கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள்-17
சிரியாவில் இஸ்லாமிய உயிர்மீட்சி மற்றும் ஜனநாயக ஆசைகள்.
“ஆமாம்,நாங்கள் எப்பொழுதுமே முஸ்லீம்களாக இருந்து வந்திருக்கிறோம். ஒரு நாளும் இதை நான் சந்தேகப்பட்டதில்லை.நான் சிறுபிள்ளையாக இருக்கும் போதே ஒரு நாளில் ஐந்து முறை தொழுகை செய்ய வேண்டும் என்று அறிந்திருந்தேன். ஆனால் தொழுகைக்கான அர்த்தம் என்ன? மசூதியிலிருந்து தொழுகைக்கான அழைப்பைக் கேட்பேன்.,ஆனால் கடவுளை விட்டு தூரமாக இருக்கிறேன்”என்று நைமா விளக்கினாள். தனது முக்காட்டை நெற்றிக்கு மேல் இழுத்து விட்டு விட்டு, கையிலுள்ள ஜெப மாலையை உருட்டிக் கொண்டே சிறிய ஜெபம் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டு தனது கதையைத் தொடர்ந்தாள். “நான் அடிக்கடி சொல்லமுடியாத சோகத்தில் ஆழ்ந்து விடுவேன், ஏன் என்று தெரியவில்லை. நான் 17 வயதாக இருக்கும் போது எனது தோழி மசூதிக்கு அழைத்தாள். மசூதியின் பேச்சாளர் தொழுகை எவ்வாறு நம்மைக் கடவுளிடம் நெருக்கமாக அழைத்து வரும் என்பதை விளக்கிச் சொன்னார். மேலும் அவர், நாம் கடவுளிடம் அன்பு கூரும் போது வரும் சந்தோஷத்தைக் குறித்து பேசும் போது நாங்கள் அழும் நிலைக்கு வந்து விட்டோம். பிறகு நான் ஒவ்வொரு வாரமும் கலந்து கொண்டேன். குரானை மனப்பாடம் செய்தேன், மெதுவாக என் வாழ்வை மாற்றிக் கொள்ளவும்,கடவுளுடைய கட்டளைகளிம் படி நடக்கவும் வேண்டிய பெலத்தைப் பெற்றுக் கொண்டேன்,கடவுளுக்கு நன்றி! இப்பொழுது நான் சோகமாக இருந்தால் குரானிலிருந்து ஒரு வசனத்தை எனக்கு சொல்லிக் கொள்ளுகிறேன்,என் இருதயம் மீண்டும் சந்தோஷத்தினால் நிறைகிறது.’
சிரியாவில் 90% மக்கள் முஸ்லீம்கள் மேலும் அவர்களில் 75% பேர் சுன்னி முஸ்லீம்கள். ஆனால் எல்லோரும் இஸ்லாம் மதத்தைக் கடைபிடிப்பவர்கள் என்று பொருள் அல்ல.இருப்பினும் சமீபத்திய பத்து ஆண்டுகளில் அதிகமான முஸ்லீம்கள் தங்கள் மதத்திற்கு அதிகாரிக்கும் திட நம்பிக்கையோடு திரும்பியுள்ளனர். இஸ்லாமிய பிரசங்கிமார்கள் இஸ்லாமிய கொள்கையின் மூலம் சமுதாயத்தைப் புதுப்பிக்க முயற்சி செய்து வருகின்றனர். மத சம்பந்தமான நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. அநேகர் கடவுளுக்காக ஏங்குகிறன்றனர்.தங்கள் இருதயத்தை குரான் வசனங்களால் நிறைத்து அதற்குக் கீழ்ப்படிய விரும்புகின்றனர். இந்நாட்டிலுள்ள பெரும்பாலான கிறிஸ்துவர்கள் (மக்கள் தொகையில் 10%) பயத்தினாலோ அல்ல அக்கறையின்மையினாலோ முஸ்லீம்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதே இல்லை. தங்கள் சமுதாயத்தில் அதிகரித்து வரும் இஸ்லாமிய மயமாக்குதலைக் கண்டு சுவிசேஷத்தை அறிவிப்பதில் அர்த்தம் இல்லை என்று நினைக்கிறார்கள். அதே சமயத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் நிச்சயமற்ற தன்மை அநேக முஸ்லீம்களுக்கு பல புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. மார்ச் 2011 முதல் நிலவி வரும் மக்கள் எதிர்ப்பு இயக்கத்தினால் நாட்டில் அமைதியற்ற சூழ்நிலை இருந்து வருகிறது அரசாங்கம் தனது படைகளைக் கொண்டு இவ்வியக்கத்தை அடக்கி வருகிறது. அரசாங்க தனது படைகளைக் கொண்டு இவ்வியக்கத்தை அடக்கி வருகிறது. ஆயிரக்கணக்கான சிரிய மக்கள் கொல்லப் பட்டிருக்கின்றனர். இன்னும் அநேகர் சிறை பிடிக்கப்பட்ட,விசாரணைக்குட்படு
ஜெபக்குறிப்புகள்.
பக்தியுள்ள சிரிய முஸ்லீம்களின் வெளிபடையான அமைதியின் பொய்யான நிலையை தேவன் அவர்களுக்கு உணர்த்தும்படி ஜெபியுங்கள்.
அவர்கள் இஸ்லாம் மதத்தின் மீது அதிருப்தி அடைந்து தங்களது மத ரீதியான அறிவைக் கேள்வி கேட்கும் படி வழி நடத்தப்பட ஜெபியுங்கள் (லூக்கா.10:21)
இந்த குழப்பமான சூழ்நிலையில் சிரிய கிறிஸ்தவர்கள் தங்களது நம்பிக்கையை அரசாங்கத்தின் மீது வைக்காமல் தேவன் பேரில் வைக்கும்படியாக ஜெபியுங்கள்.
இவர்கள் பயத்திற்கும் அக்கறையற்றத்தன்மைக்கும் அப்பாற்பட்டு தேவனால் ஒருவரும் சந்திக்கப்பட முடியாத நிலையில் இல்லை என்பதை விசுவாசிக்க ஜெபியுங்கள்.
போராட்டங்களும் வன்முறைகளும் முடிவுக்கு வந்து, நீதியான அரசாங்கம் அமையவும், பலமான கிறிஸ்தவ சாட்சி ஏற்படவும் ஜெபியுங்கள்.
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/mid-near-east/syria-awakening/
Leave a Reply