IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

ரமலான் நோன்பு நாள் -8 ஜெபக்குறிப்புகள்

July 18, 2013

 

கிறிஸ்தவ வானொலி ஊழியம் இஸ்லாமிய உலகில் பயன்ப்படுவதேன் ?

 

இலத்திரனியல் ஒலிபரப்புகள் கணணி மூலமாக அலைவரிசை ஒலி அலை தொழிநுட்ப சாதனங்கள் என்று வளர்ந்துள்ள இந்த காலத்திலும் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு பெரும் பங்களிப்பாக வானொலி ஏன் காணப்படுகிறது? அது சரளமாக தனித்துவமாக தாக்கத்துடன் செய்தியை கொடுக்க வல்லதுடன், செலவின்றி புவியியல் அமைவு, கல்வி நிலை, பொருளாதார நிலையை துறந்து அதிகளவுசதவீதத்துடன் கொண்டு செல்ல வல்லது.உதாரணமாக, மத்திய ஆசியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் தங்களது விசுவாசத்திலே மிகவும் கட்டுப்பட்டவர்களாயுள்ளார்கள். சில இடங்களிலே  வெளிநாட்டு மிஷனரிகள் வெளித்தள்ளப்பட்டனர். உள்நாட்டு திருச்சபையானது வானொலியின் தாக்கத்தினாலே தொடர்ந்து முன்னேறி சென்றது.வட ஆபிரிக்காவிலே, வானொலிப்பெட்டிகள் நாடு முழுவதுமாக காணப்படுகிறது. இது நகர்புறங்களிலும் பின்தங்கிய கிராமங்களிலே உள்ள மக்களுக்கு தங்களது மொழியிலே செய்திகளை கேட்பதற்கு உதவி செய்துள்ளது.எழுதப்பட்ட வாக்கியங்களுடன் சேர்க்கும்போது வானொலியானது சவால்களுக்கு முகங்கொடுக்கிறது. உதாரணமாக, துர்க்மெனிஸ்தானிலே முதியோர் தலைமுறையினர் சிரிலிக் அரிச்சுவடியைபயன்படுத்துகின்றனர் ஆனாலும் இளம் சந்ததியினர் லத்தின் அரிச்சுவடியை பயன்படுத்துகின்றனர்.வெளிநாடுகளிலே உள்ள துர்க்மெனியர்கள் அரபிக், ஃபார்சி போன்ற மொழிகளை வாசிப்பர்.

vital-radio-ministry-p15-30-days-prayer300x234

வானொலி ஒலிபரப்புகள் தங்களது மொழியிலே நிகழ்ச்சிகளை கேட்கத்தக்க வசதிகளை ஏற்படுத்திகொடுத்துள்ளன.  ஆபிரிக்காவிலிருந்து ஆசியாவை நோக்கும்போது இஸ்லாமிய உலகமானது முழுமையாக கலாச்சார திருப்பத்தை கொண்டுள்ளது, மொரேக்கியர்களின் வாழ்க்கை முறையானது இந்தோனேசியர்கள் அல்லது சிரியரின் வாழ்க்கை முறையை காட்டிலும் வித்தியாசமாயுள்ளது. ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கும் போது வானொலி ஊழியங்களானது  கலாச்சார வேறுபாடுகள் மற்றும் மாற்றங்கள் போன்றவற்றை பெற்றுகொள்ளும். மலைப்பிரதேசம் அல்லது பாலை வனப்பகுதியிலே ஏற்படக்கூடிய மின்தடைகள் நிமித்தம் சூரிய சக்தியில் இயங்கும் வானொலிகள்  வேதாகம காரியங்களை  ஒலிபரப்பு செய்வதிலே மிக முக்கிய இடம் வகிக்கின்றன. ஆதிகாலத்திலே மிஷனரிகள்  அச்சிடப்பட்ட வேதாகம  உடமையை கொண்டுசெல்ல கடினமாக காணப்பட்ட எல்லைகளை கடந்து  வானொலி அலைகள் செல்லக்கூடியன.  கிறிஸ்துவுக்காக இஸ்லாமிய உலகை போய்  அடையும் பணியிலே இவ்வாறாக  வானொலிகள் பாரிய பங்களிப்பை  அளிக்கின்றன.    மற்றைய அணுகு முறைகளை காட்டிலும் வானொலியானது மிகவும் இலகுவானதாக  உள்ளது.

ஜெப குறிப்புகள்

அவசியத்துடன் காணப்படும் ஜனங்களை  வானொலி நிகழ்ச்சிகள் போய் சந்திக்க வேண்டும் எனறு ஜெபம் செய்யுங்கள்.

உள்நாட்டு வானொலி தயாரிப்பாளருக்காக  ஜெபம் செய்வோம். அவர்கள் தைரியப்பட வேண்டும் என்பதோடு  பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாக.

சத்தியத்தை தேடுகிறவர்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்வதோடு அவருள் வளரும் படியாக ஜெபம் செய்வோம்.

 

ENGLISH :http://www.30-days.net/muslims/muslims-in/asia-caucasus/vital-radio-ministry/

 

மற்றவர்கள் கூறுவது என்ன?-சிறு சாட்சிகள்

”

மத்திய கிழக்கில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத ஒவ்வொரு நபருடைய கரத்திலும் வார்த்தையின் ஒரு பகுதியை வைப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விடயமாகும். இஸ்லாமிய நாடுகளில் அநேகருக்கு வேதாகமம் என்பது புதியதும்  புத்துணர்வானதொன்றாகும். ஒரு கிறிஸ்தவ பிண்ணனியோ  உலக நோக்கோ காணப்படவில்லை ஆனாலும் செய்தியை அவர்கள் கேட்டதும் அதற்கு தங்களை மாற்றிக்கொள்ளும் விதமானது ஆச்சரியமாக உள்ளது. இவ் விடயமானது பின்தங்கிய இடங்களிலே உள்ள ஏழைகளுக்குள் மிகவும் யதார்த்தமானதாக உள்ளதோடு அனேக திரவிய  சம்பன்னங்கள் நிறைந்த பெரிய நகரங்களிலே அது சற்று குறைவாக உள்ளது. சத்தியத்தை ஜனங்கள் கேட்டவுடன் அதனை முழு மனதோடு கட்டியணைத்துக் கொள்ளவும் முழு இருதயத்தோடு ஆண்டவருக்காக வாழவும் தங்களை ஆயத்தம் செய்துகொண்டார்கள். அதனாலேயே புதிய கிறிஸ்தவர்களாகிய நாம் வேதாகமத்தை பெற்றுகொள்ள வாஞ்சிக்கிறோம்…

” கடந்த வருடங்களை காட்டிலும் இங்கே இந்த மத்திய கிழக்கு நாட்டிலே நாம் அநேகர் கிறிஸ்துவுக்குள் வருகிறதை காண்கிறோம், இவற்றுள் அநேகர் எம்முடைய தலையீடின்றி தானாக இரட்சிக்கப்பட்டுள்ளார்கள். ஆண்டவர் மத்திய கிழக்கு உலகத்திலே செய்கிற காரியத்தை குறித்து நாம் மிகவும் பிரமிப்புடன் காணப்படுவதோடு அது அதிகளவு ஜெபத்தினாலேயே நடைபெற கூடியதாக உள்ளது, அது எமக்கு பதிலாக ஆண்டவரின் செயற்பாடாகும். ‘என்னுடைய நண்பன் ஒருவர் யோவான் சுவிசேஷத்தை கொடுத்ததோடு, நான் வாசித்த முதலாவது அதிகாரம் மேசியா தேவ ஆட்டுக்குட்டியானவர் என்று வலியுறுத்தப்பட்டு காணப்பட்டது. உடனே இஸ்லாமியத்தை குறித்து காணப்பட்ட ஆத்தும இரகசியம் மூடப்பட்டது. பலியான தேவனுடைய ஆட்டுக்குட்டியானவர் என்பதை குறித்து காண்பிப்ப தற்காக மில்லியன் கணக்கிலான் மிருகங்கள் பலிசெலுத்தப்பட்டதை நான் அறிந்திருக்கிறேன்.’என்னுடைய இஸ்லாமிய நண்பன் அண்மையிலே புதிய ஏற்பாட்டை உடனடியாக வாசித்ததோடு உடனே இயேசு கிறிஸ்துவின் வம்சாவளியை குறித்து வாசிக்க ஆர்வம் கொண்டான். நான் அர்த்தப்படுத்திய பகுதியிலே முதலாம் அதிகாரத்தின் முதல் 17 வசனங்களும் பெரும்பாலும் மேற்கத்திய உலகின் தாற்பரியங்களை தவிர்த்துள்ளது. ஒரு இஸ்லாமியனுக்கு இந்த வசனங்கள் மிகவும் பிரதானமானவை அவர்கள் இந்த குடும்பத்தையும் சரித்திரத்தையும் மத்தேயுவை ஒரு பிரதானியாக காண்பிக்கும்போது அவரது நம்பகத்தன்மை ஆம் என்றுள்ளது – அது மிகவும் உற்சாகமுள்ளது! அவனுக்கு தாவீதின் மற்றும்  ஆபிரகாமின் குமாரனாகிய இந்த இயேசு கிறிஸ்து யார் என்று முதலாவது அறிந்துகொள்ள வேண்டிய தாக காணப்பட்டது. இன்று அவர் ‘மூடப்பட்ட” இஸ்லாமிய நாடுகளுக்குள் ஊழியத்தை நடாத்த ஒரு பிரதான பங்களிப்பை வழங்கி வருகிறார்.

‘நான் விடுதலையாகிவிட்டேன், கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாமியத்திற்கும் இடையே எவ்வித உடன்பாடும் இல்லை என்பதை நான் கண்டுகொண்டேன்.ஆரம்பத்திலே குர் ஆன் மற்றும் ஹதீஸ் இடையே அதிகளவு விதிமுறைகளை பின்பற்ற வேண்டி இருந்தது, ஆனாலும் தற்போது ஆண்டவ ரோடு நெருங்கிய உறவை வைத்துள்ளேன். அது மிகவும் வித்தியாசமானது”.

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network