கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள் 12
தக்லாமக்கன் பாலைவனத்தைச் சுற்றியுள்ள பகுதி 1.5 கோடி முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கிட்டத்தட்ட 8.50 இலட்சம்.
சீன தேசத்தின் மேற்கு பகுதியில் குறைந்த பட்சம் 50 இலட்சம் முஸ்லீம்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும் பகுதியினர் ஸிங்ஜியாங் உய்கூர் சுயஆட்சி பகுதியில் உள்ள மிகப் பெரிய தக்லாமக்கன் பாலைவனத்தின் ஓரங்களில் வாழ்கின்றனர். சமீப ஆண்டுகளில் பல 1.1 கோடி மக்கள் தொகை கொண்ட மிகப் பெரிய இனமான உய்கூர் மக்களுக்காக ஜெபிக்கம்படி உற்சாகப்படுத்தியுள்ளோம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் மேற்கு சீனாவில் வசிக்கும் மற்ற இன மக்களைக் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மக்கள் கூட்டத்தில் உள்ள மொத்த விசுவாசிகளின் எண்ணிக்கை 1000 க்கும் குறைவானது என்று கணக்கிடப்பட்டுள்ளது.சமீப ஆண்டுகளில் இந்தப் பகுதியில் ஹான் சீனர்களின் (சீனாவின் பெரும்பான்மையான இன மக்கள் கூட்டத்தினர்).மிகப் பெரிய குடியேற்றத்தால் உள்ளுர் மக்கள் தங்கள் சொந்த இடத்தை வெளியிலிருந்து வந்தவர்களிடமிருந்து காப்பற்ற விரும்பியதால் சில பிரச்சனைகளும்,கசப்புகளும் ஏற்பட்டன. ஹான் சீனர்களின் (75 இலட்சம் மக்கள்) மத்தியில் 8.50 இலட்சம் கிறிஸ்தவர்கள்(75% பேர் வீட்டு சபைகளில் இருக்கிறார்கள்) இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் கலாச்சாரம்,மொழி மற்றும் மத ரீதியாக பெரும்பன்மை முஸ்லீம் குழுக்களிடமிருந்து தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
கஸாக் -17,06,000
கஸாக்,கியுங்காய் -3,400
கிர்கிஸ் -2,18,000
ஸலார் -1,37,000
தாஜிக், ஸரிகோலி -40,000
டாட்டார் – 7,500
உய்கூர் -1,07,79,000
உய்கூர்,லாப், நூர் -40,000
உய்கூர் தக்லாமக்கன் -300
உய்கூர் யூட்டுயன் – 64,000
உஸ்பெக்,வடக்கு -20,000
ஜெபக்குறிப்புகள்
வெவேறு கலாச்சாரத்திலிருந்து வரும் தங்களது முஸ்லீம் அயலகத்தாரை சந்திக்கும்படி ஹான் சீன விசுவாசிகள் ஊக்குவிக்கப்பட்ட ஜெபியுங்கள்.இப்பொழுது தான் சீனவிசுவாசிகள் ஊக்குவிக்கப்பட ஜெபியுங்கள். இப்பொழுதுதான் சீனர்கள் மாற்றுக் கலாச்சரத்தில் ஊழியம் செய்வது பற்றி சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள்(ஏசாயா.
பல்வேறு இன மக்களுக்கு இயேசுவை அறிந்து கொள்ள ஜெபியுங்கள். ஆண்டவருக்கு முன்பாக அவர்களது பெயர்களை அறிக்கை செய்யுங்கள், அவர் இடைபட கேளுங்கள்(சங்கீதம்.2:8)
ஸிங்ஜியாங் மாகணத்தில் ஒலிபரப்பப்படும் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளுக்காகவும், மற்ற ஊடகங்களுக்காகவும் ஜெபியுங்கள். தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளுகிற திறந்த உள்ளங்களுக்காக ஜெபியுங்கள்.
விசுவாசிகள் தங்கள் உறவினர்களோடும்,அயலகத்தாரோடும்,
வீட்டு சபைகள் நகரகங்களிலும், கிராமப் புறங்களிலும் பெருக ஜெபியுங்கள் (அப். 16:13-15).
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/asia-east/taklamakan-desert-china/
Leave a Reply