கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள் -10
பஹ்ரைனிய அரேபியர்கள் :பஹ்ரைனின் மக்கள் தொகை:8,20,000 அரேபியர்கள் : 3,30,000.
பஹ்ரைன்,ஈரான் நாட்டிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையில், பாரசீக வளைகுடா என்றழைக்கப்படும் அரேபிய வளைக்குடாவில்,30 க்கும் அதிகமான தீவுகளை உள்ளடக்கிய நாடாகும். இதனுடைய அண்டை நாடுகளைப் போல் இல்லாமல் இதனுடைய எண்ணை இருப்பு முற்றும் குறைந்து விட்டது மேலும் வேலை வேலை இல்லாத் திண்டாட்டம் மிக அதிகமாகக் காணப்படுகிறது. இருப்பினும் எதிர்காலம் நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது, காரணம் பஹ்ரைன் முன்னேற்ற வங்கி 20,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகத் தனது அறிக்கைக் குறிப்பிட்டுள்ளது.(டிசம்பர் 2011).
பெரும்பான்மையான பஹ்ரைனி மக்கள் அரபி அல்லது பார்ஸி மொழி பேசுகின்றனர், மேலும் ஆங்கிலம் பேசுவதும் அதிகரித்து வருகிறது.பஹ்ரைனின் வளைகுடா அரபு மக்கள் வளைகுடா மற்றும் பஹாமா மொழி பேசுகின்றனர். இவர்களில் சுன்னி மற்றும் ஷியா முஸ்லீம்கள் அடங்குவர். இவர்கள் இருப்பருக்குமிடையே உள்ள குறிப்பிடத்தக்க வித்தியாசங்களைக் களைவதற்கு இவர்கள் தேவனுடைய சமாதானத்தைக் கேட்ட வேண்டியது அவசியமாய் இருக்கிறது.
மேற்கிலும் கிழக்கிலுமிருந்து மக்கள் குடியேறுவதற்கு இந்த நாடு திறந்திருப்பதால் பஹ்ரைனியர்களுக்கு வாழ்வின் பல்வேறு கண்ணோட்டங்களைக் கேள்விப்படுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதன் ஒரு விளைபை பஹ்ரைனிய பெண்களின் நிலைமையில் காணலாம். பெரும்பாலான அரேபிய பெண்களை விட பஹ்ரைனிய பெண்களுக்கு அதிக வாய்ப்புகளும் சிலாக்கியங்களும் இருக்கிறது.மதிப்பிற்குரிய வேலைகளிலும் அமர்ந்திருக்கிறார்கள்.
மேலும் வெளிப்படையான சுவிசேஷப் பணி செய்வதற்கு அனுமதி இல்லையென்றாலும்,அரேபிய கலச்சாரத்திற்கு மதிப்பளித்து, கிறஸ்தவர்கள் வேதாகமம் மற்றும் கிறிஸ்தவ இலக்கியங்களைப் பயன்படுத்தி ஆராதனையோ அல்லது ஊழியாமே செய்யலாம். கிறிஸ்துவப் பணியாளர்கள், வேலையாட்கள் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு,பஹ்ரைனின் தலைநகரமும் பொருளாதார மையமுமான மனாமாவில் வளைக்குடா அரபியர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றது. அதுபோலவே, நகரத்தின் இதயத்துடிப்பாக விளங்கும் செளக் மார்க்கெட்டிலும் விசுவாசிகளுக்கு அங்கு பொருள் வாங்க வருபவவர்களோடு நட்புறவோடு பழகி,தேநீர் அருந்தி உரையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன.
ஜெபக்குறிப்புகள்.
விசுவாசிகள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்தி வளைகுடா அரபு மக்களோடு தொடர்ப்பையும் உறவையும் ஏற்படுத்திக் கொள்ள ஜெபியுங்கள்.
பஹ்ரைனின் நீண்ட கால ஊழியம் செய்ய விரும்புவர்களுக்கு தேவன் வேலைகளைத் தந்தருளும்படி ஜெபியுங்கள்.
பஹ்ரைனிய தொழிலதிபர்களுக்காக ஜெபியுங்கள்.குறிப்பாக வளர்ந்து வரும் வங்கி சம்பந்தப்பட்ட பொருளாதாரத்தில் இவர்கள் தேவனை அறிந்து கொண்டு அவருடைய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட ஜெபியுங்கள்.
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/mid-near-east/bahraini-arabs/
Leave a Reply