IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

கத்தோலிக்க வேதாகமம் 73 புத்தகங்கள் இருப்பது ஏன்?

September 16, 2011

கத்தோலிக்க வேதாகமம் 73 புத்தகங்கள் இருப்பது ஏன்?

கேனான் என்ற பதம் உபயோகப்படுத்தப்படும் பொழுது, கேனான் என்றால் எபிரேய மொழியில் சத்தியத்தின் அளவுகோல் என்று அர்த்தமாகும். மற்றொருவிதத்தில் ஏன் வேதத்தின் 66 புத்தகங்களை மட்டும் தெரிந்தெடுத்திருக்கிறீர்கள். புதிய ஏற்பாட்டிலும் கூட வேறு அநேக சுவிசேஷங்கள் இருந்தன. பிறகு ஏன் நான்கை மட்டும் தெரிந்து கெண்டிருக்கிறீர்கள்?

முதலாவதாக, நாம் லூக்கா 24 ம் அதிகாரத்தை வாசிக்கும் போது 25 முதல் 27 வசனங்கள் சொல்லுகின்றன்.

இயேசு சொல்லுகிறார், “தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை விசுவாசிக்கிறதற்கு புத்தியில்லாதவர்களாக இருக்கிறீர்களே, நான் மரித்து, மரணத்திலிருந்து உயிரோடெழும்ப வேண்டும் என்பதை அறியாதிருக்கிறீர்களோ“.

மேலும் அவை கூறுகின்றன, அவர் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகங்களிலும், சங்கீதப் புஸ்தகங்களிலும் தன்னைக் குறித்து எழுதியிருக்கிறதைக் குறித்து விளக்குகிறார். எபிரேயத்தில் தோரா, நெபீம், கெத்துபீம் என்று சொல்லுகிறோம் இவைகள் தான் பழைய ஏற்பாட்டின் 39 புத்தகங்களாகும்.

ரோமன் கத்தோலிக்கர்கள் நண்பர்களுக்கு வேறு சில புத்தகங்களும் உள்ளன என்று ஒருவர் சொல்லலாம். ஆனால் 2 மக்காபியர் 2ம் அதிகாரம் 23, 24 முதல் 32 வசனங்கள் வரை, சொல்லப்படுகிறது மெய்யான தீர்க்கதரிசி எழும்பும் வரை நீங்கள் காத்திருங்கள். அதன் அர்த்தம என்னவெனில் மக்காபியர் புத்தககத்தின் ஆக்கியோன் அதை எழுதும் போதும் அங்கே மெய்யான தீர்க்கதரிசிகள் இருக்க வில்லை. மீண்டும் 1 மக்காபியர் 9: 27 மற்றும் 4: 41 சொல்லுகின்றன, மெய் தீர்க்கதரிசி வரும் வரை காத்திருங்கள்.எனவே இந்த சேர்க்கைகள் எழுதப்படும் போது அங்கே மெய் தீர்க்கதரிசிகள் இல்லை என்று ரோமன் கத்தோலிக்க புத்தகங்களே கூறுகின்றன.

மீண்டும் லூக்கா 24 ம் அதிகாரம் 44-46 வசனங்களில் தன்னைப்பற்றி மோசேயின் நியாயப்பரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகத்திலும் சங்கீதங்களிலும் எழுதியிருக்கிறவைகளைப் பற்றி இயேசு வெளிப்படுத்துகிறார் என்று சொல்லுகின்றன. எனவே பழைய ஏற்பாட்டின் 39 புத்தகங்களைத் தான் இயேசு உபயோகப்படுத்தியிருக்கிறார்.

மேலும் புதிய ஏற்பாட்டு ஆக்கியோன்கள் இந்தப் பழையஏற்பாட்டை 210 தடவை மேற்கோள்காட்டியிருக்கின்றனர். இயேசு எந்த ஒரு தள்ளுபடியாகமத்திலிருந்தும் குறிப்பை மேற்கோள்காட்டவில்லை. அப்போஸ்தலர்கள் எந்த தள்ளுபடியாகமத்திலிருந்தும மேற்கோள்காட்டவில்லை. எனவே பழைய ஏற்பாடானது 39 புத்தகங்களாக கிறிஸ்துவால் தீர்மானிக்கப்பட்டது. புதிய ஏற்பாட்டை பொறுத்தவரை ரோமன் கத்தோலிக்கர்களும், புரட்டஸ்டாண்டு கிறிஸ்தவர்களும் ஒரேமாதிரியான 27 புத்தகங்களையே கொண்டுள்ளனர். எனவே நமக்கு 66 புத்தகங்கள் இருக்கின்றன.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network