கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள்-20.
பாலஸ்தீனப் பகுதிகள் பெத்லகேமுக்கு அருகில் வாழ்கின்றனர் ஆனால் மேசியாவை அறியவில்லை.
தலைமுறைகளாக பாலஸ்தீனர்கள் காஸாவிலும் வெஸ்ட் பேங்கிலும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.வறுமை தாண்டவமாடுகிறது, வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. பாலஸ்தீனர்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியில் செல்லுவதற்கு எளிதில் அனுமதிக்கப்படுவதில்லை. அடிப்படை வசதி மற்றும் சேவைகள் பொதுவாகவே மோசமாக உள்ளன. கஷ்டங்களும், குறைவுகளும் ,ஹாமாஸ் போன்ற தீவிரவாத குழுக்கள், வன்முறைகள் மற்றும் தீவிரவாத செயல்கள் மூலமாக தங்களது திட்டங்களை சுமத்துவதற்கு வாய்ப்புகளைத் தருகின்றன.
பாலஸ்தீனப் பகுதி பெரும்பாலும் அரபு முஸ்லீம்களைக் கொண்டது. சிறுபான்மையாக இருக்கும் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. பல கிறிஸ்தவர்கள் பாலஸ்தீன கிறிஸ்தவ சண்டையின் முன்னணியில் நசுக்கப் படுவதால் மிகவும் சோர்ந்து போய் உள்ளனர்.மோசமான பொருளாதாரத்தின் காரணமாக பலர் வெளியிடங்களுக்குக் குடிபெயர்ந்து சென்று விட்டனர். மற்றவர்களும் அவ்விதமே செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாக தற்சமயம் பெத்லேகமிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் வெகு சில கிறிஸ்தவர்களே உள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முன் மேசியா பிறந்த இடத்தில் இன்று அவரை விசுவாசிப்பவர்களை கண்டு பிடிப்பது கடினமாக இருக்கிறது. இருப்பினும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிற பாலஸ்தீன முஸ்லீம்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களில் சிலர் மேசியாவை சொப்பனங்கள் மற்றும் தரிசனங்கள் மூலமாக சந்தித்திருக்கிறார்கள். விசுவாசியாய் மாறத் தீர்மானிப்பது எப்பொழுதும் மோசமான விளைவுகளோடு சேர்ந்தே வருகிறது. பல நேரங்களில் அவர்கள் குடும்பங்கள் அவர்களை நிராகரித்து தங்களது முதுகைக் காண்பிக்கிறார்கள்.
பாலஸ்தீனப் பகுதிகளில் மேற்கத்திய நாடுகளை விட குடும்ப பந்தங்கள் மற்றும் பழைய பாரம்பரியங்கள் வெளிப்படையாகத் தெரியும். இஸ்லாமை விட்டுவிலகித் தீர்மானிப்பது குடும்பத்திற்கு அவமானத்தைக் கொண்டு வருவதாகக் கருதப்படுகிறது.
எனவே, விசுவாசத்திற்குள் வருகிற முஸ்லீம்கள் குடும்பங்களிலிருந்து விலக்கப்படுகிறார்கள்; உறவினர்களால் நிராகரிக்கப் படுகிறார்கள்,சொத்துக்களின் உரிமையை இழக்கிறார்கள். இதினிமித்தம் அவர்கள் ஆதரவற்றவர்களாக மாறிவிடுகிறார்கள்,அவர்களுக்கு அவசரமாக உதவித் தேவைப்படுகிறது. மேலும் தேவனுடைய குடும்பத்தில் புதிய அங்கத்தினர்களாக மாறுகிற இவர்களுக்கு தேவனுடைய வார்த்தையாகிய பைபிளின் உபதேசம் தேவைப்படுகிறது. இத்தகைய உதவிகள் மூலமாகவே அவர்கள் விசுவாசம் பலமாக விளங்க முடியும், விசுவாசிகளுக்கு மிகவும் எதிராக உள்ள சூழ்நிலையில் தப்பித்துக் கொள்ள முடியும்.
ஜெபக்குறிப்புகள்.
முன்பு முஸ்லீம்களாக இருந்தவர்கள் கிறிஸ்தவ சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதையும், தேவனுடைய அரவணைப்பையும்,அக்கறையையும் உணர்ந்து கொள்ள ஜெபியுங்கள்.
விசுவாசிகளுக்கு தீமையிலிருந்து பாதுக்காப்பு, விடுதலையும் மேலும் இஸ்லாமிய அயலாருடன் உள்ள உறவில் நீடித்திருக்க தயவும் தேவையாயிருக்கிறது.இதற்காக ஜெபியுங்கள்.
இஸ்லாமிய தீவிரவாதமும் வன்முறையும் வளராதிருக்கவும்,பாலஸ்தீனப் பகுதிகளில் அமைதியை நாடுகிறவர்கள் மேல் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தாதிருக்கவும் ஜெபியுங்கள்.
காசாவிலும்,வெஸ்ட் பேங்கிலும் உள்ள விசுவாசிகள் தேவனுடைய அன்பைக் கூறவும் வெளிக்காட்டவும் தேவன் அவர்களை அழைக்கும்படியாக ஜெபியுங்கள்.
பாலஸ்தீனப் பகுதிகளில் சமாதானக் குறைவை அனுபவித்து வரும் முஸ்லீம்கள் சமாதானப் பிரபுவாகிய மேசியாவை சந்திக்கவும் அவரை ஏற்றுக் கொள்ளவும் ஜெபியுங்கள்.
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/mid-near-east/bethlehems-palestinians/
Leave a Reply