IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ
You are here: Home / பதில் கட்டுரைகள் / பைபிள் கேள்விகள் :”இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்” என்று சொல்லியுள்ளாரா?

பைபிள் கேள்விகள் :”இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்” என்று சொல்லியுள்ளாரா?

January 20, 2013

இஸ்லாமிய அறிஞர்கள் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடம் அடிக்கடி கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்றாக இருப்பதால் இந்த கட்டுரையை ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் இருந்து இங்கு பதிக்கிறேன்.

 

கேள்வி:

கிறிஸ்தவர்கள் நினைப்பது போல பைபிளில் எங்கேயாவது “இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்” என்று சொல்லியுள்ளாரா? தயவு செய்து காட்டமுடியுமா? 


பதில்:

என்னிடம் இந்த கேள்வி அனேக முறை கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வியைப் பற்றிய ஒரு சுருக்கமான மற்றும் முக்கியமான பதிலாக இக்கட்டுரை அமையும் என்று நான் நினைக்கிறேன்.

 

“நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்” என்று இயேசு சொல்லவில்லை.


ஒரு எடுத்துக்காட்டிற்காக, உண்மையாகவே ஒரு மனிதன் உங்களிடம் வந்து, “நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்” என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்?

அவர் இறைவன் தான் என்று நம்பி உடனே அவரிடம் நம்பிக்கை வைப்பீர்களா?

அவரை இறைவன் என்று நம்பி உடனே அவரை தொழுதுக்கொள்ள/வணங்க ஆரம்பித்துவிடுவீர்களா?

 

மேலே சொன்னது போல, ஒரு நபர் உரிமை கொண்டாடி சொல்லும் போது, ஒரு சராசரி மனிதன் அதுவும் “ஒர் இறைக்கொள்கையுடைய மனிதன்” இப்படிப்பட்ட உரிமைக் கொண்டாடும் நபர் மீது “தேவ தூஷணம் அல்லது இறைக் குற்றம்” சுமத்துவான். நீங்களும் இப்படிப்பட்ட குற்றத்தைத் தான் அப்படிப்பட்டவர் மீது சுமத்துவீர்கள் என்று நம்பலாம். திடீரென்று ஒருவர் வந்து “நான் தான் இறைவன்” என்றுச் சொன்னால் அதனை நம்ப மறுக்கும் நீங்கள், இயேசு மட்டும் “எல்லாரிடமும் சென்று நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்” என்று நேரடியாகச் சொல்லவேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள். நீங்களே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத ஒன்றை இயேசு சொல்லவேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள்? இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை ஒருவர் சொல்வாரானால், மனிதர்கள் உடனே அவருக்கு “பைத்தியக்காரர்” பட்டம் கட்டி ஒதுக்கிவிடுவார்கள். இயற்கையாகவே மனிதர்கள் இப்படிப்பட்ட வாதத்தை வெறுமனே ஏற்கமாட்டார்கள் என்பதை மற்ற எல்லா மனிதர்களைக் காட்டிலும் இயேசுவிற்கு நன்றாக தெரிந்திருந்தபடியினால் தான், அவர் நேரடியாக இப்படிப்பட்ட வாதத்தை வைக்கவில்லை. இப்படி வெறுமனே சொல்வது ஒரு முட்டாள் தனம் என்பதினால் தான் அவர் அப்படி நேரடியாகக் கூறவில்லை. ஆனால், தான் ஒரு இறைவன் என்பதை அவர் மறைமுகமாக பல வழிகளில் காட்டியுள்ளார், மற்றும் இந்த இதர வழிகளே “இயேசு இறைவன்” என்பதை நிருபிக்க போதுமானதாகும்.

 

நீங்கள் ஒருவேளை இறை விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடையவராக இருக்கலாம், அதே நேரத்தில் யாராவது வந்து நான் தான் இறைவன் என்றுச் சொன்னால், அதனை உடனே நம்பிவிடாமல், அதைப் பற்றி ஆராய்கிறவராக இருக்கலாம். இறைவன் மனித உருவில் வரமாட்டார் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால், சர்வ வல்லவராகிய இறைவன் மனித உருவில் வந்தால் அவரது வல்லமைகள் குறைந்துவிடுமா? நீங்கள் இறைவனால் எல்லாம் முடியும் என்று நம்புகிறீர்கள், அப்படி இருக்கும் போது, இப்படிப்பட்ட இறைவன் நான் தான் என்று ஒருவர் சொன்னால், உடனே நம்பிவிடுவீர்களா? அப்படி சொன்னவரிடமிருந்து ஆதாரங்களை எதிர்ப்பார்க்கமாட்டீர்கள்? நிச்சயமாக எதிர்ப்பார்ப்பீர்கள். ஒரு வேளை, நான் தான் இறைவன் என்று ஒருவர் சொன்னவுடன், அவரிடம் எந்த ஒரு ஆதாரத்தையும் பார்க்காமல் அவரை வணங்க ஆரம்பித்துவிட்டால், நீங்கள் இறைக்குற்றம் புரிந்தவராக கருதப்படுவீர்கள். அதே நேரத்தில், தான் ஒரு இறைவன் என்று முழு ஆதாரங்களையும் கொடுத்துவிட்ட பிறகும், அவரை வணங்க மறுப்பீர்களானால், இறைவனின் பார்வையில் இதுவும் மிகப்பெரிய குற்றமாக கருதப்படும்.

 

எல்லாவற்றிற்கும் மேலாக கடைசியாக தேவையானது எதுவென்றால், “நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்” என்ற எழுத்தின்படியான வரிகள் உள்ளனவா என்பதல்ல, அதற்கு பதிலாக, அவர் இறைவன் என்பதை பல வகைகளில் தெளிவாக அவர் நிருபித்து, ஆதாரத்தை வைத்துச் சென்றுள்ளாரா என்பது தான் மிகவும் முக்கியமானது. இயேசு இறைவன் என்ற வாதத்தை அவர் “வார்த்தையில் மட்டும் தான் சொல்லவேண்டும்” என்பதல்ல, இதர வழிகளில் அவர் அதனை தெளிவாக நிருபித்துள்ளாரா என்பது தான் முக்கியமானது. இயேசு தன் இறைத்தன்மையை தெளிவாக நிருபித்து இருக்கும்போது, அவரை வணங்க வேண்டியது உங்கள் கடமையாக இருக்கிறது. நீங்கள் நினைக்கும் வரிகளே அல்லது வார்த்தைகளே அவர் சொல்லயிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது தவறானதாகும். நாம் இறைவனை அங்கீகரிப்பதற்கு முன்பு, இந்த வகையிலே அல்லது வழியிலே தான் நீங்கள் உங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று நாம் இறைவனுக்கு கட்டளைகளைக் கொடுத்து வரையறுக்கமுடியாது.

 

உதாரணத்திற்கு, யோவான் நற்செய்தி நூலில், நித்திய வாழ்வு பற்றி இயேசு கூறும் போது: 


“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;” (யோவான் 11:25). என்று கூறினார். 

இயேசு, தன் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்களுக்கு நித்திய வாழ்வை கொடுப்பேன் என்று கூறுகிறார். இந்த வாதத்தை ஒரு இறைவன் தவிர வேறு யாராவது சொன்னால், அது தேவதூஷண பாவமாகும். இதனை இறைவன் மட்டுமே சொல்லமுடியும். இது மிகவும் முக்கியமான இறைவனுக்குத் தகுந்த உரிமைக் கொண்டாடலாகும். இப்படிப்பட்ட வாதத்தை முன்வைப்பதற்கு இயேசு ஏதாவது செய்தாரா, இந்த அதிகார வார்த்தைகளுக்கு தகுந்த நிருபனத்தை அவர் முன்வைத்தாரா? இந்த வாதம் புரிந்த அதே நாளில் என்ன செய்தார் என்பதை வேதம் பல விவரங்களைச் சொல்கிறது, இதன் பிறகு கடைசியாக நாம் வாசிக்கின்றோம்: 


“இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.” (யோவான் 11:43,44).


நீங்கள் நற்செய்தி நூல்களை கவனமாக வாசிக்கும் போது, கீழ்கண்ட விவரங்களை தெளிவாகக் காணலாம்: 

1) இயேசு, தான் ஒரு இறைவன் என்ற தோரணையிலேயே அதிகாரமுடையவராக பேசினார்.

2) இயேசு, தான் ஒரு இறைவன் என்ற முறையிலேயே அதிகாரமுடையவராக நடந்துக்கொண்டார்.

3) இயேசு, தனக்கு எல்லாவற்றையும் செய்ய அதிகாரமுண்டு என்பதை பல அற்புதங்கள், அதிசயங்களை செய்துக்காட்டி தன் இறைத் தன்மையை நிருபித்தார்.

 

தம்முடைய சீடர்களுடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த‌ பிறகு ஒரு சீடன் , “பிதாவை (இறைவனை) எங்களுக்கு காட்டும்” என்று கேட்டபோது:


அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? ….. நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். (யோவான் 14:9-11)

 

இயேசு தன் சீடர்களும், மற்றும் தன்னைச் சுற்றி இருக்கும் இதர மக்களும் தன்னுடைய இறைத் தன்மையை அதிகாரம் நிறைந்த தம்முடைய வார்த்தைகளைக் கண்டு தெரிந்துக்கொள்ளவேண்டுமென்றும், இன்னும் இறைவனால் மட்டும் செய்யமுடியக்கூடிய அற்புதங்களை தான் செய்வதைக் கண்டும் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்றும் எதிர்பார்த்தார். இயேசு தான் ஒரு இறைவன் என்பதற்கு அனேக ஆதாரங்களை கொடுத்துள்ளார், எனவே இனி நீங்கள் தான் உங்கள் முடிவை எடுக்கவேண்டும்.

எந்த மனிதனானாலும் தான் ஒரு இறைவன் என்று சொல்லக்கூடும், சிலர் இன்னும் மேலே சென்று நான் தான் உலகை உண்டாக்கிய இறைவன், நான் ஆதியிலிருந்து இருக்கிறேன் என்றும் சொல்லக்கூடும். ஆனால், உண்மையான இறைவனால் மட்டுமே தான் ஒரு இறைவன் என்ற ஆதாரங்களை நிருபனங்களைத் தரமுடியும், மற்ற யாராலும் முடியாது. இறைவன் நமக்கு தேவையான ஆதாரங்களை கொடுத்து இருக்கும் பட்சத்தில், தன்னை வணங்கும் படியாக “எழுத்தின் படியான நேரடியான கட்டளை” தேவையில்லை. எந்த ஒரு ஆதாரமும் கொடுக்காமல், அற்புதங்களும் செய்யாமல், “நான் தான் இறைவன்” என்றுச் சொல்வது, ஒரு இறைவனுக்கு எந்த ஒரு மேன்மையையும் கொடுக்கப்போவதில்லை. ஒரு இறைவனின் உண்மை இறைத்தன்மை, அவரது செயல்களில் வெளிப்படும். இப்படி இல்லாமல், நான் தான் இறைவன் என்ற வாதத்தை உலகத்தில் எல்லாரும் முன்வைக்கமுடியும், இதனால் எந்த பயனும் இல்லை. தான் ஒரு இறைவன் என்ற நிருபனத்தை மிகவும் ஆணித்தரமாக கொடுத்துவிட்ட பிறகு, இதனை வார்த்தையில் சொல்லவேண்டிய அவசியமில்லை. திறந்த மனதுடன் இந்த ஆதாரங்களைக் காணும் நபர்கள் உண்மையான இறைவன் யார் என்பதை கண்டுக்கொள்வார்கள், அப்படியில்லாமல், இயேசு “நான் இறைவன்” என்று நேரடியாக சொல்லியிருந்தாலும் இந்த நிருபனங்களை நிராகரித்துவிட்டவர்கள் நம்பப்போவதில்லை. அவரது உண்மை இறைத்தன்மையை நீங்கள் அறிந்து இருந்தால், அவரை தொழுதுக்கொள்வது தான் சரியான பதிலாகும்.

இது மிகவும் முக்கியமான விஷயம் என்றும் இதனை நம்புவது சிலருக்கு கடினம் என்றும் எனக்குத் தெரியும். இதனால், தான் இயேசுவின் சீடர்களுக்கும் இதனை புரிந்துக்கொள்ள சில காலம் பிடித்தது. இயேசுவின் அனைத்து வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் சரியான விளக்கத்தை இயேசுவின் சீடர்கள் புரிந்துக்கொண்டது, அவரது மரணத்திற்கு பிறகு மற்றும் உயிர்த்தெழுத்த இயேசுவை அவர்கள் கண்ட பிறகு தான்.

யோவான் நற்செய்தி நூலின் 20ம் அதிகாரத்தின் கடைசியிலும், மத்தேயு நற்செய்தி நூலின் 28ம் அதிகாரத்திலும் நாம் இதனை காணலாம். அதாவது தன்னை அவர்கள் இறைவன் என்று தொழுதுக்கொள்வதையும், அதனை இயேசு ஆமோதிப்பதையும் காணலாம். ஆனால், அவர் அந்த தொழுதுக்கொள்ளுதலை அவர்களிடம் கட்டாயப்படுத்தி அதற்கு முன்பாக எதிர்பார்க்கவில்லை, அதே நேரத்தில் தன்னை தொழுதுக்கொள்வதை அவர் அங்கீகரித்தார் மற்றும் அது தான் சரியானது என்பதை ஆமோதித்தார்.

உங்களின் வாதம், “நான் இறைவன், என்னை வணங்குங்கள்” என்று இயேசு சொல்லவில்லையே என்பதாகும். இந்த வார்த்தைகளை அப்படியே அவர் சொல்லவில்லை, ஆனால், இந்த வரிகளை விட அதிகமாக, அவர் பல வழிகளில் தன் இறைத் தன்மையை நிருபித்தார். உங்கள் மனக்கண்களை திறந்து உண்மையைக் கண்டுக்கொள்ளுங்கள். ஆங்கில மூலம்

இன்னும் பல வசனங்கள் மூலம் இயேசு கிறிஸ்து கடவுள் என்பதை நிரூபித்து உள்ளார்.வரும் நாட்களில் ஒவ்வொரு வசனமாக விளக்கி பதில் அளிக்கப்படும்.

Comments

  1. vinoth says

    January 21, 2013 at 6:25 AM

    wooooooooooow !!!!! awesome brother !!!! god bless you !!!!

    Reply
  2. D.S.D says

    January 23, 2013 at 2:50 AM

    சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு மகிமை உண்டாவதாக!
    கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கும், உன்மை தேவனை உன்மயாகவே அறிந்துகொள்ள விரும்புகிற இஸ்லாமிய சகோதர சகொதரிகளுக்கும்,அன்பின் ஸ்தொதிரம்!

    இயேசு நான்தான் இறைவன் என்னை வனங்குங்கள் என்று சொல்லியுள்ளாரா? என்று கேட்கிற‌
    யாவருக்கும் வேதாகமத்தில் இயேசு இறைவன் என்பதற்கும் இயேசு வணக்கத்திற்குரியவர் வணங்கப்பட்டார் என்பதற்கும் பல ஆதாரங்கள் பதிலாக உள்ளன. இதோ வேதாகமத்தில் பார்த்து அதன் உன்மையை தெறிந்துகொள்வோம்.!!

    *பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பேசுகிற தேவன் உபாகமம் 6:13ல் உன் தேவனாகிய கர்த்தருக்கு பயந்து, அவருக்கே ஆராதனை செய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக என்று சொல்கிறார்.

    * அவருகே என்கிற வார்த்தை அவர் ஒருவருக்கு மட்டுமே என்கிற பொருள்படுகிறது.

    * ஆராதனை என்பது வணங்குவது, போற்றி புகழ்ந்து, துதித்துப் பாடுவது.

    * இயேசு பிறந்தபொழுது, என்ன நடந்தது ???

    * அந்த நேரமே பரமசேனையின் திரள் அந்த தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள் என்று லூக்கா 2:13,14ல் பார்க்கிறோம்.

    *இங்கு யாரை துதித்தார்கள் ? தொழுதுகொண்டார்கள் ? என்ற கேள்வி ஒருவேளை உங்களுக்கு வந்தால் எபிரெயர் 1:6 வசனம் சொல்கிறதைப் பாருங்கள். தமது முதற்பேறானவரை உலகத்தில் பிறவேசிக்கச் செய்தபோது; தேவ தூதர்கள் யாவரும் அவரைத் தொழுது கொள்ளக் கடவர்கள் என்றார். இந்த வசனத்தின்படி தேவ தூதர்கள் இயேசுவை தொழுதுகொண்டார்கள் என்பதை பார்க்கிறோம்.ஆகவே இயேசு வணங்கப்பட்டார் என்பது உண்மையே ! உன் தேவனாகிய கர்த்தருக்கு பயந்து,அவருக்கே ஆராதனை செய்து, என்று உபாகமம் 6:13 சொல்லுகிறபடி பார்த்தால் இயேசுவை தேவ தூதர்கள் ஏன் தொழுதுகொள்ள வேண்டும் ? இயேசு தேவன் என்பதும் இதில் நிருபிக்கப்படுகிறது. மேலும் தேவ தூதர்கள் இயேசுவை தொழுதுகொள்ள வேண்டும் என்கிற கட்டளை முன்னதாகவே சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் இதில் பார்க்கிறோம். இதைத்தான், அவர் தேவ தூதர்களால் காணப்பாட்டார். என்று 1தீமோத்தேயு 3:16 கூறுகிறது.

    * மத்தேயு 2:1,11 வசனத்தில்; பெத்லகேமில் இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, அவர்கள் அந்த வீட்டுக்குள் பிறவேசித்து,பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத் தையும் அதற்கு காணிக்கையாக வைத்தார்கள் என்று பார்க்கிறோம்.

    * அதைப் பணிந்துகொண்டு என்பது இயேசுவை மட்டுமே காண்பிக்கிறது. இது தற்ச்செயலாக நடைப்பெற்றதும் அல்ல. தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களை கொண்டுவருவார்கள். சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள், சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள். என்று சங்கீதம் 72:10,11 வசன‌ங்களில் சொல்லப்பட்டபடியே இதுவும் நடந்தது என்பதை காண்கிறோம்.!

    * சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள். என்று சங்கீதம் 72:11 ல் தீர்க்க தரிசனமாய் சொல்லியிருக்கும் பொழுது, மேற்கொண்டு சொல்லப்பட்டபடியே எல்லோரும் அவரை வணங்குவதால், இயேசு என்னை வணங்குங்கள் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்பதும் தெளிவாகிறது. காரணம் அவரை தேவனென்று மக்கள் உணர்ந்து கொண்டு அவரை வணங்குவார்கள் என்பது இயேசுவுக்கு தெறியும். யாரையும் கட்டாயப்ப‌டுத்தி என்னை வணங்கு என்று சொல்லவேண்டிய அவசியம் இயேசுவுக்கு இல்லை.! உண்மை
    தெய்வம் யாரென்று அறியும்படி தேடுகிறவர்களுக்கு அவர் அறியப்படுவார் அவர்கள் அவரை வணங்குவார்கள்.

    *அப்போஸ்தலர் நடபடிகள் 9:1முதல் 16 வரை வாசித்துப் பார்த்தால் சவுல் என்கிற பவுல்
    இயேசுவை தொழுதுகொள்கிறவர்களை பிடித்துவர புறப்பட்டதையும், வழியில் இயேசுவால்
    உணர்த்தப்பட்டு கண் பாதிக்கப்பட்டதையும், பிறகு கண் பார்வையை அனனியா என்பவன் மூலம் தேவன் குணமாக்குவதையும் படிக்கலாம். அப்பொழுது அனனியா என்பவன் சொல்கிறான் இங்கேயும் உம்முடைய நாமத்தை தொழுதுகொள்ளுகிற யாவரையும் கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் ஆதிகாரம் பெற்றிருக்கிறானே என்பதை இயேசுவிடம் சொல்வதாக பார்க்கிறோம். அப் 9 :14.

    *இதில் இயேசுவை ஜனங்கள் தொழுது கொண்டுவருகிறார்கள் என்பதை காணமுடிகிறது.
    ஆகவே இயேசு வணங்கப்பட்டார் என்பது உன்மையே !

    *ரோமர் 10:13,14 வசனத்தில் கர்த்தருடய நாமத்தை தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளு வார்கள்? அவரைக் குறித்து கேள்விபடாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? என்று பார்க்கிறோம்.

    *இது இயேசுவையே குறித்து சொல்லப்படுகிறது என்பது முழு அதிகாரத்தையும் வாசிக்கும்
    பொழுது தெறிகிறது.

    1.இதில் இயேசுவை தொழுதுகொண்டு மனிதர்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்று ஆணித்தரமாக சொல்லப்படுவதை பார்க்கிறோம்.

    2.இதற்காகவே பிரசங்கிக்கபடவேண்டும் என்று வலியுருத்தி சொல்வதையும் பார்க்கிறோம்.

    3.பிரசங்கிக்கப்படும் இயேசுவை ஜனங்கள் விசுவாசிப்பார்கள் என்பதையும் பார்க்கிறோம்.
    இதைதான் மாம்சத்தில் வெளிப்பட்ட இயேசு புறஜாதிகளிடதில் பிரசங்கிக்கபட்டார்,
    உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார். என்று 1தீமோத்தேயு 1;16ம் சொல்கிறது. ஆகவே இயேசு வணங்கப்பட்டார் என்பது உன்மையே !

    *1கொரிந்தியர்1:1,2ல் தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறுஸ்துவின் அப்போஸ்தலனா
    கும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தனேயும், கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தமாகும்படி அழைக்கப்பட் டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவரா யிருக்கிற நம்முடைய இயேசுகிறுஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது: என்று இந்த நிருபம் ஆரப்பிப்ப‌தை பார்க்கிறோம்.

    * இதில் இயேசு கிறுஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும்
    எழுதுகிறதாவது: என்று சொல்லப் பட்டிருப்பதை கவணிக்கவேண்டும் இயேசுவை தேவனாக ஏற்றுக்கொண்ட மக்கள் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் ஏன் அரபு நாடுகளிலும் வாழ்ந்தபடியால் (அப் 2 வெளி 1,2அதிகாரதில் பார்க்கவும்) இயேசு கிறுஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் என்று நிருபம் எழுதப்பட்டிருக்கிறது
    ஆகவே இயேசு தேவனாக தொழுதுகொள்ளப்பாட்டார் என்பது உன்மையே !!!

    *உன்மைகள் இப்படியிருக்க இயேசு இறைவனா? அவர் தன்னை வனங்கு என்று சொன்னாரா?
    என்று கேட்பதெல்ளாம் 1கொரிந்தியர்11:3ன்படி சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே
    ஏவாளை வஞ்சித்தது,உங்கள் மன‌தும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். என்பதாக அப்போஸ்தலனாகிய பவுலின் மூலம்
    வேத வசனம் நம்மை எச்சரிக்கிறது.எனவே கிறிஸ்துவுக்கு எதிராய் எழுப்பப்படும் கேள்விகள்
    இயேசு தேவன் என்கிற உண்மையிலிருந்தும்,அவரை தொழுதுகொள்கிறவர்கள் இரட்சிக்கப்ப‌
    டுவார்கள் என்கிற உண்மையிலிருந்தும் சாத்தான் உங்களை வஞ்சிக்கப்பார்க்கிறான் என்பதை
    அறிந்துகொள்ளுங்கள்,! ஒருவனும் உங்களை வஞ்சிக்காதபடி எச்சருக்கையாய் இருங்கள்.!

    உங்களை இரட்சிக்க வந்த இயேசு கிறிஸ்துவுக்கு எதிராய் குரல் கொடுக்கும் இஸ்லாம்
    போதகர்களே! யெகோவாவின் சாட்சிகள் என்று தேவனுடைய பெயரில் செயல்படுகிற அந்தி
    கிறிஸ்துவின் ஆவியை உடையவர்களே! நீங்கள் கேட்டதற்கான கேள்விகளுக்கு உரிய பதில் இதோ !!!. எங்கள் கேள்விகளுக்கு உங்களிடம் ஆதாரப்பூர்வமான பதில் இருக்கிறதா ???????????

    * குறிப்பு: இயேசுவே தேவன் என்பதற்கு வேதாகமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வசன‌
    ஆதாரங்கள் உண்டு என்பதை என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவின் நாமத்தில் தெறிவித்துக்கொள்கிறேன். D.S.D

    Reply
  3. John Gideon says

    February 5, 2014 at 2:31 PM

    Really a great comment and beautiful work… God Bless your ministry abundantley

    Reply
  4. VETRICHELVAN says

    September 16, 2014 at 7:33 PM

    இயேசுவே தேவன் என்பதற்கு வேதாகமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வசன‌
    ஆதாரங்கள் உண்டு என்பதை என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவின் நாமத்தில் தெறிவித்துக்கொள்கிறேன்

    -செல்வன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network