கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள்-29
ரோஹிங்கியா மக்கள் :புதிய வீடு,சமாதானம் மற்றும் விடுதலையைத் தேடும் 20,00,000க்கும் அதிகமான மக்கள்.
ரோஹிங்கியா மக்களின் ஜனத்தொகையைக் குறித்த சரியான கணிப்பை சொல்ல முடியாது,காரணம் அவர்கள் எந்த ஒரு நாட்டின் குடிமக்களாகவும் அங்கிகரிக்கப்படவில்லை.பெரும்பா
முஸ்லீம் ரோஹிங்கியா மக்கள் ஆரம்பத்தில் மியான்மர்(பர்மா) நாட்டிலிருந்து வந்தவர்கள்.இவர்கள் இரண்டாம் உலகப் போர் தொடங்கி தங்கள் சொந்த நாட்டிலேயே கொடுமைப் படுத்தப்பட்டு அகதிகளாக வாழ்கின்றவர்கள்.மியான்மரில் தற்பொழுது ஆளுகின்ற இராணுவ ஆட்சியாளர்கள் தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பர்மீய தேசப்பற்றையும்,புத்தமதத்தையும் வெகுவாக சார்ந்திருக்கிறார்கள்,எனவே,ரோ
ரோஹிங்கியா மக்கள் தற்போது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் சிதறிக் கிடக்கிறார்கள்.தாய்லாந்து-மியா
வேதாகம மொழிபெயர்ப்பு: ரோஹிங்கியா மொழியில் வெளியீடுகள் வெளியிடுவதற்கு அரபு மொழி சார்ந்த எழுத்தை (அரபு+ சில அடிகப்படியான உச்சரிப்புகள் மற்றும் எழுத்துக்கள்) மியான்மரில் பயன்படுத்துகின்றனர்.மேலும் ரோமன் எழுத்துக்களைச் சார்ந்த முறை ஏற்கனவே இணையதளத்தில் இருக்கின்றன).குறிப்பிடத்தக்க எண்ணிக்கையுள்ள ரோஹிங்கியா மக்கள் பங்களாதேஷில் அகதிகளாக வாழ்ந்துள்ளதால் பெங்காலி எழுத்துக்களை பயன்படுத்துவதில் ஆர்வமாய் இருக்கின்றனர். இதன் விளைவாக வேதாகமம் குறைந்த பட்சம் மூன்று வித்தியாசமான எழுத்துக்களிலும் இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஜெபக்குறிப்புகள்.
தற்பொழுது 21 வேதாகமக் கதைகள் ரோஹிங்கியா மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.அவைகள் வருகின்ற மாதங்களில் விநியோகத்திற்கென்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.இவைகள் சரியான நபர்கள் கையில் கிடைக்கவும்,அவர்கள் அதை வாசித்து ஆண்டவரிடம் திரும்பவும் ஜெபியுங்கள்.
எந்த பகுதியை மொழிபெயர்ப்பது,அதனை எவ்வாறு விநியோகிப்பது போன்றவை மிகப் பெரிய சவாலாய் இருக்கிறது. தேவ ஞானம் கிடைக்க ஜெபியுங்கள் .
மொழிபெயர்ப்பு பணிகளுக்கு நல்ல செய்தித் தொடர்பு,கவனமான ஒருங்கிணைப்பு தேவை.இதற்காக ஜெபியுங்கள்.
ரோஹிங்கியா மக்களுக்காகவும்,இவர்களுக்கு மேசியாவை அறிவிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்காகவும் ஜெபியுங்கள்.சில விசுவாசிகள் ரோஹிங்கியா மக்களுக்கு உதவி செய்ய முன் வந்திருக்கிறார்கள்.இன்னும் பலர் எழும்ப ஜெபியுங்கள்.
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/asia-east/rohingya-people-myanmar/
Leave a Reply