கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள்-26
வல்லமையின் இரவு –லைலதுல் அல் கதிர் முகமது வெளிபாடு பெற்றுக் கொண்டதாக கூறப்படும் இரவு
ஃபாத்திமா மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். காரணம் அவளது கணவன் சலீம் தனது ஆசிரியர் குடும்பத்தை தங்களோடு நோம்பு திறக்கும் வைபவத்தைக் கொண்டாட அழைத்திருந்தார்.அந்த நாள் வரை ஆண்கள் ஒருவரொடொருவர் பேசிக் கொண்டிருக்க,பிள்ளைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருக்க ஃபாத்திமா சாராவோடு பல உற்சாகமூட்டும் உரையாடல்களை மேற்கொண்டிருந்தாள்.சாரா கடந்த முறை வந்திருந்த போது ஃபாத்திமாக்காக ஜெபிக்க முன் வந்தாள்.அவ்விதம் சாரா ஜெபித்த போது ஒரு விதமான வித்தியாசமான அமைதியை உணர்ந்தாள்,இன்னும் அதிக ஜெபத்திற்காக எதிர்நோக்கியிருந்தாள். சாராவும் அவள் குடும்பத்தினரும் மேசியாவாகிய இயேசுவைப் பின்பற்றுபவர்கள்.
ஃபாத்திமா சாராவின் வரவினால் மாத்திரமல்ல அதை விட அதிகமாக அன்று லைலதுல் அல் கதிர் என்பதினாலும் உற்சாகமாயிருந்தாள்.தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று ஜெபித்த தன் ஜெபத்திற்கு பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ,அன்று இரவு முழுவதும் விழித்திருந்து ஜெபிக்க நினைத்திருந்தாள்.மிகுந்த ஆவலான எதிர்ப்பார்ப்புடனும்,அதிக விடுதலையோடும், இந்த ஆண்டு ஜெபிக்க முடிவு செய்தாள்.இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராம்ஜான் முடிவில் இரத்தப் போக்கு அவளை அசுத்தமாக்கி விட்டதால் அவளால் ஜெபிக்க முடியவில்லை. அதற்குப் பிறகு அவள் கர்ப்பமானதால் அடுத்த வருடமும் குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டியிருந்ததால், நோம்பு இருக்கத் தகுதியற்றவளாகி விட்டாள்.ஃபாத்திமா 3 பெண்குழந்தைகளை பெற்றிருந்தாள்,இருப்பினும் சலீம் அவளை நிராகரிக்கவில்லை.ஆனால் அவளுடைய மாமியார் ஒரு மகனைப் பெறாததால் அவளை சபித்துக்கொண்டிருந்தாள்.தனது மகன் இன்னொரு மனைவியைத் திருமணம் செய்து கொள்ள உற்சாகப் படுத்தினாள். அந்த பயமுறுத்தலால் அவள் பயந்து போய் ஒரு பரிசுத்த மனிதருடைய கல்லறைக்குச் சென்று தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று புண்ணிய யாத்திரை சென்றாள்.மேலும் அவள் தனது எல்லா மார்க்கக் கடமைகளையும்,நிறைவேற்ற மிகவும் கடினமாக உழைத்தாள்.இன்றைக்கு அவளுக்கு அதிக நம்பிக்கை உண்டு ஏனென்றால் அது வல்லமையின் இரவு.
சூரா 96ன் (குரான் அத்தியாயம் 96) படி முகமது குரானின் முதல் வெளிப்பாட்டை இந்த இரவில் பெற்றார். இந்த இரவிலே ஏறெடுக்கப்படும் ஜெபம் நன்றாகக் கேட்கப்படும் என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை.இந்த இரவிலே செய்யப்படும் ஜெபம் ஒவ்வொரு நாளும் ஒழுங்காக செய்யத் தவறிய ஜெபங்களுக்கு ஈடுசெய்து விடும் என்று சிலர் நம்புகின்றனர். வல்லமை இரவு ரம்ஜானின் கடைசி பத்து நாட்களில் வரும். பெரும்பாலான முஸ்லீம் மத குருக்கள் 27 வது நாளில் தான் அது வருகிறது என்று நம்புகின்றனர். ஒவ்வொரு புதிய நாளும் சூரியன் மறையும் போது தொடங்குகிறது.ஆகவே இந்த ஆண்டில் வல்லமை இரவு ஆகஸ்டு 17ம் தேதி இரவு இருக்கும்.
ஃபாத்திமா,வல்லமை இரவை ஆவலோடு எதிர்நோக்கும் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்பெண்களின் பிரதிநிதி ஆவாள். ஆனால் இயேசுவை அறிமுகப்படுத்தும் சாராக்கள் ஒரு சிலருக்கே கிடைக்கிறது.
இந்த இரவில் இயேசுகிறிஸ்துவின் அசாதாரண வெளிப்பாடு சொப்பனங்கள்,தரிசனங்கள் மூலமாக கிடைக்க ஜெபியுங்கள்.
உங்கள் நகரத்தில்,பகுதியில் அல்லது நாட்டில் அல்லது வேறு எங்கோ உள்ள முஸ்லீம்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக ஜெபியுங்கள்.
வெளிபாடு பெற்ற முஸ்லீம்கள் விரைவில் விசுவாசிகளை சந்திக்கவும் அவர்கள்இவர்கள் சீஷர்களாக மாறுவதற்கு உதவி செய்யவும் ஜெபியுங்கள்.
இந்தியாவில் உள்ள விசுவாசிகள் இந்த இரவில் விழுத்திருந்து இந்திய முஸ்லீம்களின் இரட்சிப்பிற்காக வேண்டும்படி ஜெபியுங்கள்.
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/mid-near-east/the-night-of-power/
Leave a Reply