IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

ரமலான் நோன்பு நாள் -11 ஜெபக்குறிப்புகள்

July 31, 2012

 

கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

 நோன்பு நாள் 11

இந்தியாவில் ராவுத்தர் மக்கள் -அவர்கள் மத்தியில் தெரிந்த விசுவாசிகளே இல்லை

rawther_india_p17-30-days-netதமிழ் மொழி பேசும் முஸ்லீம்களில் ஒரு பிரிவாக 10000 மக்கள் தொகை கொண்ட ராவுத்தர் மக்கள் எகிப்திலிருந்து இந்தியாவிற்கு வந்த குதிரைவியாபாரிகளின் வமசாவழியினாராக இருக்கின்றனர்.தலைநகரமாகவும் ,மிகப்பெரிய நகரமாகவும் இருக்கிற சென்னைப்பட்டணத்தின் பல கடற்கரைகள் உலகமெங்குமுள்ள பார்வையாளர்களை வரவேற்கிறது.

2,70,000 ராவுத்தர்கள் பாகிஸ்தானை எல்லையாக கொண்டு இதியாவின் மேற்கில் உள்ள மிகப்பெரிய மாநிலமான ராஜஸ்தானில் வசிக்கின்றனர்.இவர்கள் பெரும்பான்மை இந்து மக்கள் மத்தியில் மிகச் சிறிய சிறுபாண்மையினராக(8%) வாழும் முஸ்லீம்களின் ஒரு பகுதியாக இருக்கின்றனர்.யாத்திரிகர்கள் மத்தியில் ராஜஸ்தான் மிகவும் பிரபலமாக விளங்குகிறது.காரணம் இங்குள்ள வண்ணமயமான கலைகளையும்,பாரம்பரிய இசை மற்றும் நடனத்தையும் ,பிரம்மாண்ட அரண்மனைகளையும்,பலைவனக்கோட்டைகளையும் கண்டு இரசிக்கின்றனர்.

ராவுத்தர்கள் புதிய தொழில்களைத் தொடங்கி நடத்தும் ஆற்றல் பெற்றவர்கள் எனவே பல்வேறு தொழில்களை செய்கின்றனர்.கல்விக்கு மிகப்பெரிய மதிப்பைகொடுப்பவர்கள்.எனவே ஆண்களும் ,பெண்களும் கல்வி கற்பதற்கான வாய்பினை சரிசமமாக கொடுக்கின்றனர்.

ராவுத்தர்கள் இயேசுகிறிஸ்துவின் அன்பையும் சத்தியத்தையும் கேள்விப்படவேயில்லை.மேலும் அவர்கள் மத்தியில் தெரிந்த விசுவாசிகள் எவரும் இருப்பதாக தெரியவில்லை.இந்திய கிறிஸ்தவர்களுக்கு அவர்களைது அயலகத்தாரான ராவுத்தர்களுக்கு மேசியாவை பற்றி பகிர்ந்து கொள்ளுவதற்கான ஒப்பற்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.அவர்கள் அவ்விதமே செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும் .

ஜெபக்குறிப்ப்புகள்:

தேவன் ராவுத்தர்களுக்கு தம்மை வெளிப்படுத்தவும்,அவர்கள் இயேசுகிறிஸ்துவின் அன்பையும்,சத்தியத்தையும் குறித்தவற்றை கேட்பதற்கு ஆவலுள்ளவர்களார் மாறவும் ஜெபியுங்கள்.

ராவுத்தர்களுக்கு மேசியாவைபற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆண்டவரின் அழைப்புக்கு பதில் கொடுக்கும் அர்பணிப்புள்ள குழுவினர் எழும்ப ஜெபியுங்கள்.(”பின்பு நான் யாரை அனுப்புவேன்,யார் நமது காரியமாய் போவார்கள் என்று சொல்லுகிற சத்தத்தை கேட்டேன்.அப்பொழுது நான் இதோ நான் இருக்கிறேன்,என்னை அனுப்பும் என்றேன் ஏசாயா 6:8)

சத்திக்கப்படாத இம் மக்கள் மத்தியில் இருந்து பலமான உள்ளூர்விசுவாசிகளையும் தலைவர்களையும் மற்றும் திருச்சபைகளையும் தேவன் எழுப்ப ஜெபியுங்கள்.தமிழகத்தில் உள்ள திருச்சபைகளும் ராஜஸ்தானில் உள்ள திருச்சபைகளும் ராவுத்தர்களை சந்திக்கிறதற்கு பாரம் கொள்ளவும் அவர்கள் மத்தியில் பணிபுரிய ஆட்களை அனுப்பவும் ஜெபியுங்கள்..

ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள்  IN ENGLISH

 

http://www.30-days.net/muslims/muslims-in/asia-south-central/india/the-rawther-people-in-india/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network