கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் குறித்து நம்முடைய வேதாகமம் நமக்கு தெளிவாக போதிக்கிறது.ஆனால் சில இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாமை காப்பாற்ற இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை மறுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.இந்த விசயத்தில் இஸ்லாமியர்களுக்குள் ஒத்த கருத்து இல்லை என்பதை நாம் அறிவோம்.சில இஸ்லாமிய குழுக்கள் இயேசு கிறிஸ்து மரித்துவிட்டார் என்றும்,பல இஸ்லாமிய குழுக்கள் இயேசு கிறிஸ்து மரிக்கவே இல்லை என்றும் மக்களை குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் வேதாகமமும் ,சரித்திர ஆதாரங்களும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை பறைசாற்றுகிறதாகவே இருக்கிறது.எனவே இஸ்லாமிய அறிஞர்களின் வாதங்களை தவிடு பொடியாக்கும் விதமாக இந்த புத்தகம் பல ஆதாரங்கள் மூலம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை உறுதிப்படுத்துகிறது.நிச்சயமாக இந்த புத்தகம் படிக்கவேண்டியதாகும்.
இந்த புத்தகம் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கிறது.அதன் தொடுப்புகள் கீழே உள்ளது.
இந்த புத்தகம் ஆன்லைனில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
இந்த புத்தகத்தை இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
Leave a Reply