கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள்-21
மத்திய கிழக்கில் உள்ள ட்ருஸ் மக்கள் இஸ்லாமோடு சம்பந்தப்பட்டவர்கள், ஆனால் வித்தியாசமான பாதையில் செல்கிறவர்கள்
ட்ரூஸ் மக்கள் தங்களுக்கென்று ஒப்புமையற்ற ஒரு மதத்தை வைத்துள்ள ஜனங்கள்.மத்திய கிழக்கில் அரபு மொழி பேசும் 10 இலட்சம் ட்ருஸ் மக்கள் இருக்கின்றனர்.மற்றவர்கள் அவர்களை முஸ்லீம்களாக கருதுகிறார்கள்,ஆனால் அவர்கள் தங்களை அவ்வாறு கருதவில்லை. இவர்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,இஸ்லாமின் ஷியா கிளையிலிருந்து பிரிந்தவர்கள்.குரானை இன்னும் பரிசுத்தமான புத்தகங்களில் ஒன்றாகக் கருதுகின்றனர்.ட்ருஸ் மக்கள் மசூதியில் ஒரு போதும் தொழுகை செய்வது இல்லை ஆனால் பக்தியுள்ளவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை மாலையிலும் கூடுகின்றனர். இவ்விதமான கூடுகைகளில் பெரியவர்கள்,ட்ரூஸ் தத்துவங்களை விளக்கிக் கூறுவார்கள்.அவர்களது போதனைகள் ஞானப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவைகள்.இது இரகசியமானதாகவும் பரிசுத்தமானதாகவும் கருதப்படுகிறது.ட்ரூஸ் சமுதாயம் தனித்திருக்கிற,சமுதாய ஈடுபாடுகளைத் தவிர்க்கிற ஒன்றாக இருக்கிறது. வேறு மதத்தைச் சேர்ந்த எந்த ஒவ்வரும் ட்ரூஸாக மாறவே முடியாது.திருமணத்தின் மூலமாகக் கூட முடியாது.
ட்ரூஸ் மக்கள் ஆத்துமாக்கள் மறுஜன்மம் எடுக்கிற நம்பிக்கையை வலியுறுத்துகின்றனர்.அவர்களது மறுஜென்ம நம்பிக்கை ‘வெளியே பேசு’என்கிற பழக்கத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது.அது சிறு குழந்தைகளை குறி சொல்வதற்கு உற்சாகப்படுத்தும் பழக்கமாகும்.சில பிள்ளைகளும் பெரியவர்களும் வெளிப்பாடுகள் கிடைத்து மற்றவர்களது வாழ்க்கையைக் குறித்த தகவல்களை அறிவிக்கின்றனர். மற்றபடி அவர்கள்,அவற்றை அறிந்து கொள்ளவே முடியாது.சிறு பிள்ளைகள் வெளியே பேசும்போது,அது அவர்கள் மறுஜென்மம் எடுத்து வந்திருப்பதற்கு அடையாளமாகவும்,ஆதாரமாகவும், கருதப்படுகிறது.வெளியே பேசும் பழக்கம் ஒரு குழந்தையினுடைய மற்றும் அதன் குடும்பத்தினுடைய முக்கியத்துவத்தையும் சமுதாய அந்தஸ்தையும் ஆமோதிக்கிறது.
சாட்சி: ராகிட் ஒரு ட்ரூஸ் குடும்பத்தில் ட்ரூஸ் போதனைகள் இல்லாமல் வளர்க்கப்பட்டவன்.அவனுக்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றில் மருத்துவ கல்வி பயிலுவதற்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அங்கே அவனும் அவனது மனைவி சாராவும் கடவுளைத் தேடுகிறவதற்கு வித்தியாசமான பாதையைத் தொடர்ந்தனர். சாரா குரானைப் படித்து இஸ்லாமிய வாழ்க்கை முறையை பின்பற்றினாள். அவள் பர்தா அணிந்து கொள்ளவும் தெரிந்து கொண்டாள்.
ஆனால் ராகிட்டின் லெபனான் நாட்டு நண்பன் அவனுக்கு கிறிஸ்தவ நம்பிக்கையை வேதாகமத்தின் மூலமாகப் பகிர்ந்து கொண்டான்.சில காலங்களாக ராகிட் மற்றும் சாராவின் திருமணம் முறியும் அளவிற்கு வந்து விட்டது,காரணம் இருவருமே தங்களது சொந்த மார்க்கத்தைத் தொடருவதை வலியுறுத்தி வந்தனர்.இருப்பினும் ஒரு நாள் ராகிட் தனது விசுவாசத்தை மேசியாவின் மீது வைத்தான். பல மாதங்களாக சாரா தனது கணவனின் வாழ்வில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிற மாற்றத்தை கவனித்தாள்.அவளாகவே இஸ்லாம் மதத்தின் மேல் ஏமாற்றம் அடைந்தாள்.வேதாகமத்தைப் படிக்க ஆரம்பித்தாள், மேசியாவின் மேல் விசுவாசம் வைத்தாள்.
ஜெபக்குறிப்புகள்.
‘வெளியே பேசும்’பழக்கத்தை ட்ரூஸ் மக்கள் கேள்வி கேட்கும்படியாக ஜெபியுங்கள்.அப்படி கேள்வி கேட்பவர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படாதவாறு தேவன் அவர்களைப் பாதுகாக்கும்படி ஜெபியுங்கள்.
ட்ரூஸ் மக்கள் தேவனை கண்டு கொள்ளவும்,அவரை எவ்வாறு ஆராதிப்பது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளவும் ஜெபியுங்கள்.(அப்.16:14)
சமாரியர்கள் எவ்வாறு யூதர்களுக்கு விலக்கப்பட்டவர்களோ அவ்விதமே ட்ரூஸ் மக்களும் பாரம்பரிய முஸ்லீம்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள்.சமாரி
இயேசுவை ஏற்றுக் கொண்டுள்ள ட்ரூஸ் மக்கள் தங்கள் சொந்த சமுதாயத்தில் சாட்சியாக வாழ ஜெபியுங்கள்.
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/mid-near-east/druze-middle-east/
Leave a Reply