கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள்-25
சுடானைச் சேர்ந்த ரஷைதா மக்கள் ஆப்பிரிக்க பாலைவனத்தில் இருக்கும் அரபியர்கள் வம்சா வழியினர்.
அதிகாலைப் பொழுதில்,வெளியில் மூடப்பட்ட சிறு நெருப்பில் தகர டப்பாகளில் காப்பிக் கொட்டைகள் வறுக்கப்படுகின்றன.பெண்கள் கூடாரங்களின் பக்கங்களைத் தூக்கி விட்டு இன்னுமொரு புதிய நாள் காலையில் வெளிச்சத்தை உள்ளேவிட்டனர்.ஆண்கள் மாடுகளையும்,ஓட்டகங்களையும் மந்தையாக ஓட்டிக் கொண்டு செல்லும்போது பையன்களும் தங்கள் தகப்பானார்களோடு சேர்ந்து கொள்ளுகின்றனர். சிறு பெண்கள் அரை கிலோ மீட்டர் தூரம் வெறுங்காலில் ஓடி தங்கள் சகோதர சகோதரிகளை சந்திக்கச் செல்கின்றனர். காற்றினால் மணல் தூக்கி வீசப்படுகிறது,தேள்கள் பாலைவனத் தரையில் விரிக்கப்பட்ட குளிர்ச்சியான கம்பளங்களின் அடியில் மறைந்து கொள்ளுகின்றன. அது பாலைவனத்தில் இன்னும் ஒரு மெதுவான, எளிமையான நாள்.
வட கிழக்கு சூடாவில் உள்ள 1,00,000 எண்ணிக்கையுள்ள ரஷைதா பழங்குடியினர் சவுதி அரேபியாவில் தோன்றின பெடோயின் குழுவைச் சேர்ந்தவர்கள். 150 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதிக்கு ஓடி வந்து விட்டனர். இப்பழங்குடியினரின் மொழி அரபு,மதம் இஸ்லாம் ஆகும். அவர்களுக்குப் பிடித்த வாகனம் 1980 வது ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட 4×4 பிக் அப் வண்டியாகும். இதனை பையன்கள் 12 வயது ஆகும் போது ஓட்டக் கற்றுக் கொள்ளுகின்றனர். பெண்களுக்கான திருமணவயது 14-17 வருடங்களாகும். பல ரஷைதாக்கள் குறிப்பாக பெண்கள், 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் படிப்பறிவில்லாதவர்கள். பெடோயின் பாரம்பரியம் என்பது அவர்களது சரித்திரம்,மதம் மற்றும் ஒட்டகங்களின் வரலாறு ஆகியவற்றை வாய் வழியாக அறிவித்துக் கொண்டே வருவதாகும்.
ரஷைதா பழங்குடியினர் மத்தியில் பல சமுதாய மட்டங்கள் இருக்கின்றன. பெரும்பாலானோர் பொருட்களை வைத்து வியாபாரம் செய்பவர்கள்.பொதுவாக ஜனங்கள் ஏழைகளாக இல்லை,ஆனால் எளிமையான வாழ்வு வாழத் தீர்மானித்துள்ளனர். அவர்களது வீடுகள் வழக்கமாக அவர்களது நாடோடி வாழ்க்கைக்கு வசதியாக சிறிய குடிசைகள் அல்லது கூடாரங்களாக இருக்கின்றன. அவர்களது பணத்தை அதிகமாக தங்கள் அல்லது ஓட்டகங்களில் முதலீடு செய்கின்றனர். ரஷைதா மக்கள் எரித்திரியா நாட்டில் எல்லை வழியாக சூடான் நாட்டிற்குள் கடத்தல் தொழில் செய்கின்றனர். இது உள்ளுர் அரசாங்கத்திற்கும் அவர்களுக்குமிடையே உரசலை உண்டாக்குகிறது,காரணம் இவர்கள் வரி கட்டுவது இல்லை. இவர்கள் எளிதாக அதிகாரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளுகின்றனர். லைட்டுகளை அணைத்துவிட்டு பாலைவனத்திற்குள் நட்சத்திரங்களைப் பின்பற்றி நேராகச் சென்று விடுகின்றனர். இப்பழங்குடியினரைச் சேர்ந்த ஒரு மனிதன் மண்வாசனையை வைத்துத் தான் இருக்குமிடத்தைச் சொல்லி விடுவான்.
இம்மக்கள் கூட்டத்தினர் வேண்டுமென்றே தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். தங்களுக்கு அருகாமையில் உள்ள மற்ற பெடோயின்களோடோ அல்லது உள்ளுர் சூடானிய மக்களோடோ எந்த சம்பந்தமும் வைத்துக் கொள்வதில்லை.ரஷைதா சுத்தமான அரபியர்கள் கலப்புத் திருமணம் செய்யவில்லை,முகமது நபியின் இரத்தசம்பந்த உறவின் வழி வந்தவர்கள்.எத்தியோப்பிய வழி வந்த சில விசுவாசிகள் இந்தப் பகுதியில் இருக்கின்றனர். எரித்திரிய கரையோரத்தில் உள்ள சில ரஷைதாக்கள் சில வருடங்களுக்கு முன் இராணுவத்தில் சேர்ந்துள்ளனர். மற்ற இராணுவத்தினர் மூலமாகக் கிறிஸ்துவை அறிந்து கொண்டுள்ளனர். இது தவிர அவர்களது கலாச்சாரம் மற்றும் நம்பிக்கை முறைகள் மாறவே இல்லை.
ஜெபக்குறிப்புகள்.
ஏசாயா:45:2-3ஐ வைத்து ரஷைதா மக்களுக்காக ஜெபியுங்கள்.
இம்மக்களை சந்திக்க முயற்சிகள் எடுக்கப்பட ஜெபியுங்கள்.ரஷைதா மக்கள் சுவிசேஷத்தை அறிந்து கொள்ளுவதற்குத் தடையாக இருக்கிறது இரும்புத் தாழ்ப்பாள்களை தேவன் உடைத்தெறியட்டும்.
இயேசு கிறிஸ்து முழுவதுமாய் அவர்களுக்கு வெளிப்படுத்தப்படும் போது அவரைப் பொக்கிஷமாக எண்ணி ஏற்றுக் கொள்ள ஜெபியுங்கள்.
இந்த நாடோடி மக்கள் கூட்டத்தினரோடு உறவுகளைக் கட்டி தியாகத்தோடு அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கிற ஊழியர்களை தேவன் அனுப்பும்படி ஜெபியுங்கள்.
தேவன் ரஷைதா விசுவாசிகளை அவர்கள் வாழும் சண்டைகள் நிறைந்த பகுதியில் சமாதானம் பண்ணுகிறவர்களாக விளங்க பெலப்படுத்த ஜெபியுங்கள்.
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/north-african/rashaida-sudan/
Leave a Reply