கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நாள்-24
நைஜீரியாவில் உள்ள பொகொ ஹராம் சாட்சி: இயேசுவின் நாமத்தினால் இரட்சிப்பு.
திரு.உசைனி அவர்கள் நைஜீரியாவிலுள்ள ஜோஸ் மாநிலத்தில் பிறந்த ஃபுலானி பாஸ்டர் ஆவார்.இந்த முந்நாளைய முஸ்லீம் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த கிறிஸ்தவ கூட்டங்கள் மூலமாக மேசியாவாகிய இயேசுவை விசுவாசிக்கத் தீர்மானித்தார். அவர் தனது சொந்த தொழிலை கவனித்துக் கொண்டே பாஸ்டராகவும் வேலை செய்கிறார்.இவரது முந்நாளைய “முஸ்லீம் தொடர்புகளாலும் மற்றும் நண்பர்களாலும் இவர் உண்மையான விசுவாசி என்ற பெயர் பெற்றவர்.அவர்களில் பலர் பொகொ ஹராம் என்ற முஸ்லீம் அந்தரங்கக் குழுவில் சேர்ந்தனர். சமீபத்தில், பாஸ்டர் உசைனி தன் சபையின் அங்கத்தினர் பலரோடு ஒரு கிறிஸ்தவ கூட்டத்திலிருந்து பஸ்ஸில் திரும்பி வந்த கொண்டிருந்த போது அவர்களது வாகனம், ஒளிந்து கொண்டிருந்த தீவிரவாதிகளுக்கு இலக்கானது.ஒவ்வொரு முறை குண்டு சத்தம் கேட்கும்போது விசுவாசிகள் இயேசுவின் நாமத்தை கூப்பிட்டனர்.
பஸ் டிரைவர் லாவகமாக ஓட்டி அவர்களிடமிருந்து தப்பித்து ஒரு மருத்துவமனைக்கு நேராக வண்டியைக் கொண்டு சென்றார்.பஸ்ஸில் இருந்த பெரும்பாலான மக்கள் காயமடையாமல் இருப்பதைக் கண்டு மருத்துவமனை ஊழியர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.காயம் அடைந்தவர்களுக்கும் எலும்பு முறிவு போன்ற பெரிய காயங்கள் இல்லை. எல்லோரும் அதே மாலையில் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடிந்தது.
பொகொ ஹராம் இயக்கத்தின் துப்பாக்கிச் சுடுபவர்களின் இலக்காக பாஸ்டர் உசைனி இருந்தது இது முதல் தடவை அல்ல. ஒவ்வொரு முறையும் எவ்வாறு இயேசு தனக்கு உண்மையான பாதுகாப்பாகவும், கோட்டையாகவும் இருந்திருக்கிறார் என்பதை அவர் கண்டிருக்கிறார். வடக்கு நைஜீரியாவில் குறிப்பாக போர்னோ மற்றும் ஜோஸ் மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ சமுதாயத்திற்காக ஜெபியுங்கள். அவர்கள் ஜீவனை எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கையிலிருந்து விடுவிக்கப் படும்படியாக ஜெபியுங்கள்.இரு கூட்டத்தாரும் சமாதனத்தோடு வாழவும்,அநேக முஸ்லீம்கள் இரட்சிக்கப்படவும் ஜெபியுங்கள்.
பல அடிப்படைவாத,தீவிரவாத சக்திகள் நைஜீரியாவில் (மக்கள் தொகை 15.5 கோடி) வேலை செய்து கொண்டு இருக்கின்றன. நாட்டின் பாதி பேர் இஸ்லாமிய பின்னணியைச் சார்ந்தவர்கள்.
அவர்கள் வெவ்வேறு நிலைகளில் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள்,வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள்.
பொகொஹராமைப் புரிந்து கொள்ளுதல்:
பொகொ ஹராம் என்பது 2002ம் ஆண்டில் துவங்கப்பட்ட தீவிர்வாத இஸ்லாமிய குழு. இது 2009ல் சர்வதேசப் பார்வைக்கு வந்தது.அப்பொழுது நைஜீரிய இராணுவம் இக்குழுவின் இராணுவ வீரர்களோடு பல சண்டைகள் இட்டு கிட்டதட்ட 700 பேர் கொல்லப்பட்டனர். பொகொ ஹராம் என்கிற வார்த்தை ஹெளஸா வார்த்தையாகிய “பொகொ’விலிருந்தும்,(பொருள் ‘மேற்கத்திய அல்லது இஸ்லாமியம் அல்லாத”) மற்றும் அரபு வார்த்தையான ‘ஹராம்’லிருந்தும் (பொருள் ‘விலக்கப்பட்டது) வந்ததாகும்.பொகொ ஹராம் மேற்கத்திய கல்வியை மட்டுமல்ல மேற்கத்திய கலாச்சாரத்தையும்,நவீன விஞ்ஞானத்தையும் எதிர்க்கிறது. சமீப ஆண்டுகளில் நைஜீரிய போலீஸ் மீதும்,கிறிஸ்தவ சங்கங்கள் மீதும், தனி நபர்கள் மீதும் நடந்த தாக்குதல்களூக்கு இந்தக் குழுவினரே காரணமாகும்.சபைகள் பல தங்கள் அங்கத்தினர்கள் அநேகரை இழக்கக் கொடுத்திருக்கின்றனர்.
ஜெபக்குறிப்புகள்.
பொகொ ஹராம் குழுவினரையும் மற்றவர்களையும் கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய ஞானத்தைத் தேவன் நைஜீரிய அரசாங்கத்திற்கும், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய அதிகாரிகளுக்கும் அருள ஜெபியுங்கள் (ரோமர் 13:13,14).
தீவிரவாத தாக்குதல்களால் உயிரிழந்திருக்கிற நூற்றுக்கணக்கானவர்களின் குடும்பங்களுக்காக ஜெபியுங்கள்.உள்ளான சுகம், ஆலோசனை, தேவனுடைய ஆறுதல் மற்றும் திட்டவட்டமான உதவி தேவையாயிருக்கிறது.
பொகொ ஹராம் தீவிரவாதகளுக்கு,அவர்களோடு சேர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு கிடைக்க ஜெபியுங்கள்.
தேவனின் பாதுகாப்பு நைஜீரியாவில் உள்ள திருச்சபைக்கும்,விசுவாசிகளுக்
கீழ்க்கண்ட ஒன்று அல்லது இரண்டு முக்கியமான மக்கள் இனத்திற்கு நற்செய்தி அறிவிக்கப்பட ஜெபியுங்கள்.
10 இலட்சத்திற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட் கூட்டத்தினர்.
ஹெளஸா (1.99 கோடி),யோரூபா(83.5 இலட்சம்) எர்வா கனூரி (40 இலட்சம்), சொகோட்டோ
1 இலட்சத்திற்கு மேல் 10 இலட்சத்திற்குள் மக்கள் தொகை கொண்ட கூட்டத்தினர்:
அடமாவா ஃபுலானி (9.75 இலட்சம்),பெளச்சி ஃபுலானி (7.01 இலட்சம்),மாங்கா கனூர்(6.17 இலட்சம்),இக்போ ஃபுலானி (5.2 இலட்சம்),எக்பா (4.18 இலட்சம்), பேட் (3.10 இலட்சம் ),சோங்காய் (2.6 இலட்சம்), அரபு சூவா (2.05 இலட்சம்) பூரா (1.12 இலட்சம்),இகாலா(1.08 இலட்சம்).
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/africa-west/boko-haram-nigeria/
Leave a Reply