கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள் 2
திருமணமாகாத தனியாக இருக்கும் தாய்மார்கள் மொரோக்கோ பெண்களின் விசேஷித்த சவால்கள்.
உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் இருக்கின்ற பாலுறவு மற்றும் திருமணம் சம்பந்தப்பட்ட கஷ்டங்கள் மொரோக்கோவிலும் இருக்கிறது. இருப்பினும் மொரோக்கோவின் “சிறிய கன்னிமார்களும்”விசேஷித்த கஷ்டங்கள் உண்டு.
மொரோக்கோவின் திருமணமாகாத தாய்மார்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் இருந்து வந்த ஏழ்மையான, படிப்பறிவில்லாத பெண்கள். இவர்கள் ஆரம்பத்தில் வீட்டு வேலைக்காரிகளாக அல்லது ஏழு வயது மாத்திரம் நிரம்பிய “சிறிய கன்னி”மார்களாக வேலை செய்ய ஆரம்பிக்கின்றனர். பொருளாதார தேவைகள் காரணமக இவர்களது குடும்பத்தார்களால் அடிமைகளாக விற்கப்படும் இவர்கள் வசதி படைத்த மொரோக்கர்களுக்கு நீண்ட மணி நேரங்கள் சமைப்பதிலும்,சுத்தம் செய்வதிலும் செலவிடுகின்றனர். இவர்கள் சம்பாதிக்கின்ற கொஞ்சப் பனத்தையும் இவர்களது தகப்பன்மார்கள் எடுத்துக் கொள்ளுகின்றனர். பல வருடங்களைஇவ்விதம் கழிக்கின்ற இவர்கள் அன்பாக பேசி திருமணம் செய்து கொள்ளுகிறேன் என்று சொல்லுகிற எந்த ஆணோடும் உடலுறவு வைத்துக் கொள்ளுகின்றனர்.கணக்கிலடங்காத மற்றவர்கள் கற்பழிக்கப் படுகின்றனர்(வீட்டின் சொந்தக்காரரின் சொத்தாக இவர்கள் கருதப்படுவதால்).கர்ப்பமாகிற பெண்கள் பெரும்பாலும் ஒன்று தெருவை வந்தடைகின்றனர்.அல்லது அதைவிட மோசமான நிலைக்குள்ளாகின்றனர்.திருமணத்
ஒரு பெண் திருமணத்தின் போது கன்னியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறாள்.அவளது கன்னிமையைக் குறித்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.கன்னியாக இல்லாதிருப்பது குடும்பத்திற்கு அவமானத்தைக் கொண்டுவரும். திருமணத்திற்கு வெளியே உடலுறவு வைத்துக் கொள்ளுவது கலாச்சாரத் தடையாக இருப்பதால் திருமணமாகாத தாய்மார்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.துன்புறுத்
மொரோக்கோவில் உள்ள சில விசுவாசிகள், இவ்விதமாக தனியாக இருக்கும் தாய்மார்கள் தங்கள் குழந்தையை தங்களோடு வைத்துக் கொள்ளவும். அவர்களுக்கு வேலை கிடைக்கவும் உதவியாக இருக்கின்றனர்.
தேசம் முழுவதிலும் தகப்பன்மார்கள் தகப்பனாயிருப்பதன் எண்ணத்தில் மாற்றம் கொள்ள ஜெபியுங்கள்: அவர்கள் தங்கள் மகள்களை குடும்பகெளரவத்திற்கு மேலாக மதிக்க ஆரம்பிக்க ஜெபியுங்கள்.
தனியாக இருக்கும் தாய்மார்கள் மத்தியில் பணி புரிபவர்களுக்காக ஜெபியுங்கள்: சமுதாயத்தால் புரிந்து கொள்ளப்படாத போதும், குற்றஞ்சாட்டப்படும் போதும்,தைரியமாக எதிர்த்து நிற்க ஜெபியுங்கள்.
தாய்மார்களுக்காக ஜெபியுங்கள்:அன்பான கடவுள் ஒருவர் உண்டென்றும்,அவர் அவர்களுக்கு மன்னிப்பை அருளுபவர் என்றும், அவர்கள் மீது அக்கறை கொள்பவர் என்றும், ‘திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும்,விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாய் இருக்கிறவர்’(சங்கீ.68:5) என்றும் அறிந்து கொள்ள ஜெபியுங்கள்.
Leave a Reply