கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு ள்-18
கினியில் உள்ள மான்யா மக்கள் சூனியத்தை வென்ற மேசியா.
கினி நாடு சுமார் 1 கோடி மக்கள் தொகை கொண்டது, மேற்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நாடு 40 மக்கள் கூட்டத்திற்கு இருப்பிடமாக உள்ளது. இவர்கள் சரித்திரப்போக்கில் இஸ்லாமியகளாக மாற்றப்பட்டு உள்ளனர். கினி கனிவளம் மிகுந்த நாடாக இருந்தாலும் உலகிலுள்ள மிக ஏழை நாடுகளில் ஒன்றாகும். கினியின் தென்கிழக்கில் உள்ள ஒரு உள்ளூர் அரசாங்க மையமாக இருக்கம் மாசென்டாவில் 50,000 மான்யா என்கிற மக்கள் இனக்கூட்டத்தினர் வசிக்கின்றனர்.
சாட்சி.
கலீது 50 வயதானவர். அவர் வயல்களில் வேலை செய்யும் பருவம் வரை சிறு வயது முதல் இஸ்லாமிய பள்ளியில் படித்து வந்தார். வீட்டில் தனது பெற்றோர் செய்யும் முஸ்லீம் ஜெபங்களையும் அவர்கள் கைக்கொள்ளும் வருடாந்தர நோன்புகளையும் பார்த்திருக்கிறார்.ஆனால் தகப்பனோ அல்லது தாயோ இஸ்லாமிய மதத்தைப் பற்றி அவருக்கு விளக்கமாக சொன்னதே இல்லை. மேலும் அவருடைய தகப்பனுடைய செயல்பாடுகள் அவரது மதத்திற்கு ஒத்ததாக இல்லை.
கலீதுக்கு எட்டு வயதாக இருக்கும் போது அவனது தகப்பனார் அவனுடைய தாயைவிட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இதினிமித்தம் கலீது பள்ளிக்கூடம் செல்ல முடியவில்லை.உண்டு உயிர் வாழ்வதற்காக வயல்வெளிகளில் கடுமையாக உழைக்கவேண்டியிருந்தது.கலீது பெரியவனான போது சூனியம் செய்பவருக்கான அனுதின சடங்குகளை செய்ய ஆரம்பித்தான்.கலீது சொன்னான்,” நான் பிசாசசோடு வேலை செய்தேன்.” ஆனால் அதே சமயத்தில் கடவுள் அவனிடம் வித்தியாசமான வழிகளில் பேச ஆரம்பித்தார். நாட்கள் செல்ல செல்ல கலீதால் அவன் செய்து வந்த பழி வாங்கும் சூன்ய மந்திரத்தை செய்ய முடியவில்லை. காரணம் அவன் அதிகமான அவமானத்தை உணர்ந்தான்.
ஒரு நாள் அவனது கிராமத்திற்கு மேசியாவைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்கிற பெண் ஒருத்தி வந்தாள். கலீது உடனடியாக இரட்சகரைப் புரிந்து கொண்டு விசுவாசித்தான் அவன் உடனடியாக தனது மந்திரப் பொருட்களையெல்லாம். எரித்து விட்டு ஞானஸ்நானம் பெற்றான்.மான்யா மக்களிடையே இருந்து பெரியவர்கள் பலர் அவனது முடிவை எதிர்த்தனர்.இறுதியில் அவனது விருப்பத்திற்கு விட்டுவிட்டனர்.கலீது ஒவ்வொரு நாளும் தனது அவமானம் மற்றும் பழைய வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற்றதற்காக இயேசுவுக்கு நன்றியுடையவனாய் இருக்கிறான்.சந்தோஷத்தோடு தனது உடன் மான்யா மக்களுக்கு சாட்சி சொல்லுகிறான், ஆனாலும் அதிகமாக தனது இன மக்கள் கூட்டத்தினர் படும் கடும் துன்பங்களுக்காக வருத்தமும் அடைகிறான். அவர்கள் முஸ்லீம்களாக,சூனியம் செய்யும் மந்திர சடங்குகளுக்குள்ளாக சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கினியில் உள்ள மான்யா மக்களிடையே தெரிந்த கிறிஸ்தவர்கள் இல்லை.இருப்பினும் டோமா மக்கள் மான்யா மக்கள் அருகே வாழ்கின்றனர்.டோமா மக்கள் மத்தியில் விசுவாசிகளின் ஐக்கியங்கள் இருக்கிறது. துரதிர்ஷடவசமாக, கலாச்சார வேறுபாடுகள்,பாரம்பரியம்,பயம் போன்றவைகள் டோமா மக்கள் அவர்களது அயலகத்தாரான மான்யா மக்களுக்கு நல்ல செய்தியை சொல்லுவதற்குத் தடையாக இருக்கின்றன.
ஜெபக்குறிப்புகள்.
நல்ல குடும்ப உறவுகளுக்காக ஜெபியுங்கள்.ஆண்கள் பெரும்பாலும் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுகின்றனர். ஆனால் எல்லா மனைவிகளையும் பிள்ளைகளையும்,பராமரிப்பதற்கு கஷ்டப்படுகின்றனர்.உயிர் பிழைப்பதற்காக சில பெண்கள் தங்கள் பிள்ளைகளோடு தங்கள் பிறந்த இடத்திற்குத் திரும்பிச் சென்று விடுகின்றனர்.(எபே.5:25-6:4).
டோமா மக்கள் தேவனுடைய அன்பை மான்யா மக்களுக்கு வார்த்தையிலும் செயலிலும் சாட்சியாக அறிவிக்க தேவன் அவர்களை பெலப்படுத்த ஜெபியுங்கள். (2தீமோ. 1:7)
மான்யா மொழிக்கு எழுத்துக்கள் கண்டுபிடிக்கப் படவும், வேதாகமம் அம்மொழியில் மொழி பெயர்க்கப்படவும் ஜெபியுங்கள்.
மான்யா மக்கள் பில்லி சூனியங்கள் முலமாக வல்லமையைத் தேடுவதை விட்டுவிட்டு சர்வ வல்ல தேவனாகிய மேசியாவிலே கண்டு கொள்ள ஜெபியுங்கள்.
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/africa-west/manya-of-guinea/
Leave a Reply