கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள் -9
ஈராக்கிய விதவைகள் : மூன்று போர்களின் வேதனையும்,பாடுகளும்.
கடந்த 32 ஆண்டுகளில் ஈராக் மூன்று பெரிய வேதனையான, கோரமான,அதிகச் செலவுள்ள,பிரிக்கின்ற,அழிக்கின்ற போர்களில் ஈடுபட்டிருந்தது.
ஈரான் –ஈராக் போர் -1980 -1988 (3,00,000+ஈராக்கிய மரணங்கள்)
முதலாவது வளைகுடாப் போர் 1990 -1991 (1,00,000+ஈராக்கிய மரணங்கள்)
டிசம்பர் 2011 முதல் ஈராக்கில் வெளிநாட்டு ஈடுபாடு நின்று போனாலும், தீவிரவாத செயல்கள் மூலமாக இன்னும் பிரச்சனைகள் தொடருகின்றன. மேற்கூறிய போர்கள் அல்லாமல் அதிபர் சதாம் ஹியாக்களின் தோல்வியில் முடிந்த புரட்சி,வடக்க ஈராக்கில் சதாம் ஹீஸைனால் குர்டு இன மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தேசியவாக அடக்குமுறை ஆகியவைகளும் நிகழ்ந்துள்ளன. இவைகளெல்லாம் பல்லாயிரக்கணக்கான மரணங்களை விளைவித்துள்ளன.
இதன் விளைவாக ஈராக்கில் கிட்டத்தட்ட 1,00,000/-விதவைகள் இருக்கிறார்கள் (நாட்டிலுள்ள பெண்களில் கிட்டத்தட்ட 9%).பல நேரங்களில் இளம்விதவைகளான ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை உடைய இளம்விதவைகளுக்கு புதிய கணவன்மார்கள்க் கிடைத்து விடுவார்கள்.ஆனால் வயதான விதவைகளுக்கும் அதிகமான குழந்தைகளையுடைய விதவைகளுக்கும் மறுமணம் என்பது அபூர்வமானது.சில வேளைகளில் நடக்கவே முடியாததாக இருக்கிறது.சில வெளிநாட்டு அரசாங்கங்கள் தங்கள் படைகள் ஈராக்கில் இருந்த போது விதவைகளுக்குத் தீவிரமாக உதவி செய்தன. அதைப் போலவே ஈராக்கிய அரசாங்கமும் இந்தப் பெண்களுக்கு உதவி செய்ய குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொண்டது, ஆனால் மலை போன்ற இந்த பிரச்சனை அரசாங்க ஸ்தாபனங்களுக்கும்,அவர்களுடைய செலவு திட்டங்களுக்கும் மிஞ்சின ஒன்றாயிருக்கிறது.
பெண்கள் வேலை செய்தவதையும்,சமூக நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதை தடை செய்கின்ற ஒரு சமுதாயத்தில் வாழுகின்ற இப்பெண்களின் அவலநிலையை கற்பனை செய்து கொள்ளலாம்.அநேகப் பெண்களுக்கு ஒரு குடும்பத்தை நடந்துவதற்கு போதுமான வருமான வருகின்ற வேலை கிடைப்பது இவர்களது தகுதிக்கு மிஞ்சினதாயும்,சாத்தியம் இல்லாத்தாயும் இருக்கிறது. அதிகமான பெண்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக பாலியல் தொழிலுக்குச் சென்று இருக்கின்றனர்.
ஜெபக்குறிப்புகள்.
சங்கீதம் 68:1-6 மற்றும் யாக்கோபு 1:27 ஆகிய வசனங்களை சத்தமாக வாசியுங்கள்.தேவனுடைய உண்மையை அறிவித்து இந்த விதவைகள் தங்கள் அனுதின ஆகாரத்தைப் பெற்றுக் கொள்ளவும்,தங்களது மற்றும் குடும்பத்தினருடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் தேவன் உதவி ஜெபியுங்கள்.
கஷ்டத்தில் இருக்கும் இப்பெண்களின் நித்திய இரட்சிப்பிற்காகவும், இவர்கள் தேவனை சந்திக்கவும்,அறிந்து கொள்ளவும் ஜெபியுங்கள்.
விதவைகளையும், அநாதைகளையும் பராமரிக்கிற அரசாங்க ஸ்தாபனங்களுக்கு புதிய சிந்தனைகளையும், ஏராளமான நிதியுதவிகளும் கிடைக்க ஜெபியுங்கள் (ரோமர்-13:3-7)
ஐந்து அப்பம் இரண்டு மீன்களைக் கொண்டு ஏராளமான ஜனங்களை போஷித்ததன் மூலம் இயேசு கிறிஸ்து எல்லாரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கினார்.(
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/mid-near-east/iraqi-widows/
Leave a Reply