கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள்-23
ஜகார்ட்டா,இந்தோனேஷியா கலப்பில்லாத பல முரண்பாடுகளை வெளிக்காட்டும் நகரம்.
இந்தோனேஷியா: ஜனத்தொகை -24 கோடி. உலகிலேயே மக்கள் தொகை அதிகமாக கொண்ட 4-வது நாடு இது பூமத்தியரேகையின் இரு பக்கத்திலும் பரவியுள்ள ஆயிரகணக்கான தீவுகளுடன் 300 வித்தியாசமான மக்கள் கூட்டத்துடனும்,700 வித்தியாசமான மக்கள் மொழிகளுடனும் பெருமையுடன் காணப்படுகிறது.இவ்வாறு மின்னிக் கொண்டிருக்கம் தீவுக்கூட்டங்களின் நடுவில் ஜாவா தீவில் தலைநகரமான ஜகார்ட்டா அமைந்திருக்கிறது. அரசியல் மற்றும் பொருளாதார சம்பந்தப்பட்ட காரியங்கள் இங்கு தீர்மானிக்கப்படுவதால் எல்லா முக்கியமானவைகளும் இங்கு வந்து சேர்கின்றன.யாத்திரிகர்களைக் கவரும் அளவிற்கு வல்லமையான எதுவும் ஜகார்ட்டாவில் இல்லாவிட்டாலும் தனது அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்க்க விரும்பிகிற எந்த ஒரு இந்தோனேஷியனுக்கும் நம்பிக்கை அளிக்கிற ஒன்றாக இருக்கிறது. இது இந்தோனேஷியர்களை எவ்வளவு தூரம் கவர்ச்சித்து இழுக்கிற ஒன்றாக இருக்கிறது என்றால்
ஜபபெட்டாபெக் என்கிற நகரத்தின் சுற்றுப் பகுதியில் அரை விட்டத்திற்குள் 2.6 கோடி மக்கள் வசிக்கின்றனர்.மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இக்கூட்டத்தில் சேர்ந்து கொள்ளுகின்றனர். ஜகார்ட்டாவில் இந்தோனேஷியாவிலுள்ள ஒவ்வொரு மக்கள் கூட்டமும் பிரதிநிதித்துவம் பெற்று இருக்கிறது,பூர்வீகக் குடிகளான முஸ்லீம் பெட்டாவி மக்கள் சிறுபான்மையினராக குறுகிவிட்டனர்.
இந்த பட்டணம் அப்பட்டமான முரண்பாடுகளை வெளிக்காட்டுகிறது.எப்போதும் வளர்ந்து கொண்டிருக்கிற பெரிய பெரிய ஷாப்பிங் கடைகளுக்கு (மால்ஸ்) மற்றும் நவீன உயரமான அலுவலகக் கட்டங்களுக்கு அருகிலேயே ஏழ்மையான குடிசைகளும் காணப்படுகின்றன.ரயில்வே தண்டவாளங்களின் அருகிலும் அசுத்தங்கள் புரண்டு ஓடும் கால்வாய்களின் ஓரங்களிலும் அநேகர் குடிசைகளில் வாழ்கின்றனர். தெருக்களில் மாத்திரம் எல்லாரும் சமம் என்ற நிலை இருக்கிறது அனுதின சாலை நெரிசல்களில் புதிய மெர்ஸிடிஸ் காரும் ,துருப்பிடித்த வெல்டிங் செய்து சேர்த்து வைக்கப்பட்டுள்ள மினி பஸ்களும் ஒன்றாக நிற்கின்றன.
இன்னும் ஒரு முரண்பாடு இந்தப் பட்டணத்தின் முத்திரையை,ஏன் இந்த நாட்டின் முத்திரையையே பதிக்கிற ஒன்றாய் இருக்கிறது. மக்கள் தொகையில் 85% முஸ்லீம்கள்,சுமார் 13% கிறிஸ்துவர்கள், அதிகாரப்பூர்வமாக மத சுதந்திரம் இருக்கிறது. ஆனால் கிறிஸ்தவ சிறுபான்மையினர் பாரபட்சமான நடத்தப்படுவது அனுதின சாட்சியாய் இருக்கிறது.தீவிரவாத இஸ்லாமிய குழுக்களுக்கு ஆதரவு அளிக்கிற அதே நேரத்தில் சுவிசேஷ எண்ணம் கொண்ட வேதாகமக் கல்லூரிகள் மற்றும் ஸ்தாபனங்களுக்கும் அடைக்கலம் கொடுக்கிறது. எது எப்படியிருந்தாலும் இந்தோனேஷியாவில் எதிர்காலம் ஜகார்ட்டாவில் நிகழ்கின்ற காரியங்களைப் பொறுத்தே இருக்கிறது.
ஜெபக்குறிப்புகள்.
ஜகார்ட்டா கவர்னர்: ஃபெளசி போவோ தலைமையில் செயல்படும் அரசாங்கத்திற்காக ஜெபியுங்கள். உள்ளுர் மற்றும் தேசிய காரியங்களை நடத்துவதற்கு வேண்டி ஞானத்தைத் தேவன் அவர்களுக்குத் தர ஜெபியுங்கள்.
இந்தோனேஷியா தேசத்தில் அடிக்கடி முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் ஏற்படும் சச்சரவுகள் நீங்க சமாதானம் நிலவ ஜெபியுங்கள்.
ஜகார்ட்டாவில் உள்ள ஏழைகளின் சரீர மற்றும் ஆவிக்குரிய தேவைகளை சந்திப்பதற்கு எடுக்கப்படுகிற ஒவ்வொரு முயற்சிக்காகவும் ஜெபியுங்கள். பல ஸ்தாபனங்கள் பல்வேறு திட்டங்கள் மூலமாக இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயன்று வருகின்றன. கூடவே இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அறிவித்து வருகின்றன.
தேவன் பெட்டாவி மக்களுக்கு தம் கிருபையை ஊற்றும்படி ஜெபியுங்கள்.இவர்கள் மத்தியிலிருந்து 100 கிறிஸ்தவர்களே உள்ளனர்.
ஜகார்ட்டாவில் உள்ள கிறிஸ்தவர்களுக்காக ஜெபியுங்கள். அவர்களால் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.பல திருச்சபைகள் சுவிசேஷம் அறிவிப்பதைக் குறித்த அக்கறையின்று இருக்கின்றன். நற்செய்தி அறிவிக்கின்ற விசுவாசிகளுக்கு தேவனுடைய பெலன், தைரியம் மற்றும் பாதுகாப்பு கிடைக்க ஜெபியுங்கள்.
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/asia-east/indonesia/jakarta-indonesia/
Leave a Reply