கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள் 16
துர்க்மேனிஸ்தான் அரசாங்கத்தின் கண்காணிப்பில் வாழ்வது.
துர்க்மேனிஸ்தான் நாடு மத்திய ஆசியாவில் ஈரான் நாட்டின் வடக்கு எல்லையில் அமைந்துள்ளது.இது உலகிலேயே சுவிசேஷத்திற்கு மிகவும் மூடப்பட்டுள்ள நாடாகும். 1991ம் ஆண்டு வரை சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்தது. திடீரென்று சுதந்திர நாடாக மாறியது. இந்த வறட்சியான 80% பாலைவனப் பகுதியில்,துர்க்மேன் மக்கள் வசிக்கின்றனர். 80 ஆண்டுகள் முன்பு வரை இவர்கள் தங்களது கால்நாடைகளோடும்,ஒட்டகங்களோடும் நாடோடிகளாகத் திரிந்து வந்தனர். இன்று இந்த நாடு மிகப் பெரிய வாயு மற்றும் எண்ணெய் வளங்களோடு செழித்து வளருக்கிறது. எரி பொருட்கள் மூலமாக கிடைக்கும் சம்பத்தின் ஒரு பகுதியை வைத்து பெரிய பெரிய கட்டடங்களையும்,பிரம்மாண்டமான பூங்காக்களையும் தலைநகரிலும்,நாட்டின் பிற பகுதிகளிலும்,கட்டியுள்ளனர். சில கட்டடங்களும் பூங்காக்களும் கதைகளில் வரும் தேவதைகளின் தேசங்கள் போல் காணப்படுகின்றன.ஆனால் இவ்விதமான பகட்டான கட்டடங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மை மிகவும் வருந்தத்தக்கது.
சாட்சி
மார்ல் மிகவும் வருத்ததுடன் காணப்பட்டாள், அவளது கணவர் கட்டிடம் கட்டும் கம்பெனியில் வேலை செய்து கொண்டு இருந்தார்.பல மாதங்களாக சம்பளம் அவருக்கு கொடுக்கப்படவில்லை. கம்பெனி மேனஜர்கள்,தங்களுக்கே அரசாங்கம் சரியான நேரத்தில் சம்பளம் தருவதில்லை என்று வருத்தம் தெரிவித்தனர்.மாரலுடைய கடைசி மகனுக்கு பள்ளிப் படிப்பு விரைவில் ஆரம்பிக்கும். பள்ளி அதிகாரிகள் அவனை சேர்த்துக் கொள்ள ஆயத்தம்,ஆனால் ஆறு மாத சம்பளத்தை இலஞ்சமாகக் கொடுக்க வேண்டும் மாரலுக்கும் அவள் கணவனுக்கும் எங்கிருந்து பணம் வரும்?
மாரலின் அயலகத்தாளான அய்குல் இந்த கஷ்டமான சூழ்நிலையில் இயேசுகிறிஸ்து அவளது துன்பத்தை அறிந்து இருக்கிறார். அவளுக்கு ஆறுதல் அளிப்பார்.என்று கூறி அவளுக்கு ஜெபிக்க முன் வந்தாள். மாரல் ஆச்சிரியத்துக்குள்ளானாள். இயேசுவைக் குறித்து சொல்லப்படுவது எல்லாம் என்ன? யார் அவர்? இயேசுவின் மீது விசுவாசம் வைத்திருப்பதைக் குறித்து பேசுகிற எந்த ஒரு துர்க்மேன் பெண்ணையும் அவள் சந்தித்ததே இல்லை.இந்நாட்டின் பெரும் பகுதிகளில் இயேசுவின் செய்தி அறியப்படவேயில்லை. துர்க்மேனிஸ்தான் அரசாங்கம் தான் உலகிலேயே மதசுதந்திரத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் மறுக்கிற மற்றும் சுவிசேஷத்தைத் தடை செய்கிற் அரசாங்கங்களில் ஒன்றாகும். சமீப ஆண்டுகளில் சில இவாஞ்சலிக்கல் சபைகள் பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட பிறகு இப்பொழுது அதிகாரப் பூர்வமாக பதிவு செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளன. ஆனால் அவைகளின் நான்கு சுவர்களுக்கு வெளியே செய்யப்படும் எந்த மதசம்பந்தமான செயலும் சட்ட விரோதமானது. உள்ளுர் மொழியின் வேதாகமங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. எங்கும் இருக்கும் அரசாங்க அமைப்புகள் மக்களின் மிகச் சிறிய விவரங்களைக் கூட கண்காணிக்கின்றன.
இவ்விதமாகத் தனிமைப்படுத்தப் பட்டுள்ள துர்க்மேன் மக்களுக்கு எவ்வாறு சுவிசேஷத்தை அறிவிப்பது?தடைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் தேவன் மக்களைத் தமது இராஜ்யத்திற்கு நடத்துவார். முஸ்லீம்கள் விசுவாசத்திற்குள் வந்து கொண்டிருக்கிறார்கள். மேல்பரப்புக்குக் கீழே சிறிய ஆட்டம் வந்து கொண்டிருக்கிறது. பெரிய எழுப்புதலுக்காக தேவனை நம்புவோம்.
ஜெபக்குறிப்புகள்.
மேசியா முலமாக அநேக துர்க்மேனிய ஆண்களும் பெண்களும் மாற்றப்படும்படியாக ஒரு பெரிய ஆவிக்குரிய அசைவைத் தேவன் இத்தேசத்தில் உண்டு பண்ண ஜெபியுங்கள்.(அப்.8:5-8)
தேவன் அநேக ஊழியர்களை எழுப்பவும், அதுவரை இப்பொழுதிருக்கும் சில ஊழியர்கள் உதவி
வரும்வரைத் தாக்குப் பிடிக்கவும் ஜெபியுங்கள்.
துர்க்மேன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள புதிய ஏற்பாட்டை புது திருப்புதல் செய்யும் பணிக்காகவும், அது பாதுகாப்பான முறையில் விநியோகிக்கப்படவும் ஜெபியுங்கள்.
தேவன் அசாதாரண முறையில் துர்க்மேனிய மக்களுக்குத் தன்மை வெளிப்படுத்த ஜெபியுங்கள்.
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/asia-caucasus/turkmenistan-testimony/
Leave a Reply