கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவ சகோதர ,சகோதரிகளுக்கு நம்முடைய சகோதரர்களான உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
30 நாட்கள் ஜெபக்கையேடு 2013…………
இந்த சிறப்பு வெளியீட்டிற்கு உங்களை வரவேற்கிறோம் (1993-2013)
ஒரு ஜெப இயக்கத்திற்கு 20 ஆண்டுகள் என்பது நீண்ட ஒரு காலமல்ல,
அதிலும் கண்டிப்பாக கடவுளின் பார்வையில் அல்ல. சரித்திரப்பூர்வமாக, நீண்ட
காலமாக இருந்து வந்திருக்கின்ற ஜெப இயக்கங்களும் உண்டு. இருந்தாலும் “30
நாட்கள் ஜெபக்கையேட்டின்” 20வது வருட வெளியீட்டினைப் பார்க்கும் போது
நாங்கள் மகிழ்ச்சியும், தாழ்மையும் கொள்ளுகிறோம். 1993ம் ஆண்டில் முதலாவது
ஜெபக்கையேடு விநியோ கிக்கப்பட்ட போது இஸ்லாம் ஒரு தினசரி செய்தியாக
இருக்கவில்லை மேலும் அதிகமான கிறிஸ்தவர்கள் “முஸ்லீம் உலகை” சந்திப்பதைக்
குறித்து சிந்திக்கவில்லை. இந்த இருபது ஆண்டுகளில் அநேக மாற்றங்கள்
நிகழ்ந்துள்ளன. இந்த வெளியீட்டில் இம்மாற்றங்களின் நேர்மறை மற்றும்
எதிர்மறையான காரியங்களை பிரதிபலித்துள்ளோம். மேலும் நாம் இணைந்து
ஜெபித்ததன் விளைவாக தேவன் கடந்த 20 ஆண்டுகளில் செய்திருக்கிற நாங்கள்
கண்ட மகத்துவமான செயல்களையும் குறிப்பிட்டுள்ளோம். உதாரணமாக பல,
பல முஸ்லீம்கள் கிறிஸ்துவிடம் வந்துள்ளனர். நாடுகள் நற்செய்திக்குத் திறந்துள்ளன,
சபைகள் நிறுவப்பபட்டுள்ளன, விதைகள் விதைக்கப்பட்டுள்ளன, முஸ்லீம்கள் நல்ல
செய்தியைக் கேள்விப்படுகின்றனர். ஆம், சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன,
ஆனால் சவால்கள் வரும் என்று கிறிஸ்துவின் சரீரமாகிய நமக்கு ஏற்கனவே
அறிவிக்கபட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்து இந்த உண்மையை மறைக்கவில்லை.
மாறாக, நமது ஜெபங்கள், மன்றாட்டுகள், ஈகை மற்றும் புறப்பட்டு செல்வது
ஆகியவை பரலோகத்தில் பரிசையும், பூமியிலுள்ள நாடுகளுக்கு நம்பிக்கையையும்
கொண்டு வரும் என்று அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். இந்த வெளியீட்டில்
நீங்கள் மீண்டும் பணிக்களங்களில் ஆண்களும், பெண்களும் கண்டு வருகின்ற,
முஸ்லீம்கள் மத்தியில் தேவன் நிகழ்த்தி வரும் மிகப் பெரிய காரியங்களைக்
குறித்த கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒவ்வொரு கட்டுரையிலும்
கொடுக்கப்பட்டுள்ள ஜெபக்குறிப்புகள் பணிக்களங்களில் ஊழியம் செய்யும்
ஊழியர்களிடமிருந்து வந்த அங்கு நிலவும் தற்போதைய, உண்மையான நிலையின்
பிரதிபலிப்பாக இருக்கின்றன. இந்த வெளியீட்டில் வந்துள்ள நல்ல அறிக்கைகளில்
அதிகமானவைகள் அன்பான கிறிஸ்தவர்களாகிய நீங்கள் கடந்த 20 ஆண்டுகளாக
செய்த உண்மையான ஜெபங்களின் அடிப்படையில் அமைந்தவைகளே. உங்களது
முயற்சிகளுக்காக மிகவும் நன்றியுடையவர்களாக இருக்கிறோம். ஏன் நாங்கள்
இவ்விதம் கூறுகிறோம் என்பதை நீங்கள் இந்த ஜெபக்கையேட்டை
உபயோகப்படுத்தும் போது புரிந்து கொள்வீர்கள்.
தேவனுக்கே எல்லா மகிமையும் !
பதிப்பாளர்கள்
30 நாட்கள் ஜெபம் – 20 வருட முன்னேற்றம்
20 ஆண்டுகளுக்கு முன்பு 110 கோடி முஸ்லீம்கள் இருந்தனர். வெளிநாட்டு
மதமான இஸ்லாம் பெரும்பாலான மேற்கத்திய நாடுகளுக்குத் தெரியாத ஒன்றாக
இருந்தது. மேலும் முஸ்லீம்களுக்கு கிறிஸ்துவின் மீது தங்களுக்குள்ள விசுவாசத்தைப்
பகிர்ந்து கொள்ளும் திருச்சபையின் முயற்சிகளைக் காண்பதும் அரிதாக இருந்தது.
20 ஆண்டுகளுக்கு முன்பு சில மிஷன் தலைவர்கள் எகிப்து நாட்டில் கூடி
இஸ்லாமிய உலகிற்காக ஜெபிக்க ஆரம்பித்தார்கள். அவ்வாறு அவர்கள் ஜெபிக்கின்ற
நேரத்தில், தேவனுடைய இராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை அதிகமான இஸ்லாமிய
உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் கவனம் செலுத்தும்படியான சவாலைப்
பெற்றனர். அப்படிப் பிறந்ததுதான் இஸ்லாமிய உலகிற்கான 30 நாட்கள் ஜெபக்கையேடு.
இன்றைக்கு அந்த ஸ்தாபனத்திற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை
விட 10 மடங்கு அதிகமான இஸ்லாமிய உலகில் ஊழியம் செய்யும் குழுக்கள் இருக்கின்றன.இயேசு கிறிஸ்துவின் செய்தியை அறியாத முஸ்லீம் மக்களுக்கு
அதனை அறிவிப்பதற்கான அழைப்பைப் பெற்றுக் கொண்ட பல ஸ்தாபனங்களில் இதுவும்
ஒன்றாகும். எல்லா மக்களுக்கும் அவர்களது விசுவாசத்தை தெரிந்தெடுப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அதிகமான விசுவாசிகள் உலகமெங்கும் உள்ள இஸ்லாமிய சமுதாயங்களில் இயேசு கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவதற்கு புதிய புதிய வழிகளைக் கண்டறிய முயற்சிக்கின்றனர்.
இஸ்லாமிய உலகிற்கான 30 நாட்கள் ஜெப இயக்கம், விசுவாசிகள்
மரியாதையுடனும், அன்புடனும் அவர்களது விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்ள
அவர்களுக்குக் கற்பிக்கவும், ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் பெரும்பங்கினை
வகித்து இருக்கிறது. இக்கையேடு 38க்கும் அதிகமான மொழிகளில்
விநியோகிக்கப்படுகிறது, ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கான மக்கள் இந்த
ஜெபத்தில் கலந்து கொள்ளுகின்றனர். 20 வருடங்களாக ஏறெடுக்கப்பட்ட ஏராளமான
ஜெபங்களின் விளைவுகள்தான் என்ன ?
• ஒரு மிஷன் ஸ்தாபனம் தனது அறிக்கையில், 1997ம் ஆண்டில் முஸ்லீம்
மக்கள் கூட்டத்தினரிடையே சபை நிறுவும் இயக்கங்கள் இரண்டை மட்டுமே
காண முடிந்தது, ஆனால் 2010ல் குறைந்தது 25 முஸ்லீம் மக்கள்
கூட்டத்தினரிடையே 1000க்கும் அதிகமான ஞானஸ்நானங்களும், 100 சபைகளும்
நிறுவப்பட்டுள்ளதைக் காண முடிகிறது என்று கூறியிருக்கிறது. அவைகளில்
சில கீழ்க்கண்டவைகளில் அமையும்:
• ஒரு தென் ஆசிய நாட்டில் 5 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லீம்கள்
விசுவாசத்திற்குள் வந்திருக்கின்றனர்;.
• ஒரு மேற்கு ஆசிய நாட்டில் கிறிஸ்தவ செயற்கைகோள் மூலமாக
ஒளிபரப்பப்படும் கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றினை மிகுதியான மக்கள்
பார்க்கின்றனர். அது அந்நாடு முழுவதும் பெருகி வருகின்ற ஆயிரக்கணக்கான
வீட்டு ஐக்கியங்களைக் கொண்ட பலமான மற்றும் வளர்ந்து வருகின்ற சபை
இயக்கத்திற்கு உதவியாக இருந்து வருகின்றது.
• வட ஆப்பிரிக்காவில் செயல்பட்டு வரும் பல மக்கள் இயக்கங்களில் ஒன்றில்
மட்டும் இது வரை சந்திக்கப்படாத மக்கள் கூட்டத்தினர் இலட்சகணக்கில்
விசுவாசத்திற்குள் வந்திருக்கின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கிற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இது
வரை சந்திக்கப்படாத முஸ்லீம் மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் முறைகளை
மாற்றி அமைத்துள்ளது. இஸ்லாமிய உலகில் ரேடியோ மற்றும் செயற்கைக்கோள்
ஒளிபரப்புகள் இலட்சக்கணக்கான மக்கள் கிறிஸ்துவின் செய்தியினை கேட்கவும்,
செவிசாய்க்கவும் உதவியாக இருந்திருக்கிறது. அரபிய உலகில் மட்டும் ஒரு
நிகழ்ச்சியினை 85 இலட்சம் மக்கள் பார்க்கின்றனர். மேலும் இவைகள் முஸ்லீம்கள்
என்றும் இல்லாத விதத்தில் இயேசு கிறிஸ்துவின் செய்தினைக் கேள்விப்படவும்,
புரிந்து கொள்ளவும் வகை செய்யும் விதமாக உள்ளூர் மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ள வேதாகமங்கள் விநியோகிக்கப்படுவதற்கும், இன்டர்நெட்
மூலமாக ஒலி மற்றும் ஒளி வடிவங்களில் வேதாகமங்களை விநியோகிப்பதற்கும்
உதவியாக இருந்திருக்கிறது.
அடுத்த 20 ஆண்டுகளைப் பற்றி என்ன ?
ஜனவரி 2011ல் வெளியிடப்பட்டஒரு ஆய்வு அறிக்கை, அடுத்த 20 ஆண்டுகளில் முஸ்லீம்களின்
மக்கள் தொகை கடந்த 20 ஆண்டுகளை விட இரண்டு மடங்கு பெருகிவிடும் என்றும் உலக
மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்காக இருக்கம் என்ளும் குறிப்பிடுகிறது.
கிறிஸ்துவின் சீஷர்களாகிய நாம் இந்த வளர்ச்சியை சந்திப்பதற்கு இரண்டு மடங்கு
விசுவாசத்துடனும், அன்புடனும் எழும்ப வேண்டும். நம்மால் அது முடியுமா ?
30 நாட்கள் ஜெபத்தினை ஆரம்பித்த இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர்
முடியும் என்று கூறுகிறார். “இப்படிப்பட்ட வளர்ச்சியினை 20 ஆண்டுகளுக்கு முன்
நாம் எதிர்பார்த்திருக்க முடியாது ஆனால் முஸ்லீம்கள் மத்தியில் கடந்க 20 ஆண்டுகளில்
நற்செய்தியானது ஜெபத்தின் விளைவாக பரவினதை நாம் புரிந்து கொள்ளுகிறோம்.
இதை விட மேலானதை அடுத்த 20 ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கலாம்”.
Leave a Reply