப்படும் மேலதிக ஒன்றுகூடல் தொழுகை நேரம்) மற்றும் ரமழானின் ஆவியின் பெலத்தை பெற்றுக்கொள்ளும்படியாக ஒன்று கூடுவார்கள். இந்த மாணவர்களில் பெரும்பாலானோர்  இருபது வயதிலே காணப்படுவதோடு அநேகருக்கு தங்களது வீட்டை துறந்து ரமழான் கொண்டாடும் முதல் அனுபவமாக இது காணப்படும். வான்குவரிலே உள்ள பள்ளிவாசலுக்குள் நடப்பது என்பது ஐக்கிய நாட்டு மண்டபத்திற்குள் நடப்பதை போன்று காணப்படும். பல்வேறுபட்ட வித்தியாசமான நாடுகளிலிருந்து இஸ்லாமியர் சேர்ந்து ஆங்கிலத்தை தங்களது பொதுவான மொழியாக கொண்டு தொழுகை செய்வது அருமையானதொரு விடயமாகும்.

ஜெப குறிப்புகள் 

குடிபுகுந்து அல்லது அகதிகளாக வான்குவர் நகரிற்குள் வருகிறவர்களுக்கு அன்பு, கரிசனை,மற்றும் உதவிகளை கிறிஸ்தவ சமூகத்தினர் செய்ய வேண்டும் என்று ஜெபம் செய்வோம்.

இஸ்லாமியருடன் சேர்ந்து செயற்பட வேண்டும் என்ற தேவஞானம் மற்றும் வழி நடத்தலை கிறிஸ்தவ சமூகத்தினர் பெற வேண்டும் என்று ஜெபம் செய்வோம்.

இளம் இஸ்லாமிய சந்ததியினர் ஆண்டவரை தேடும் நிலைக்குள் வர வேண்டும் என்று
ஜெபம் செய்வோம்.

 

ENGLISH :http://www.30-days.net/muslims/muslims-in/america-north/muslims-in-vancouver/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network