சத்தியத்திற்கான பசி – அல்ஜீரிய குழந்தைகளை சந்தித்தல்
அல்ஜீரியாவின் வடபகுதியில் கபிலி என்னும் இடத்திலுள்ள பின்தங்கிய கிராமத்தில் ஒரு பெரிய மலையின் அடிவாரத்திலே ஜோசப் என்னும் சிறு பையன் வளர்க்கப்பட்டான். தினந்தோறும் அவன் பாடசாலையிலே இஸ்லாத்தை கற்று அரேபிய மொழியிலே குரானை கற்றான். அவனது தகப்பன் இயேசுவை விசுவாசிக்க ஆரம்பித்த பின்பும், அவன் ஆண்டவரை குறித்து அதிகளவு செவிகொடுக்க வில்லை. அவனது தகப்பன் அதிகளவு கடினப்பட்டு வேலை செய்ய வேண்டியதாக காணப்பட்டபடியாலே அவராலே ஜோசப்பிற்கு வேதாகம கதைகளை கூற ஒரு நேரம் கிடைக்கவில்லை.ஜோசேப்பின் எண்ணங்கள் எல்லாம் குழம்பிபோய் விட்டது: பாடசாலையிலே இஸ்லாமை கற்றுக் கொண்டான், ஆனாலும் வீட்டில் அவனது தகப்பன வேதாகமத்திலுள்ள ஆண்டவரை குறித்து கற்றுக் கொடுத்தார். இந்த இரண்டு வழிகளிலும் எது சரியானது மற்றும் யார் ஜீவனுள்ள ஆண்டவரிடம் யார் தன்னை வழிநடத்துவார்கள் என்று ஏங்கினான்.
சந்தர்ப்பம் கதவை தட்டியது
கோடை காலத்திலே சபைக்கு அருகாமையிலே 50 கிலோமீட்டர் தொலைவிலே ஒரு சிறுவர் பாசறை ஒன்று ஒழுங்கமைப்பு செய்யப்பட்டது. ஜோசப் இங்கு செல்வதற்கு விரும்பினான். ஆனாலும் இப்பாசறை சபையை சேர்ந்த பிள்ளைகளுக்கு மாத்திரமே அனுமதிக்கப்பட்டது இவன் எந்தவொரு சபைக்கும் சொந்தமானவனாக காணப்படாதபடியால் போக முடியவில்லை. அவராலே அதற்கு பங்குபற்ற முடியாது என்று கூறிவிட்டார்கள். ஆனாலும் பாசறை ஆரம்பிப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பு, அந்த பாசறையிலே வேலை செய்யும் ஒருவர் இறுதியாக ஜோசப்பிற்கு ஒரு ஸ்தானத்தை பெற்றுகொடுத்தார். ஜோசப் மிகவும் தைரியப்பட்டான்!!
ஜோசப் முழுமையாக சந்தோஷப்பட்டதோடு அதன் மத்தியிலும் தன்னுடைய இருதய ஆழத்திலே இந்த இரண்டு வழிகளிலே எது சரியானது என்ற கேள்வி காணப்பட்டது. பாசறையின் கடைசி நாளிலே ஜோசேப்பை சேர்க்க வேண்டும் என்று எண்ணிய தலைவன் அவனோடு பேச ஆரம்பித்தார். இறுதியாக, ஜோசேப்பு தன்னுடைய கேள்விகளை கேட்க ஒரு சந்தர்ப்பத்தை பெற்றதோடு தன்னுடைய வாஞ்சையை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தான்.அப்பேச்சினூடாக,ஜோசப் ஆண்டவருடைய அன்பை குறித்தும் எம்முடைய பாவங்களைவிட்டு மனந்திரும்பி அவரை பின்பற்றும்படியான இயேசு கிறிஸ்துவின் செய்தியை குறித்தும் கற்றுகொண்டான். இயேசுவை உங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா என்று கேட்டபோது ஜோசப் “ஆம்”என்று பதிலளித்ததோடு அவன் அந்த ஊழியனோடு சேர்ந்து ஜெபம் செய்தான், இறுதியாக தன்னுடைய கேள்விக்கு ஒரு சமாதானம் அவனுக்கு ஏற்பட்டது.
ஜெப குறிப்புகள்
இயேசு கிறிஸ்துவை குறித்து அறிந்துகொள்ளத்தக்க சந்தர்ப்பத்தை கபிலி மற்றும் அல்ஜீரியா முழுவதுமாய் காணப்படும் பிள்ளைகள் பெறவேண்டும் என்று ஜெபம் செய்யுங்கள். (லூக்கா 18:16).
இயேசுவை விசுவாசிக்கிற பிள்ளைகளுக்காக ஜெபியுங்கள். அவர்கள் விசுவாசம் வளர்வதோடு மற்றவர்களுக்கு ஆண்டவரை பற்றி கூறத்தக்க தைரியத்தை அவர்கள் பெற வேண்டும் என்று ஜெபியுங்கள் (மாற்கு 9:36-37).
அல்ஜீரியாவிலே உபத்திரவப்படுகிற கிறிஸ்தவர்களை ஆண்டவர் பாதுகாக்க வேண்டும் என்று ஜெபம் செய்வோம். (மத் 5:10)
ENGLISH : http://www.30-days.net/muslims/muslims-in/north-african/children-of-algeria/
Leave a Reply