கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள்-15.
தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து திறந்த நிலைக்கு போரியினால் சீர்குலைக்கப்பட்ட லிபியாவைத் தேவன் நினைவுகூருகிறார்.
சிறிய நகரங்களும்,கிராமங்களும்,வயல்
நான் ஆச்சிரியத்துக்குள்ளானேன். நான் அரேபிய உலகில் முஸ்லீம்கள் மத்தியில் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். மக்களிடத்தில் அதிகமாக இயேசு கிறிஸ்துவைக் குறித்து பேசியிருக்கிறேன். ஆனால் இந்த விதமான களங்கமில்லாத உண்மையான ஆர்வத்தை நான் அனுபவித்ததேயில்லை. பல மணி நேரங்களாக எங்களது உரையாடல் வேதாகமக் கதைகளுக்கும்,இயேசு கிறிஸ்து ஏன் இந்த உலகத்திற்கு வர வேண்டியிருந்து என்ற கேள்விகளுக்கும் நேராகத் திரும்பியது. சில நாட்களுக்குப் பிறகு நாங்கள் விடை பெற்றுக் கொண்டபோது, ஷராப் சந்தோஷமாக வேதாகமத்தைப் பரிசாகப் பெற்றுக் கொண்டார்.
லிபியா நாடு சர்வதேச சமுதாயத்தினின்று வெகுவாகத் தனிமைப் படுத்தப்பட்ட நாடாகும். இத விளைவாக பொது மக்களிடையே திறந்த மனம் இருக்கிறது, லிபியாவை விட்டு வெளியே உள்ள உலகத்தோடு தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாக இருகிறது. கடாஃபியின் அடிப்படை கொள்கைகளிலொன்று நாட்டிற்குள் ஒரே மதம், இஸ்லாமை மட்டும் அனுமதிப்பது என்பதாகும். அவரது கொள்கைகளை தொகுத்தடக்கியுள்ளது “பச்சைப் புத்தகத்தில்.” இவ்விதமாகத்தான் நாட்டின் ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முடியும் என்று அவர் எழுதுகிறார். இன்றைக்கு புதிதான எதைக்குறித்து, எல்லாவற்றைக் குறித்தும்,கிறிஸ்துவ விசுவாசத்தையும் சேர்த்து,அறிந்து கொள்ள ஒருவிதமான ஆர்வம் இருக்கிறது இது ஆவிக்குரிய திறந்த நிலை என்று இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இது இயேசு கிறிஸ்துவைக் குறித்த உரையாடலை எளிய முறையில் ஆரம்பிப்பதற்கு நல்ல அடித்தளமாக அமைந்திருந்க்கிறது.
அநேக ஆண்டுகளின் தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு சமீப மாதங்களில் பல ஆயிரக்கணக்கான வேதாகமங்களை லிபியாவிற்குக் கொண்டு வர முடிந்திருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து உதவிகளை எதிர்பார்க்கின்ற இடைக்கால அரசாங்கத்தின் திறந்த மனநிலை,விசுவாசிகளுக்கு புதிய கதவுகளைத் திறந்திருக்கிறது.அதே சமயத்தில் புதிய அரசாங்கத்தில் உள்ள தீவிர இஸ்லாமியர்கள சுவிசேஷம் அறிவிப்பதற்கு ஆதரவாக இல்லை.தற்சமயம், லிபியாவில் வருகிற ஆண்டுகளில் சமூக,அரசியல் சூழ்நிலைகள் எவ்வாறு உருவெடுக்கும் என்பதை ஒருவராலும் கணிக்க இயலாது. இருப்பினும் இப்பொழுது சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு கடந்த காலத்தில் இல்லாத வாய்ப்புகள் ஏராளமாக இருக்கிறது.
லிபியாவின் புதிய அரசாங்கத்திற்காக ஜெபியுங்கள். அவர்களது வழிநடத்துதல் மூலமாக லிபிய மக்கள் சமாதானத்துடனும் சுதந்தரத்துடனும் வாழ ஜெபியுங்கள்.
வேதாகமத்தை நாட்டிற்கு கொண்டுவந்து விநியோகிக்கிற வாய்ப்பு எப்பொழுதும் நிர்ந்திரமாகக் கிடைக்க ஜெபியுங்கள்.
திறந்த மனம் மற்றும் ஆர்வம் இருக்கின்ற இந்த நேரத்தில் லிபியாவில் அறுவடைக்கு ஆட்களை தேவன் அனுப்ப ஜெபியுங்கள்.
அரேபிய முஸ்லீம்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தை அறிந்திருக்கிற விசுவாசிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள ஜெபியுங்கள்.
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/north-african/libya-remembered/
Leave a Reply