கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள்-8
அமெரிக்க ஐக்கிய நாட்டில் டென்னஸிலுள்ள நாஷ்வில்லி:நாட்டுப்புற இசையின் தலைநகரிலுள்ள முஸ்லீம்கள்.
டென்னஸியிலுள்ள நாஸிவில்லி, நாட்டுப்புற இசைக்கு தலைநகரமாகும். இது 11,000 குர்டு மக்களுக்கும், 8,000 அதிகமான சோமாலிய மற்றும் சோமாலிய பாண்ட்டுஸ் மக்களுக்கும், மேலும் மற்ற முஸ்லீம் இனத்தவருக்கும் இருப்பிடமாக இருக்கிறது. நாஷ்வில்லி பகுதியில் 30,000 முஸ்லீம்கள்.பல வருடங்களுக்கு முன்பாக நாஷ்வில்லியிலுள்ள ஒரு உள்ளுர் போதகர் இவர்களைக் குறித்து பாரமடையத் தொடங்கினார். அவர் சொன்னார்,’எங்கள் நகரத்தைச் சுற்றிலும் புதிய முஸ்லீம் அயலகத்தார் இருந்தார்கள்.இவர்கள் பல பகுதிகளிலிருந்து நாஷ்வில்லியிற்குக் கடந்து வந்துள்ளனர். “ஆனால் நான் இன்னும் கூர்ந்து கவனித்த போது,இங்குள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இவர்களைக் கண்டு கொள்வேதியில்லை என்பதைக் கண்டுபிடித்தேன்.அவர்களைக் குறித்து அறியாததினாலோ,பயத்தினாலோ.அல்லது அறியாமமையினாலோ, கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்திகனர்கள் எங்கள் அருகினில் தேவன் அழைத்து வந்திருந்தவர்களோடு நட்பை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
ஆகவே அவர் முஸ்லீம்களைக் குறித்தும், அவர்களது விசுவாசத்தைக் குறித்தும் மற்றும் அவர்களது உலகப் பார்வையைக் குறித்தும் எவ்வளவு தூரம் அறிந்து கொள்ள முடியுமோ அவ்வளவு தூரம் அறிந்து கொள்ள ஆரம்பித்தார். எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதொல்லாம் மற்றவர்களுக்கு அவ்விதம் செய்ய உற்சாகப்படுத்தினார்.அவர்களுக்
நாஷ்வில்லியைப் போன்றே அமெரிக்க நாட்டிலுள்ள பல நகரங்கள் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களின் இருப்பிடமாக ஆகியிருக்கிறது.பல வருடங்களாக தேவன் ஊழியர்களை எழுப்பி வருகிறது. ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ளுவது, இணைந்து கொள்ளுவது மற்றும் ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ளுவதும் மக்கள் முஸ்லீம்களை சந்திப்பதற்கு ஆரம்பிக்க உதவியாக இருக்கிறது. மக்கள் புதிதாக வருபவர்களை வரவேற்கவும்,அவர்களுக்காக குறிப்பா ஜெபிக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.வெகு சிலரே கிறிஸ்துவண்டைத் திரும்பியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுக்கிறது ஆனால் அதிகமான எண்ணிக்கையுள்ளவர்கள் இப்போது ஆவலுடன் தேடுகிறவர்களாயிருக்கிறார்கள்.
ஜெபக்குறிப்புகள்
நாஷ்வில்லியிலுள்ள விசுவாசிகள் முஸ்லீம்களோடு நல்ல,முழுமையான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள மேலும் மேலும் ஊக்குவிக்கப்பட ஜெபியுங்கள்.
முஸ்லீம்கள் பல தேவைகளோடும் பிரச்சனைகளோடும் வாழ்கின்றவர்கள்.இவைகளைப் புரிந்து கொண்டு இவர்களுக்கு உதவி செய்ய உள்ளுர் கிறிஸ்தவர்கள் முன்வர ஜெபியுங்கள்.
முஸ்லீம்களின் கலாசர மற்றும் மத ரீதியான முன் கூட்டிய அபிப்பிராயங்கள்; இயேசு கிறிஸ்துவைக் குறித்த நற்செய்தியைப் புரிந்து கொள்வதை அவர்களுக்குக் கடினமாக்கி வைத்திருக்கிறது. அவ்விதமான தவறான எண்ணங்கள் நீங்கி, திறந்த மனதோடு நற்செய்தியை ஏற்றுக் ஜெபியுங்கள்.
பல நேரங்களில்,புதிதாகக் குடியேறும் முஸ்லீம்கள் மேற்கத்திய,தனிப்பட்ட,நகர கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ள கஷ்டப்படுகின்றனர். இரு கலாச்சாரத்திற்கிடையே சிக்கித் தவிக்கும் இவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் உண்மையான மற்றும் சரியான நட்புறவைத் தர ஜெபியுங்கள்.
தேவன் நாஷ்வில்லியிலுள்ள முஸ்லீம்கள் மீது விசுவாசிகளுக்கு தயவைக் கட்டளையிடும்படியாக ஜெபியுங்கள்.
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/america-north/nashville-tennessee/
Leave a Reply