IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

நூல் அறிமுகம் : தேவன் ஒருவரா? மூவரா? (இஸ்லாமியர்களுக்கான பதில்)

March 9, 2013

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் வேதாகமத்துக்கு விரோதமாக பல புத்தகங்களை வெளியிட்டு உள்ளார்கள்.அதில் இயேசு கிறிஸ்து இறைவனுடைய மகன் இல்லை.அவர் தேவன் அல்ல,போன்ற அவருடைய தெய்வீகத்துக்கு எதிராக பல வாதங்களை வைக்கிறார்கள்.

மேலே உள்ள புத்தகத்தில் போதகர் பவுலி அவர்கள் அவர்களுடய வாதங்களுக்கெல்லாம் வேதாகமத்தின் அடிப்படையில் தெளிவான விளக்கங்களை கொடுத்துள்ளார்.

1) திரித்துவம் என்றால் என்ன?,2)இயேசு கிறிஸ்து தெய்வமானால் தெய்வம் மரிக்கலாமா? 3)ஒருவருடைய பாவத்துக்கு இன்னொருவருக்கு தண்டனையா? 4)இயேசு தன்னை தெய்வம் என்று சொன்னாரா?,5) தெய்வமே தெய்வத்தை பார்த்து ஜெபம் செய்தாரா? 6)திரித்துவம் என்ற வார்த்தை பைபிளில் உண்டா?,7)கடவுளுக்கு மகன் இருக்க முடியுமா?

இது போன்ற பல கேள்விகளுக்கு அழகான முறையில் வேதாகம மேற்கோள்களுடன் விளக்கப்பட்டுள்ளது.தேவையான இடங்களுக்கு குர்ஆன்,ஹதீஸ்கள்,மற்றும் இஸ்லாமிய புத்தகங்களின் ஆதாரங்களையும் ஆசிரியர் மேற்கோள் காட்டியிருப்பது மிகவும் சிறப்பாக உள்ளது.

ஆசிரியர் :போதகர் பி.வி.பவுலி

வெளியீடு:வேர்ட் ஆப் கிரைஸ்ட்

இந்த புத்தகம் அனைத்து முன்னனி கிறிஸ்தவ புத்தக நிலையங்களிலும் கிடைக்கும்.அல்லது இந்த புத்தக அட்டையில் இருக்கும் முகவரிக்கு தொடர்புகொண்டால் பெற்றுக்கொள்ளலாம்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மேலும் உண்டாவதாக.

Comments

  1. பாதிமா எஸ்தர் says

    March 11, 2013 at 2:46 AM

    இப்படிப்பட்ட அருமையான புத்தகங்களை கிறிஸ்தவர்கள் வாங்கி, தங்களில் புத்தக சேகரிப்பில் வைத்துவிடாமல், இஸ்லாமியரின் கரங்களுக்குச் செல்ல இடங்கொடுங்கள். நிச்சயமாக இஸ்லாமியர் இந்த புத்தகங்களை கிறிஸ்தவ புத்தக சாலைகளுக்கு்ள் வந்து வாங்க மாட்டார்கள். ஒவ்வொரு கிறிஸ்தவரும் குறைந்தது இரண்டு புத்தகங்களை வாங்கி, ஒன்றை ஒரு இஸ்லாமியருக்கு பரிசாக கொடுங்கள்.

    Reply
  2. D.S.D says

    March 13, 2013 at 12:55 PM

    கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு அன்பின் ஸ்தோத்திரம்.!

    தேவன் ஒருவர்தான் மூவராக தன்னை வெளிப்படுத்துகிறார் . இதை அறிந்து கொள்ள பழைய ஏற்பாட்டில் தேவன் மக்களிடம் பேசின வார்த்தைகளையும், அவைகள் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மூலம் நிறைவேறுவதையும் ஆதாரமாக கொண்டு நாம் அறிந்துகொள்ளமுடியும். அதிகமான வசனங்களை எழுதினால் புத்தகமாகத்தான் வெளியிட வேண்டியதிருக்கும், கூடியசீக்கிரதில் அதையும் செய்ய தேவன் என்னை பயன்படுத்துவார் என்று நான் விசுவாசிக்கிறேன் . இப்பொழுது ஒரு சில வசனங்களை தெறிவித்துகொள்ள விருப்புகிறேன் .

    சகரியா 12:10.ல் நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கி றது போல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். என்று தேவன் சொல்கிறார் .

    பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் மூலமாக பேசுகிற தேவன் இந்த வசனத்தின் மூலம் என்ன சொல்கிறார் ? என்று பார்ப்போம் :

    1. நான் தாவீது குடும்பத்தாரின் மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். என்று சொல்கிறார் . இதில் நான் என்பது அந்த தேவனைக்குறிக்கிறது .

    2. கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன் என்பது அவருக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது .

    3. தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, என்பது அவருக்குள் வார்த்தையாக இருந்து வெளிப்பட்ட இயேசுவைக் குறிக்கிறது. அகவே பிதா,குமாரன் , பரிசுத்தாவி மூன்றும் ஒரே தேவன் என்பதும். ஒன்றுக்குள் மூன்று இருந்து வெளிப்படுவதையும் நாம் பார்க்கிறோம் . இதனால் அவர் மூன்று தேவனல்ல!!! மூன்றும் சேர்ந்த ஒரே தேவன் !!!.

    மேலும், இயேசுவுக்கு 480 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட இந்த வசனத்தில் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து புலம்புவார்கள் என்று தேவன் சொல்கிறார் .

    குத்தப்பட்டது யார் இயேசுதானே ? இப்படியிருக்க பிதாவாகிய தேவன் ஏன் இப்படி சொன்னார்? தேவனுக்குள் இருந்த வார்த்தை மாம்சமாகி இந்த பூமிக்கு வந்தது என்று யோவான் 1:14 சொல்கிறது . இது இயேசு என்று நாம் அறிகிறோம் . தேவன் என்றும் சொல்கிறோம் 1 தீமொத்தேயு 3:16 வசனமும் அப்படித்தான் சொல்கிறது .

    திருத்துவம் என்ற வார்த்தை பைபிளில் இருக்கிறதா என்று கேட்டால் ஏன் இல்லை!!!

    மத்தேயு 28:19,20 ல் ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; என்று இயேசு சொன்னார் ;

    இதில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமங்களிலே என்று பன்மையில் சொல்லாமல் நாமத்திலே என்று ஒருமையில் சொல்வதை கவனித்துப்பாருங்கள் .
    இதில் ஒரே தேவன் திருத்துவமாக இருப்பதை காணமுடிகிறதே !!!.

    தேவன் ஒருவர்தான் என்பதும் அவருக்குள் திருத்துவம் இருக்கிறது என்பதும் சகரியா12:10ல் உள்ள வசனம் ஒன்றே போதுமானதாக இருக்கிறது .மேலும் அந்த வசத்தில் இன்னும் அனேக விஷயங்கள் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வசனத்தையும் அறிந்துகொள்ளாதவர்களுக்கு இதற்கு மேற்ப்பட்ட வசனங்களை சொன்னாலும் புரியாது. உண்மையாகவே தேவனை தேடுகிறவர்களுக்குதான் இந்த விஷயங்கள் புரியும் !.
    அன்புடன் D.S.D
    உண்மை ஒளி திருச்சபை

    Reply
  3. PRABHAKAR M B says

    March 19, 2013 at 3:57 PM

    praise the lord!!!!!!!!!1111

    Reply
  4. abdulrahuman says

    March 20, 2013 at 8:43 AM

    Arputhamana thiruthuva kodpaadu sakothar noolaha veliyittulaar insha allah nalla vishayam anaal neengal intha putthakathil pala muranpadana karuthukalai koori ulleerkal naan athai devan moovar ? Enra katturai eludi thanggalukku anupukirean pathil kudungal

    Reply
    • admin says

      March 20, 2013 at 12:53 PM

      அந்த புத்தக சம்மந்தமான விவாதமாக இருந்தால் அந்த புத்தக ஆசிரியர் உங்களுக்கு விளக்கம் அளிப்பார்.இல்லை பொதுவாக கட்டுரையாக இருந்தால் எங்கள் மெயிலுக்கு அனுப்பவும் .நாங்கள் பதில் கொடுக்கிறோம்.

      Reply
  5. abdulrahuman says

    March 21, 2013 at 7:45 AM

    Mikka nanri sakothare naan thangalukku athai viraivil anupukirean pathil kudungal insha allah ungalin antha mulu putthakathukum telivana atharathodu maruppu putthakamum veliyida muyarchi seidu kondurukirean athuvum viaraivil ungalukku anupi vaikka padum maruppu terivithaal vivatha alaippu kudukka padum thoothukudi tntj amaipu thayarakave ullathu thalamaiedam anumadi vaangiya pinpu naan ithai patri pesukirean ippothaiku naan thangalidam oru telivana vaakumoolathai ethirpaarkirean anaithaium naan biple irunthe ethirpaarkirean athu ithudaan 1. Parisuttha aavi enraal enna jesus parisuttha aaviku enna vilakkam kuduthulaar? 2. Kirupai aavi enraal ena itharku jesus enna vilakkam kuduthulaaar? 3.deva aavi enraal enna itharku jesus ena koori ulaar ? 4 Devakumaran enraal ena jesus itharku tharkka reethiyaka ena vilakkam kuduthulaar ? 5Makimaien aavi enraal ena itharkum jesus vilakam tevai? 6. Manithakumaran enraal enna itharkum jesus enna koori ullaar ? 7Pitha enraal ena ? Karthar enraal ena ? Devan enraal ena ? Kadavulai kurikkum pala peyarkala? Allathu veru veru arttham unda? Biple irunthu vilakavum 8.theerkatharisi enraal porul enna theerkatharisi kadavulin isthaapakara ? Kadavulai theerkatharisi maruthalipaara? Theerkatharisiai kadavul therntheduthu ulakil prvesikka anupinaaraa? Allathu poomiel etho oru manithanai thideer enru theerka tharisanam solla avarkain ullathil potu makkalidam anupuvaara? Inum sila ungalin vaaku moolam venum naan ithilirunthu ungaludaia thiruthuva kadavulin unmaiana ilakanathai biple irunthu kudukka mudium pls enaku pathil kudungal naan epothum unga pathilai kaathirukireaan ungal sevakan

    Reply
  6. D.S.D says

    March 22, 2013 at 2:22 AM

    மதிப்பிற்குரிய Abdulrahuman அவர்களுக்கு! நீங்கள் கேட்ட அணைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதிலை கொடுக்க முடியும். ஆனால் நீங்கள் யாரிடம் உங்கள் கேள்விகளை கேட்கிறீர்கள் என்பது புரியவில்லை.

    மேலும்; தீர்க்கதரிசி என்றால் பொருள் என்ன ? தீர்க்கதரிசி கடவுளின் இஸ்தாபக்கரா? என்று நீங்கள் கேட்டுள்ளீர்கள்:

    தீர்க்கதரிசி என்றால் பின்பு நடக்ககூடிய காரியங்களை முன்கூட்டி சொல்பவர்கள்.!
    அதை மனிதர்களின் சொந்த அறிவால் சொல்லமுடியாது தேவன் கொடுக்கும் வார்த்தையினால் சொல்லமுடியும் !

    சரி, இஸதாபக்கர் என்றால் என்ன? கடவுளால் அனுப்பப்பட்ட தூதர் என்கிற அர்த்தத்தில் சொல்கிறீர்களா ? அப்படி என்றால் நான் உங்கள் வார்த்தையின்படியே கேட்கிறேன் ;

    முகமது நபி கடவுளின் இஸ்தாபக்கரா?

    Reply
  7. J.Jayarajasingh John Samuel says

    April 6, 2013 at 5:56 AM

    பிதா- யோவான்-5:43. நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை,( பிதாவின் நாமம் – இயேசு )
    குமாரன்- மத்தேயு -1:21.. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.( குமாரன் நாமம் – இயேசு )-
    பரிசுத்த ஆவி- யோவான்-14:26.. என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். (பரிசுத்த ஆவி நாமம் – இயேசு )
    யோவான்-17:6. நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.
    யோவான்-17:26. நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.
    சங்கீதம்- 68 :4. தேவனைப்பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.
    மாற்கு-1:13. அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள். (யேகோவா நாமம் – இயேசு )

    யோவான்-15:13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
    அப்- 4:12. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
    மாற்கு-16:16. விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்;
    எபே- 4:4 உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும் ஒரே ஆவியும் உண்டு;

    5. ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,

    அப்- 2-38. பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

    அப்-8:15. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,
    16. அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,
    I கொரி-8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
    அப்-19:3 அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.
    4. அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.
    5. அதைக் கேட்டபோது அவர்கள்: கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
    அந்திக்கிறிஸ்து யார் ?
    குமாரனை மறுதலிக்கிறவன் ( I யோ 2: 22, 23)

    Reply
  8. J.Jayarajasingh John Samuel says

    April 6, 2013 at 5:58 AM

    அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?
    மத்தேயு 28:19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சீஷர்களிடம் சொன்னார்.
    மாற்கு-16:17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;

    18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
    Iதீ மோ-3:16. அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.

    பிதா- யோவான்-5:43. நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை,( பிதாவின் நாமம் – இயேசு )
    குமாரன்- மத்தேயு -1:21.. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.( குமாரன் நாமம் – இயேசு )-
    பரிசுத்த ஆவி- யோவான்-14:26.. என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். (பரிசுத்த ஆவி நாமம் – இயேசு )
    யோவான்-17:6. நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.

    யோவான்-17:26. நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.
    சங்கீதம்- 68 :4. தேவனைப்பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.

    மாற்கு-1:13. அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள். (யேகோவா நாமம் – இயேசு )

    யோவான்-15:13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
    அப்- 4:12. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
    மாற்கு-16:16. விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்;

    எபே- 4:4 உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும் ஒரே ஆவியும் உண்டு;

    5. ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,

    அப்- 2-38. பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

    அப்-8:15. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,
    16. அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,

    அப்-10:48. கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான்.

    I கொரி-8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

    அப்-19:3 அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.
    4. அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.
    5. அதைக் கேட்டபோது அவர்கள்: கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
    ரோமர்6: 3. கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?
    4. மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
    5. ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
    கலா-3:27. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
    கொலோ- 2 :6 ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
    7. நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.
    12. ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.

    கலா-3:26 நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.
    27. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
    28. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
    29. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்.

    ரோம-8 : 14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.

    கொலோ-1 :14[குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
    15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.

    II தீமோ-1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.
    10. நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக்கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.
    13. நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு.
    எபி-9:26 அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.
    27. அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
    28. கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
    எபே- 4:4 உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும் ஒரே ஆவியும் உண்டு;
    5. ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,

    Reply
  9. TAMIL ISLAM says

    April 13, 2013 at 3:32 AM

    இது போன்ற பல புத்தகங்கள் வெளிவரவேண்டும்

    Reply
  10. Ajan prabu says

    April 18, 2013 at 5:35 AM

    praise the lord Amen…..

    Reply
  11. Abu says

    February 16, 2015 at 6:36 AM

    Trinity – இந்த வார்த்தை இடையில் பைபிளில் இருந்து நீக்கப்பட்டதாகவும், பின்னேர் சேர்க்கப்பட்டதாகவும் ஒரு கருத்து உள்ளதே… இது சரியா?

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network