IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

ரமலான் நோன்பு நாள் -7 ஜெபக்குறிப்புகள்

July 17, 2013

 மலாவியின் லிவிங்ஸ்டன் /மடோனாக்கள்?  

வாக்காளர்கள் சுதந்திர தேர்தலில் மலாவி காங்கிரஸ் கட்சியை நிராகரித்தார்கள். அதன் தலையெழுத்தை டாக்டர்.லிவிங்ஸ்டன் மாற்றினார். இன்றைய கிறிஸ்தவர்கள் மறுபடி இதனை நிகழ்த்துவார்களா? தென் ஆபிரிக்க நாடுகளில் சம்பியாவின் கிழக்கு பகுதியிலே, உலகத்திலே முடிவற்ற ரீதியில் பசியாலும் நோயினாலும் அல்லல் படுகிற ஏழ்மையான நாடுகள் காணப்படுகின்றன. மலாவி என்னும் நாடானது பொப் இசைபாடகியான மடோனாவினாலே “எழுப்பப்படுகிற மலாவி” என்னும் திக்கற்றோருக்காக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சியின் போது உலகத்தாருடைய அவதானத்தை ஈர்த்துக்கொண்டது. மலாவி மெய்யாகவே ஒரு அழகான நாடாகும் சுற்றுலாபயணிகள் அந்நாட்டு மக்களின் நட்புறவை கண்டு மிகவும் சந்தோஷப்படுவார்கள். இயற்கையை நேசிப்பவர்கள் பூங்காக்களை கனப்படுத்துவதோடு மலையேறுதல் மற்றும் பீடபூமியிலே தங்கியிருத்தல் போன்ற காரியங்களிலே சந்தோஷப்படுவார்கள். மற்றவர்கள் வித்தியாசமான ஜனக்கூட்டத்தினர் மற்றும் அவர்களின் சுவாரஸ்யமான வரலாற்றை குறித்து மிகவும் மகிழ்வதோடு, தங்களது சொந்த நாடான மொசாம்பிக் நகரிலிருந்து மலாவிக்கு இடமாற்றம் செய்த ஜாம்பவான்களான உள்நாட்டு ஆளுனர்களான சுல்தான் சன்சிபார் மற்றும் மிகவும் பிரபல்யமான யாவோ போன்றோரின் சரித்திரம் மிகவும் வியக்க வைத்தது.

water-for-malawi-30-days-net

பாரிய கொடூரம்

இன்னும், மலாவியிலே வாழ்க்கை முறையானது மிகவும் கடினமானது. சராசரி வாழ்நாள் காலமானது 52 வருடங்களாகும். வளமான எதிர்காலம் உள்ளது என்ற ஒரு சிறிய எதிர்பார்ப்பு மலாவியர்கள் மத்தியிலே இன்னும் காணப்படுகிறது. ஜனங்கள் குடும்பத்தை மையமாக வைத்துள்ளார்கள். எவ்வாறு குடும்ப அங்கத்தவர்களை வித்தியாசமான முறையிலே உபசரிப்பது என்று நன்கு அறிந்தவர்கள். அநேகர் உணவு
பயிர்களை வளர்க்க அல்லது புகையிலை தேயிலை அல்லது சீனி போன்றவற்றை வளர்க்க போராடுகிற விவசாயிகள் ஆவார்கள். இந்த கடினமான வேலையிலே பிள்ளைகளும் பங்குபற்றுகிறார்கள்.
டாக்டர் லிவிங்ஸ்டனின்  கூற்றுப்படி 

 

ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாக மலாவியிலே முதலாவது இஸ்லாமியர் தங்களது காலடியை பதித்தனர். கிறிஸ்தவ மிஷனரிகள் அங்கு வந்து இறங்கிய போது டாக்டர் டேவிட் லிவிங்ஸ்டன் அங்கு வந்த போது இஸ்லாமியர் தலைமைத்துவத்திலே ஏற்கனவே காணப்பட்டனர்.

கிறிஸ்தவத்தின் தாக்கத்தை துறந்து ஆவி, மூதாதையர் வழிபாடு, கண்கட்டி வித்தையில் நம்பிக்கை, இரகசிய சமுதாயம் என்பன மலாவியின் தினந்தோறும் வாழ்க்கையிலே பிரதான இடத்தை வகிக்க ஆரம்பித்தது.
எண்ணையினாலே கிடைக்கும் பணத்தை செலவு செய்யக்கூடிய இஸ்லாமிய அமைப்புகள் மலாவியை
மாற்றுவதற்காக நிலங்களை வாங்கி நாடு முழுவதும் பள்ளிவாசல்களை இஸ்லாமிய ஸ்தாபனங்களை ஸ்தாபித்தார்கள். தென் ஆபிரிக்க நாடுகள் அனைத்துக்கும் இஸ்லாத்தை கொண்டு செல்லக்கூடிய இலக்கு ஸ்தானமாக மலாவி இஸ்லாமிய மிஷனரிகளின் இலக்காக காணப்பட்டது.

ஜெப குறிப்புகள்
அனேக மலாவியர்களுக்கு தகவல்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் பிரதான ஊடகம் வானொலியாக காணப்படுகிறது. மலாவி வானொலி கூட்டுத்தாபனம் அவர்களின் பிரதான ஊடகமாக காணப்படுகிறது. தொலைகாட்சி 1999ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது கிறிஸ்தவ நிகழ்ச்சிகளுக்காக ஜெபம் செய்வோம்.

சுத்தத்தை கொண்டு வர மருத்துவ ஊழியங்கள், ஜனங்கள் சாதாரணமாக கடினப்படாதபடி நீர் பெற்றுகொள்ள நீர் வசதிகள் மற்றும் இத்திட்டங்கள் ஆண்டவரை பற்றி பேச வேண்டும் என்றும் நடைமுறை திட்டங்களுக்கு வாசல்கள் திறக்கப்பட
வேண்டும் என்றும் ஜெபம் செய்வோம்.
முற்போக்குடைய இஸ்லாமிய கூட்டத்தினருக்காக ஜெபம் செய்வோம். யாவே விசுவாச சபைகள் மற்றும் அன்பான வாசல்கள் திறக்கப்படும்படியாக ஜெபம் செய்வோம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network