கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள்-13
ஸ்வீடன் நாட்டு முஸ்லீம்கள் மக்கட் தொகை புள்ளியியலில் மிகப் பெரிய மாற்றம்.
ஸ்டாக்ஹோம் நகரத்தின் மாவட்டம் ஸ்வீடன் நாட்டின் மிக அதிகமான பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட இடங்களில் ஒன்றாகும். இங்கு வசிப்பவர்களில் 90%பேர் வெளிநாட்டு பின்னணியைக் கொண்டவர்கள். ஒரு சர்வதேச சபை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இங்குள்ள சமுதாயக் கூட்டத்தில் ஸ்வீடிஷ்,அரேபிய மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் ஆராதனை நடத்துவதற்காகக் கூடுகிறது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமை நண்பகலிலும் இதே கூட்டம் தொழுகைக்காகக் கூடுகிற முஸ்லீம்களால் நிறைந்திருக்கும்.இங்கு அநேக சோமலியர்கள் வாழ்வதால் ரிங்கிபை சில வேளைகளில் “குட்டி மொகடிஷ” என்றும் அழைக்கப்படுகிறது.ஸ்வீடன் நாட்டின் பெரிய நகரங்களில் உள்ள இது போன்ற இடங்களுக்கு ரிங்கியை ஒரு சிறிய உதாரணம். புதிய ஸ்வீடன்” என்று அழைக்கப்படுவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
வெளிநாடுகளிலிருந்து குடியேறியவர்கள் காரணமாக கடந்த 50-60 ஆண்டுகளில் ஸ்வீடன் நாட்டு மக்கள் தொகை வெகுவாக மாறிவிட்டிருக்கிறது.ஸ்வீடன் மக்கள் தொகையில் சுமார் 20% பேருக்கு வெளிநாட்டு பின்னணி உண்டு. இந்த ஸ்காண்டிநேவியன் நாட்டில் உலகின் ஒவ்வொரு தேசத்து மக்களையும் காணலாம்.இவர்களில் பலர் முஸ்லீம்கள். ஸ்வீடன் நாட்டில் 4,50,000 முஸ்லீம்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.இது மொத்த ஜனத்தொகையில் 5% இவர்களில் பெரும்பாலோர் கலாச்சார முஸ்லீம்கள்,பெரிய அளவில் இஸ்லாம் மதத்தை உண்மையிலேயே கடைபிடிக்காதவர்கள். சிறியவர்கள் மற்றும் பெரியவர்களைச் சேர்ந்து சுமார் 1,10,000 முஸ்லீம்கள் இஸ்லாம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் அங்கத்தினர்கள் அல்லது ஒழுங்காகக் கலந்து கொள்ளுகின்றனர். இங்குள்ள மிகப் பெரிய இனங்களில் மத்திய கிழக்கைச் சேர்ந்த அரபியர்கள்,ஈரானியர்கள்,போஸ்னி
வெகு தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்திருக்கிற சந்திக்கப்படாத பல மக்கள் கூட்டத்தினர் இப்பொழுது ஸ்வீடன் நாட்டின் அயலகத்தில் இருக்கின்றனர். சிறுபான்மையான திருச்சபைகளே இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சுவிசேஷத்தை அறிவிக்கின்றனர்.இருப்பினும் ஸ்வீடன் நாட்டிலுள்ள பல முஸ்லீம்கள் தங்களது சொந்த ஜனங்களிலிருந்து புதிய விசுவாசிகளாய் மாறியுள்ளவர்களின் சாட்சிகளின் மூலமாக மேசியாவாகிய இயேசுவைக் கண்டு கொண்டள்ளனர்.
ரிங்கிபை போன்ற பகுதிகளில் தங்களது சொந்த அடையாளத்தைப் புரிந்து கொள்ளவும்,கண்டுபிடிக்கவும் முயன்று கொண்டிருக்கிற வாலிபர்கள் பலர் உண்டு.அவர்கள் ஸ்வீடிஷ் சமுதாயத்திலிருந்து விலக்கப்பட்டவர்கள் போலக் காணப்பட்டாலும், தங்களது பெற்றோர்களது வீட்டுக் கலாச்சாரத்திலும் அவர்களால் செளகரியமாக இருக்க முடிவதில்லை. எங்கு அவர்கள் தங்களது அடையாளத்தையும்,தாங்கள் ஒன்றிற்கு சொந்தமானவர்கள் என்பதையும் கண்டு கொள்ளுவார்கள்? பலர் ரவுடி கும்பல்களுக்கும்,குற்றச் செயல்களுக்கும்,திரும்பியுள்
ஜெபக்குறிப்புகள்
ஸ்வீடன் நாட்டு விசுவாசிகள் குடியேறியுள்ள முஸ்லீம்களோடு நட்புறவு கொண்டு அவர்களுக்கு தேவனுடைய அன்பையும்,வார்த்தையையும் பகிர்ந்து கொள்ள ஜெபியுங்கள்.
முஸ்லீம் பின்னணியிலிருந்து வந்த விசுவாசிகள் தங்கள் சொந்த சேதசத்து மக்களுக்கு மேசியாவாகிய இயேசுவை அறிவிக்க ஜெபியுங்கள்.
பல்வேறு கலாச்சார சூழலில் வாழ்கின்ற இளைய தலைமுறையினருக்கு கிறிஸ்துவோடு ஒரு சந்திப்பு நிகழ ஜெபியுங்கள்.
ஸ்வீடன் திருச்சபைகள் தங்களது அடையாளத்தைத் தேடி அலைகிற வாலிபர்கள் மீது கவனம் வைத்து அவர்கள் மேசியாவில் அதனைக் கண்டு கொள்வதற்கு உதவி செய்ய ஜெபியுங்கள்.
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/europe/swedish-muslims/
C.Mariadhas says
Good shepherd
C.Mariadhas says
JESUS IS Good shepherd, JESUS: “I am the good shepherd. The good shepherd lays down his life for the sheep.