கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள்-27
கொடுங்கள்,அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் லூக்கா 6:38ல் இருந்து முக்கியமான வார்த்தைகள்.
அப்போஸ்தலனாகிய பவுல் தனது ஊழியங்களை பல்வேறு விதங்களில் நிறைவேற்றினார். சில நேரங்களில் கூடாரம் கட்டும் தொழில் செய்து பணம் சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. மற்ற நேரங்களில் மக்கள் அவரது தேவைகளுக்காகக் கொடுத்தனர்,எனவே அவர் ‘தன்னை முழுவதுமாக வார்த்தைக்குக் கொடுக்க முடிந்தது. இயேசுவே மேசியா என்று பயபக்தியோடு யூதர்களுக்கு அறிவிக்க முடிந்தது.’
பிலிப்பியர் 4:10-19 ல் அப்போஸ்தலருடைய மனநிலைகளைப் பற்றி படிக்கிறோம்.எந்த சூழ்நிலையிலும் மன ரம்மியமாயிருக்கக் கற்றுக் கொண்டார். என்று அறிந்து கொள்ளுகிறோம். வாழ்ந்திருக்கவும் அதே சமயத்தில் தாழ்ந்திருக்கவும் அவருக்குத் தெரிந்திருந்தது. பவுல் நன்கொடைகளைப் பெற்றுக் கொண்டபோது அவர் எளிதாக பிரசிங்கப்பதிலும்,உபதேசப்பதிலு
உலகம் முழுவதும் நடக்கிற முஸ்லீம் ஊழியங்களுக்கு பணம் தேவைப்படுகிறது.ரேடியோ,இன்டர்நெ
பாரம்பரிய முறையில் செய்யப்படுகின்ற உள்ளுர் ஊழியங்களும் உலக அளவில் பலன் தரத்தான் செய்கின்றன. சில முஸ்லீம் சூழ்நிலைகளில் விசுவாசிகள், சுவிசேஷத்திற்கு கதவை அடைந்திருக்கின்ற நாடுகளுக்குள் செல்வதற்காக சாதாரண வேலைகளில் சேர்ந்த பணியாற்றுகின்றனர். பல நேரங்களில் இந்த விசுவாசிகள்,தங்கள் வேலைகள் மூலமாக சமுதாயத்தில் முக்கியமான பங்குகளை நிரப்புகின்றனர்.சில வேலைகளில் அவர்களது வேலைகளுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும் ஆனால் சில வேலைகளில் அவ்வாறு இல்லை,எனவே மேலும் உதவி அவர்களுக்குத் தேவைப்படுகிறது.
முஸ்லீம்கள் சில வேலைகளில் குற்றஞ்சாட்டிலும்,பணத்தைக் கொடுத்து மக்களை மாற்றும் கொள்கையை கிறிஸ்துவ ஊழியங்கள் ஒரு போதும் கையாண்டதேயில்லை.விசுவாசிகளின் புதிய சமுதாயங்களை முஸ்லீம் உலகத்தில் நாட்டுவதற்கு எடுக்கப்படும் பெரும்பாலான முயற்சிகள் முன்று சுய மாதிரியின் அடிப்படையில் அமைந்தவைகளாகும்,இந்த மாதிரி
புதியதாக ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு விசுவாசிகளின் குழுவையும் கீழ்கண்டவாறு உற்சாகப்படுத்துகிறது:
சுய ஆளுகை:தன்னுடைய உள்ளுர்,சுதேச தலைமைத்துவத்தைக் கொண்டுள்ளது.
சுய சார்பு: பொருளாதார ரீதியாக தன்னையும், தனது ஊழியங்களையும், தனது சொந்த ஆதரங்கள் மூலம் காப்பாற்றிக் கொள்ளக்கூடியது.
சுய அபிவிருத்தி: புதிய விசுவாச சமுதாயங்களையும் ஏற்படுத்துவதன் மூலம் தன்னைப் போன்ற மற்றொன்றை உருவாக்கக் கூடியது.
சில வேலைகளில் உபத்திரவம், பொருளாதார கஷ்டங்கள்,இயற்கை பேரழிவுகள் போன்ற சூழ்நிலைகளால் இந்த மூன்று சுய மாதிரி குறைவு படலாம். விசுவாசிகள் தங்கள் சகோதர சகோதிரிகளுக்குத் தோள் கொடுப்பது மிகவும் சரியான ஒன்றே.(2 கொரி.8:1-21).
’30 நாட்கள்”ஊழியம் உங்களை முஸ்லீம் ஊழியங்களுக்குக் கொடுக்கும்படியாக உற்சாகப்படுத்துகிறது.நாம் அனைவரும் நமது பொருளாதரங்களோடு ‘முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தைத் தேடுவோம்.’ நீங்கள் எவ்விதம் கொடுக்கப் போகிறீர்கள் என்று சற்று நேரம் ஆராய்ந்து பாருங்கள்.
உலகமெங்கும் நடைபெறும் முஸ்லீம் ஊழியங்களுக்குக் கொடுப்பது அதிகரிக்க ஜெபியுங்கள்.
இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிற பல்வேறு வகையான முஸ்லீம் ஊழியங்களுக்காக குறிப்பிடப்பட்டுள்ள வேத ஆதாரங்களோடு ஜெபியுங்கள்.
இந்த ஊழியங்களின் முக்கியத்துவத்தை திருச்சபையானது உணர்ந்து கொள்ளவும்,இதன் தேவைகளை பிலிப்பு சபையாரைப் போல சந்திக்க முன்வரவும் ஜெபியுங்கள்.
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/ministry/important-words-from-luke-638/
Leave a Reply