கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள் -14
பிரேசில் முஸ்லீம்கள் மத்தியில் தேவனுடைய கிருபையைக் குறித்த சாட்சி.
சலீம் மத்திய கிழக்கு நாடொன்றில் ஒரு பக்தியுள்ள முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவன்.அங்கு அவன் இஸ்லாமிய போதனையின்படி வளர்க்கப் பட்டான்.தனது இளம்வாலிபப் பருவத்தில் இஸ்லாமுக்காகப் போராடுவதற்காக ஒரு தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தான்.ஒரு தற்கொலைப் படை வீரான மாற்றினான். ஒரு சமயத்தில் உண்மையிலேயே தற்கொலைத் தாக்குதல் ஒன்று நடத்துவதற்கு முயற்சியும் செய்தான். அதிர்ஷ்டவசமாக அம்முயற்சி தோல்வியில் முடியவே, சலீம் சலிப்புக்கும்,வெட்கத்துக்கும் உள்ளானான். பின்னர் மதத்தலைவர்களோடு ஏற்பட்ட பெரிய மோதலில், தன் நாட்டை விட்டே ஓடிப் போனான்.பல நாடுகளின் வழியாய் பயணம் செய்து இறுதியில் பிரேசில் நாட்டை வந்தடைந்தான். அங்கு வன்முறைக் கும்பல்களோடும்,போதைப் பொருட்களோடும்,சம்பந்தப் பட்டிருந்தாலும்,குரானைப் படிப்பதையும் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய தொழுகையையும் நிறுத்தவே இல்லை. சலீம் தன்னுடைய பகுதியிலே மிக பயங்கரமான குற்றவாளியாக மாறிவிட்டான், இதன் விளைவாக போலிஸ்க்கு தப்புவதற்காக காட்டில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஒரு நாள் தனது துன்பம்,நம்பிக்கையற்றதன்மை மற்றும் வீடில்லாததன்மை ஆகியவற்றினிமித்தம் விரக்தியடைந்து சற்று வித்தியாசமாக ஜெபிக்கத்தீர்மானித்தான். அந்த இரவினிலே நான் முழங்கால் படியிட்டு, வானத்திற்கு நேராக என் முகத்தை ஏறெடுத்து நான் கேட்டேன். மேலே பரலோகத்தில் இருப்பவர் நீர் யார் என்று எனக்கு தெரியாது. நான் ஒரு நாத்திகன் அல்ல. இவைகளைவிட நீர் பெரியவர். வானங்களையும், பூமியையும்,உருவாக்கினவர், ஆனால் நீர் யார் என்று எனக்கு தெரியாது. நீர் யார்? நீர் புத்தரா, மரியாளா, அல்லாவா, கிறிஸ்தவர்களின் இயேசுவா? நீர் யாராக இருந்தாலும் உம்மிடத்தில் நான் கேட்பதெல்லாம் என்னை இந்த வாழ்விலிருந்து விடுதலை செய்யும், உம்மை நான் எந்நாளும் பின்பற்றுவேன்.’ தேவன் அந்த ஜெபத்திற்கு பதிலளித்தார். ஒரு முஸ்லீமாக சலீம் 25 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகை செய்திருக்கிறான். ஆனால் அவனது ஜெபத்திற்குப் பதிலாக ஏதேனும் நடந்ததை அவன் அனுபவித்ததில்லை. ஆனால் இந்த முறை வித்தியாசமாக நடந்தது, அவனது நம்பிக்கையற்ற ஜெபத்திற்கு பிறகு பல நாட்கள் கழித்து இயேசு சலீமுக்குக் காட்சியளித்தார்.
ஆறு நாட்களுக்குப் பிறகு ஒரு விசுவாசி சலீம் ஒளிந்து கொண்டிருந்த காட்டிற்குச் சென்று அவனுடம் சொன்னார்.” இயேசு உன்னை நேசிக்கிறார்” என்று. “அப்படியே?அவர் என்னை போதைப் பொருட்கள்,குற்றம்புரித்ல் மற்றும் எனது துன்பத்திலிருந்து விடுதலை செய்ய முடியுமா?”என்று கேட்டான். பிறகு தான் செய்த ஜெபத்தை நினைவுகூர்ந்தான். அந்த விசுவாசியால் மறைவான ஒரு இடத்திற்கு வழி நடத்தப்பட்டு வேதத்தை வாசிக்க ஆரம்பித்தான், வித்தியாசமாக ஜெபிக்கக் கற்றுக் கொண்டான், சில கிறிஸ்தவர்களுக்கும் அறிமுகமானான். சலீம் பல போராட்டங்களை சந்தித்தான். ஜனங்கள் அவனைக் கொலை செய்ய முயற்சி செய்தார்கள். அவனது சொந்த ஜனங்கள் அவனை துன்புறுத்தினார்கள். பல முறை அடித்து அவமானப்படுத்தினார்கள். ஆனால் சலீம்,இயேசு கிறிஸ்து சிலுவையில் அடைந்த பாடுகள் மிகக் குறைவானது எனப் புரிந்து கொண்டான். இப்பொழுது, சலீம் தனது சொந்த ஜனங்களுக்கு மேசியாவை அறிவிக்க ஆசைப்படுகிறான். “எல்லாக் கிறிஸ்தவர்களும் சுவிசேஷத்தை என் மக்களுக்கு எடுத்துச் செல்ல உற்சாகப்படுத்துகிறேன்.அவர்கள் பக்தியுள்ளவர்கள், ஆனால் கிறிஸ்துவில் வெளிப்பட்ட அன்பின் தேவனை அறியாதிருக்கிறார்கள்.”
ஜெபக்குறிப்புகள்
வாழ்வுகளை மாற்ற தேவன் வல்லவராயிருக்கிறார்.(ரோமர்:4:
பிரேசில் நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழ்கின்ற முஸ்லீம்களை சந்திக்க முஸ்லீம் பின்னணியிலிருந்து வந்த விசுவாசிகளைத் தேவன் உற்சாகப்படுத்தவும்,ஊக்குவிக்
பிரேசில் நாட்டு திருச்சபையானது தங்களது நாட்டில் வாழும் முஸ்லீம்களை சந்திக்க வேண்டும் என்ற பாரத்தை அடையவும்,அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபடவும் ஜெபியுங்கள்.
இஸ்லாமியர்களை சந்திக்க வேண்டும் என்ற பாரம் கொண்ட மிஷன் சங்கங்கள் பலவற்றை தேவன் பிரேசில் நாட்டில் எழுப்ப ஜெபியுங்கள்.
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/america-south/among-brazils-muslims/
Leave a Reply