கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நாள்-19
மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்த மகுவா நஹாரா மக்கள் தங்கள் உள்ளுர் மசூதிகளில் உண்மையாய் இருக்கும் இஸ்லாமிய மக்கள்.
மொசாம்பிக் நாட்டில் மொத்தம் ஜனத்தொகையில் 20% பேர் முஸ்லீம்கள் ஆவர். மொசாம்பிக் ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ளது.பெரும்பாலான முஸ்லீம்கள் வடக்கே தான்சானியா எல்லைக்கு அருகிலும் கடற்கரையோரத்திலும் வாழ்கின்றனர்.இதில் பெரும்பான்மையானவர்கள் மகுவா நஹாரா இனத்தவர்.இவர்கள் ஏழ்மையானவர்கள், பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்கள் பலர் மொசான்பிக்கின் ஆட்சி மொழியான போர்ச்சுகீசுமொழியை பேச அறியாதவர்கள்.பஞ்சம் மற்றும் வியாதியின் நிமித்தம்,இவர்கள் சராசரியா வாழும் வருடங்கள் வெறும் 50 மட்டுமே.சில விசுவாசிகள் இந்தப் பகுதியில் உடல்நலப் பராமரிப்பு இல்லாத இடங்களில் மருத்துவ உதவி செய்கின்றனர்.
நஹாரா என்றால் முஸ்லீமாகத் தான் இருக்க வேண்டும்,அவர்கள் பெருமையோடு சொல்லுவது.”நாங்கள் மகுவா நஹாரா,நாங்கள் முஸ்லீம்கள்.கடலுக்கு மிக தொலைவில் உள்ள பின்பகுதியில் வாழும் மகுவாக்கள் மது அருந்துகிறார்கள்,பன்றி இறைச்சி அல்லது பாம்பின் மாமிசம் உண்கிறார்கள்.ஆனால் நாங்கள் வெள்ளிக் கிழமைகளில் மசூதிக்குச் செல்கிறோம்’.
நஹாராக்கள் தங்களை முஸ்லீம்கள் என்று அழைத்துக் கொண்டாலும், உண்மையிலேயே இஸ்லாமையும் அதனோடு “எல்லாமே கடவுள்” என்று நம்பும் மூதாதையர்களின் மதங்களையும் சேர்த்து கடைப்பிடிக்கின்றனர்.பயத்தை மேற்கொள்ள மூதாதையர்களைப் பிரியப்படுத்துகிற காரியங்களைச் செய்வதன் மூலமாக இவர்கள் தங்கள் வாழ்வை தக்க வைத்துக் கொள்ளுகின்றனர். “தாத்தா அப்துல் உள்நாட்டுப் போரில் 1990ல் மரித்து விட்டார். ஆனால் அவர் இப்பொழுதும் இருக்கிறார். நாம் அவரைப் பார்க்க விட்டாலும், அவர் கோபமடைந்து விட்டால் நமக்கு கஷ்டத்தைக் கொடுப்பார். எனவே நாங்கள் அவருக்கு சிகரெட் கொடுக்கிறோம். அவருக்கு அது விருப்பம்,ஆகவே கண்டிப்பாக அது அவரைத் திருப்தி படுத்தும்.
இந்தப் பகுதியில் பல சிறிய சபைகள் இருந்தாலும் ஒரு மகுவா நஹாரா மக்களின் நிழல் கூட இச்சபைகளின் கதவுகளில் பட விடுவதில்லை. “அவைகள் எல்லாம் புதிதாக வந்தவர்களுக்குத் தான். காலங்காலமாக வாழ்கின்ற எங்களை அவைகள் இகழ்கின்றன”.2,00,000 மகுவா நஹாராக்கள் மத்தியில் ஒரு நஹாரா சபை கூட இல்லாதிருப்பதற்கு இது ஒரு காரணம். சில நஹாரா விசுவாசிகள் தங்களது கலாச்சாரத்திற்கும்,மொழிக்கும் அந்நியமாய் இருக்கும் சபைகளில் ஆராதிக்கின்றனர்.
ஆனால் மற்ற பகுதிகளிலிருந்து முஸ்லீம் பின்னணி விசுவாசிகள் நஹாராக்களை சந்திக்க வருகின்றனர். இயேசு கிறிஸ்துவின் தாங்கள் அனுபவித்ததை அவர்கள் சொல்லும் போது நஹாராக்கள் கவனத்துடன் கேட்கின்றனர். சிலர் தங்கள் இருதயத்தைத் திறக்கின்றனர்.சமீபத்தில் கடற்கரையோர நஹாராக்களில் சிலர் “இயேசுவைப் பின்பற்றுபவர்கள்” ஆக மாறி ஞானஸ்நானம் பெற்றுள்ளனர்.இந்த விசுவாசிகள் தங்கள் குடும்பங்களை இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்திற்கு நடத்துகின்றனர். நஹாராக்கள் மத்தியில் நடைபெறும் ஊழியம் ஆரம்ப நிலையில் உள்ளது.
ஜெபக்குறிப்புகள்.
மகுவா நஹாரா மக்களில் முக்கியமானவர்கள் விசுவாசிகளோடு உள்ள தொடர்புகள். மூலமாக ஜீவனுள்ள தேவனை சந்திக்க ஜெபியுங்கள்(அப்.6-6, மற்றும் 13.4-12)
புதிய விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் வளரவும், தேவனுடைய வார்த்தையைக் கற்றுக் கொள்ளவும்,அனுதின வாழ்வில் இயேசுவை அனுபவிக்கவும், இயேசுவைப் பின்பற்றும் விருப்பத்தோடு ஒரு பலமான குழுவை உருவாக்கவும் ஜெபியுங்கள்.
இவர்களை சந்திக்கச் செல்லும் விசுவாசிகள் புதர்கள் ஊடாய் பயங்கரமான பிரயாணங்களை மேற்கொள்ளும் போது தேவனுடைய பாதுகாப்பு கிடைக்க ஜெபியுங்கள்.
சபைகளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நஹாராக்கள் மனத்தெளிவைப் பெற்று சபைகளில் பங்கு பெற ஜெபியுங்கள்.
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/africa-southern/mozambique-naharas/
Leave a Reply