கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களே பைபிளை விமர்ச்சிக்கும் கூட்டங்கள் அதிகமாக மேற்கோள் காட்டும் எசேக்கியல் 23 அதிகாரம் மற்றும் அந்த புத்தகத்தில் வரும் வார்த்தைகள் ஆகியவற்றை குறித்து ஒரு நாம் திட்டமாக அறிந்துகொள்ள வேண்டும்.
அவர்கள் என்ன நோக்கத்துக்காக இப்படிப்பட்ட விசயங்களை காட்டி பைபில் ஆபாசமாக சொல்லுகிறது .ஆபாசத்தை கற்றுக்கொடுக்கிறது என்றெல்லாம் புலம்புது தங்கள் புத்தகங்களில் உள்ள ஆபாசங்களை மக்கள் அறிந்துகொள்ளக்கூடாது என்ற காரணத்துக்கே ஆகும்.
ஆனால் பைபிளை பொருத்தவரை தடித்த கடினமான வார்த்தை பிரயோகங்கள் இந்த வசனங்களில் பிரயோகிக்கப்பட்டிருந்தாலும்,இந்த வசனங்கள் வெளிப்பட்ட காலம்,மக்களின் நிலை,இந்த வசனம் இறக்கப்பட்ட நோக்கம் இவற்றோடு இந்த வசனங்களை வாசித்தால் இது ஆபாசம் அல்ல அவசியம் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.
நம்மை விட இந்த வசனங்கள் வெளிப்பட்ட கால மக்கள் இந்த வசனங்கள் ஆபாசமானது என்று நினைத்திருந்தால் அதை அவர்கள் எப்படி வேதமாக ஏற்றிருப்பார்கள்.ஆனால் வரலாறுகளை படிக்கும் பொழுது சிறையிருப்புக்கு பின் ஜனங்கள் மனத்திருந்தியதாகவே சொல்லப்பட்டிருக்கிறது.
இதற்கு எல்லாவற்றுக்கும் மேல் இந்த எசேக்கியல் புத்தகம் கிறிஸ்தவர்களின் புதிய ஏற்பாட்டில் அல்ல யூதர்களின் பழைய ஏற்பாட்டு புத்தகத்திலேயே உள்ளது.இந்த புத்தகங்கள் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த காலத்திலேயே யூதர்களால் புனிதமாக கருதப்பட்டு வேதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வாசிக்கப்பட்டு வந்துள்ளது.இயேசு கிறிஸ்துவும் இதை ஆபாசம் என்று சொல்லவில்லை.இது வேதமல்ல மனிதர்கள் எழுதியது என்றும் சொல்லவில்லை.
அடுத்தது நம்முடைய அப்போஸ்தலர்கள் காலத்திலேயும் இந்த புத்தகங்கள் நடப்பில் வேதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டே இருந்தது.அவர்களும் இதில் ஆபாசம் உண்டு,இது இறைவேதமல்ல என்று யாரும் சொல்லவில்லை.
இப்படியிருக்கும் பொழுது இதை பிறகு யூதர்கள் மாற்றி எழுதிவிட்டார்கள் என்று சொல்ல முடியாது.மேலும் இந்த வாதத்துக்கு வலுசேர்க்கும் முகமாக இந்த கடின வார்த்தைகள் அனைத்து எசேக்கியல் காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களை திட்டியே சொல்லப்பட்ட வசனங்களாகும்.எந்த ஒரு கூட்டமும் தங்களை தாங்களே இப்படி கடினமாக திட்டகூடிய வசனங்களை எழுதி வேதம் என்று வாசிப்பார்களா என்பதையும் யோசிக்க வேண்டும்.
இன்றைக்கும் யூத தனாக்கில் உள்ள இந்த எசேக்கியல் அதிகாரத்துக்கு யூதர்கள் கொடுக்கும் விளக்கம் தங்கள் மூதாதையர்களின் முரட்டாட்டம் தான் யாவே தெய்வம் எங்களை தண்டிக்க காரணம் என்பதாகவே இருக்கிறது.யூதர்கள் அப்படி எழுதிக்கொண்டார்கள் என்று நினைக்கவே அது முட்டாள் தனமாக இருக்கும் பொழுது இதை யூதர்கள் செய்திருப்பார்கள் என்று சொல்லுவது எவ்வளவும் அறிவுடமையாகாது.
சரி யூதர்களை திட்டி கிறிஸ்தவர்கள் எழுதியிருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது.ஏன் என்றால் இது இன்னமும் யூதர்களின் வேதமாகவே இருக்கிறது.
இன்றைக்கும் யூதர்களின் பழைய ஏற்பாட்டை கிறிஸ்தவர்கள் தங்கள் இறைவனிடம் இருந்து வந்த வேதமாகவே ஏற்றுக்கொள்ளுகிறார்கள்.
இப்பொழுது எசேக்கியலுக்கு திரும்புவோம்.
1,இறைவனுக்கும் மனிதர்களுக்கும் குறிப்பாக இஸ்ரவேலருக்கும் இருந்த உறவு முறைகள் எப்படி எல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளது.?
பரிசுத்த வேதாகமத்தில் மனிதர்களுக்கும் குறிப்பாக இஸ்ரவேலர்களுக்கும் இறைவனுக்கும் பல தனிப்பட்ட உறவு நிலைகள் உவமையாக கூறப்பட்டுள்ளது.
உதாரணமாக தகப்பன்,தாய்,சிநேகிதன்,கணவன் போன்ற உறவு நிலைகளில் கடவுள் இடைபட்டுள்ளார்.
இஸ்ரவேல் என் சேஷ்ட புத்திரன் என்றும்,சிருஷ்டிகரே உன் நாயகர் என்றும் பல வசனங்களில் உவமானம்மாக்கப்படுள்ளது.
2,எசேக்கியல் புத்தகம் எந்த உவமானத்தின் அடிப்படையில் சொல்லப்படுகிறது?
எசேக்கியல் புத்தகத்தில் கடவும் தன்னை கணவனாகவும் இஸ்ரவேலர்கள் தேசத்தை தன்னுடைய மனைவியாகவும் அவள் தனக்கு உண்மையாக இருக்கவில்லை என்று கூறி உவமையாக கண்டிக்கிறார்.இதை எசேக்கியல் 16 அதிகாரத்தில் காணலாம்.
ஒரு தேசம் பெண்ணாக உருவகப்படுத்துவது நமக்கு புதியதல்ல.நம்முடைய இந்திய தேசமும் பாரத மாதா என்ற பெண்ணுருவிலேயே அழைக்கப்படுகிறது.
நம்முடைய மகாகவி பாரதியார் கூட முப்பது கோடி முகமுடையாள் என்றே பாடியுள்ளார்.நாம் பாரதத்தாயின் புதல்வர்கள் என்று நடைமுறை பேச்சு வழக்கு உள்ளது.இது எல்லாவற்றுக்கும் மேல் ஒரு தேசிய அவமானம் நிகழும் பொழுது அது பாரத தாயை மானபங்கப்படுதியதற்கு இணையானது என்றே எழுத்தாளர்களாலும்,புலவர்களாலும் எழுதப்படுகிறது.
இந்த விசயங்களை நாம் ஏன் இங்கு எழுதுகிறோம் என்றால் நம்முடைய புரிந்து கொள்ளுதல் என்பது நம்மை சார்ந்தே இருக்கிற படியினால் அதன் மூலமே விளக்க வேண்டியுள்ளது.
3,இந்த வசனங்கள் இறங்கிய காலத்திய இஸ்ரவேலர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள்?
யோயாக்கின் அரசனுடைய காலத்தில் சிறைப்பட்டு பாபிலோனுக்கு ஒரு கூட்டம் நாடுகடத்திக்கொண்டு போகப்படுகிறது.அதில் இந்த எசேக்கியல் தீர்க்கதரிசியும் ஒருவர்.சிறைப்பட்டு போனவர்கள் அங்கு உள்ள கலாச்சாரங்களின் படி தங்களை பாவ வாழ்க்கைக்கு உட்படுத்தும் பொழுது முதலாவது எசேக்கியல் தீர்க்கதரிசனம் உரைக்க ஆரம்பிக்கிறார்.பிறகு யூதா தேசத்திலும்,இஸ்ரவேல் தேசத்திலும் (இஸ்ரவேல் தேசம் சாலமோன் அரசனுக்கு பிறகு இரண்டாக பிரிக்கப்பட்டு யூதாவுக்கு எருசலேம் தலைநகராகவும்,இஸ்ரவேலுக்கு சமாரியா தலை நகராகவும் இருந்தது வரலாறு.அதை பற்றிய விவரங்கள் வேறு கட்டுரைகளில் காணலாம்) மீதியாக இருக்கும் ஜனங்களை பற்றிய தரிசனத்தை எசேக்கியலுக்கு கடவுள் காண்பிக்கிறார்.அவர்கள் எவ்வளவு தண்டிக்கப்பட்டும் மீந்திருக்கிறவர்கள் கூட தங்களை சுற்றியுள்ள உண்மை இறைவனை அறியாத மக்கள் கூட செய்ய தயங்கும் பாவங்களை கூட இவர்கள் துணிகரமாக செய்தார்கள்.சுற்றியுள்ள ஜாதிகளே மிகப்பெரிய அருவருப்புகளை நடப்பிப்பவர்கள்.ஆனால் அதைவிட பெரிய அருவருப்புகளை இவர்கள் செய்தார்கள் என்றால் புரிந்துகொள்ளலாம் அவர்களின் ஆன்மீக குருட்டாட்டத்தை.
அப்படி என்ன செய்தார்கள் இஸ்ரவேலும்,யூதாவும்:
1,அந்நிய ஜாதிகளை விட கொடிய பாவத்தை செய்தனர். (5 அதிகாரம்)
2,அந்நிய தெய்வங்களுக்கு பலியிட பலிபீடங்களை கட்டினர்.அதில் விக்கிரகங்களுக்கு பலியிட்டு வந்தனர்(6 அதிகரம்)
3,பச்சையான மரங்களுக்கு கீழ் எல்லாம் அந்நிய தெய்வங்களை வைத்து வழிபட்டனர்.
4,கடவுளுக்கென்று கட்டிய ஆலயத்தில் விக்கிரகத்தோப்புகளை வைத்து அதை அருவருப்பாக்கினர்.(அதிகாரம் 8)
5,ஊரும் பிராணிகள்,மிருகங்கள் ஆகியவற்றின் சுரூபங்களை சுவற்றில் வரைந்து அதை வணக்கத்துக்கு உரியதாக ஆக்கினர்.அவைகளுக்கு தூபம்காட்ட ஆசாரியர்கள் துணிகரமாக நின்றனர்.
6,தேவதாசிகள் அதாவது விலைமாதர்கள் அந்நிய கடவுளுக்கு அர்பணிக்கப்பட்டவர்களாக தேவாலயங்களில் உட்காரவைக்கப்பட்டிருந்தனர்.
7,படைத்தவரை விட்டு சூரியனை நமஸ்காரம் பண்ணிக்கொண்டிருக்கும் மூப்பர்கள்.
8,ஆணுடைய குறியை உருவமாக செய்து அதை வழிபட்டனர்.(16 அதிகாரம்)
9,அவர்கள் தங்கள் குழந்தைகளை அந்நிய தெய்வங்களுக்கு பலியிட்டனர்.
10,அவர்களை தீக்கடக்க பண்ணினர்,
11,மரத்துக்கும் கல்லுக்கும் ஆராதனை செய்தனர்.(20 அதிகாரம்)
12,ஓய்வு நாளை பரிசுத்தக்குலைச்சல் ஆக்கினார்கள்(22 அதிகாரம்)
13,தன் தாய்மார்களோடு தவறான உறவு வைத்தனர்.
14,அந்நியப் பெண்களை மானபங்கபடுத்தினர்,
15,அடுத்தவன் மனைவியை அபகரித்து அவளுடன் அவலட்சணமாய் நடந்தார்கள்,
16,தன் மருமளை கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை,
17,தன் சகோதரியுடம் அவலட்சணமாய் நடந்தார்கள்
18,வட்டியும் ,லஞ்சமும் அங்கு பெருகியிருந்தது.
இன்னும் ஆண்புணர்ர்சிக்காரர்கள் ,இலச்சையாக மிருகங்களோடு புணர்ச்சி செய்கிறவர்கள் அந்தக்காலத்தில் இஸ்ரவேலுக்குள் காணப்பட்டனர்.I இராஜாக்கள் 14:24
இப்படிப்பட்ட மிருக்கத்தனமான பாலியல் மற்றும் அருவருப்பான ஆராதனைகள் கடவுள் பெயரிலேயே விபச்சாரம் இப்படிப்பட்ட ஆன்மீக சீரழிவுகள் நிறைந்த காலகட்டத்தில் தீர்க்கதரிசி மூலமாக கடவுள் எருசலேம்,சமாரியா இரண்டு தலைநகரங்களை இரண்டு பெண்களாகவும் ,இறைவனுக்கு மட்டுமே வாழ்க்கைப்பட்ட இவர்கள் அவருடைய கட்டளைகளுக்கு மட்டுமே கீழ்படிந்து அந்நிய ஜாதிகளை பழக்கவழக்கங்களை பின்பற்றாமல் பரிசுத்தமாக தங்களை காத்துக்கொள்ள வேண்டிய இவர்கள் அந்நியர்களோடு சேர்ந்து செய்த ஆன்மீக சீரழிவுகளின் தாக்கத்தை ஒரு மிருகத்தனமான விபச்சாரத்துக்கு ஒப்பிட்டு தீர்க்கதரிசி மூலமாக கடவுள் பேசுகிறார்.தவறான வழியில் கண்டவர்களோடு சுற்றும் ஒரு மனைவியை கணவன் சாந்தமாக என்ன அடுத்த ஆண்களோடு சுற்றுவது தவறம்மா!இப்படி செய்வது தவறல்லவா? என்று மென்மையாகவே திட்ட வேண்டும் என்று நாம் நினைப்பது கடைந்தெடுத்த முட்டாள்தனமாகும்.ஒரு தகப்பனும் தாயும் தவறான உறவு கொண்டுவிட்டு வரும் தஙகளின் மகளிடம் மிகவும் நாகரீகமாகத் தான் பேசவேண்டும் என்று சொல்லுவது எவ்வளவும் முட்டாள் தனமோ அதே அளவுக்கு ஏன் அதற்கும் மேல் எசேக்கியல் 23 அதிகாரத்தை விமர்ச்சிக்கும் செயலாகும்
அந்த நாட்களின் அலங்கோல நிலையில் அவர்களுக்கு எப்படி உறைக்குமோ அந்த பாணியில் திட்டினால் தான் அவர்களுக்கு புரியும்.அந்த வார்த்தைகளை இன்றைக்கு உள்ள காலத்தில் அர்த்தப்படுத்தி இந்த சூழ்நிலைக்கு எப்படி பார்க்க முடியும்.
மேலும் எசேக்கியல் புத்தகத்தின் இந்த வார்த்தைகள் எல்லாம் மேலே கண்ட அருவருப்புகளின் உச்சக்கட்ட விளைவையும் அதைவிட்டு இவர்கள் மனந்திரும்ப வேண்டும் என்ற அறிவுரைக்குமே எழுதப்பட்டுள்ளது.அதில் உள்ள கடினமான வார்த்தைகள் ஒன்றும் பின்பற்றி நடக்க வேண்டிய கட்டளைகள் அல்ல.அந்த மக்களின் செயலை அவர்கள் பாணியில் அவர்களுக்கு விளக்கிக் காட்ட சொல்லப்பட்ட வார்த்தைகளே.
அதன் நோக்கம் அவர்கள் மேலே கண்ட அருவருப்புகளில் இருந்து வெளியேறி உண்மையான இறைவனை தொழுதுகொள்ள வேண்டும் என்பதே ஆகும்.இதை உணர்ந்தால் அந்த வசனங்களில் எந்த குழப்பங்களும்,ஆபாசங்களும்இல்லை.
முத்தான பதிப்பு. வாசித்துத் தெளிவடைந்தேன். நன்றி.
thank for answer
எசேக்கியேல் 16 அதிகாரம் (mudinja vetla vachi padinga)
7. உன்னை வயலின் பயிரைப்போல அநேகமாயிரமாய்ப் பெருகும்படி வைத்தேன்; நீ வளர்ந்து பெரியவளாகி, மகா சௌந்தரியவதியானாய்; உன் ஸ்தனங்கள் எழும்பின, உன் மயிர் வளர்ந்தது; ஆனாலும், நீ நிர்வாணமும் அம்மணமுமாயிருந்தாய்.
8. நான் உன் அருகே கடந்துபோன போது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன் காலம் பருவகாலமாயிருந்தது; அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து, உன் நிர்வாணத்தை மூடி, உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கை பண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய்.
9. நான் உன்னை ஜலத்தினால் முழுக்காட்டி, உன்னை இரத்தமற ஸ்நானம் பண்ணுவித்து, உனக்கு எண்ணெய் பூசி,
10. சித்திரத்தையலாடையை உனக்கு உடுத்தி, சாயந்தீர்ந்த பாதரட்சைகளை உனக்குத் தரித்து, கட்ட மெல்லிய புடவையையும், மூடிக்கொள்ளப் பட்டுச் சால்வையையும் உனக்குக் கொடுத்து,
11. உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன் கைகளிலே கடகங்களையும், உன் கழுத்திலே சரப்பணியையும் போட்டு,
12. உன் நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன் காதுகளில் காதணியையும், உன் தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் தரித்தேன்.
13. இவ்விதமாய்ப் பொன்னினாலும் வெள்ளியினாலும் நீ அலங்கரிக்கப்பட்டாய்; உன் உடுப்பு மெல்லிய புடவையும் பட்டும் சித்திரத்தையலாடையுமாயிருந்தது; மெல்லிய மாவையும் தேனையும் நெய்யையும் சாப்பிட்டாய்; நீ மிகவும் அழகுள்ளவளாகி, ராஜ்யத்தைச் சுதந்தரிக்கும் சிலாக்கியத்தையும் பெற்றாய்.
14. உன் அழகினாலே உன் கீர்த்தி புற ஜாதிகளுக்குள்ளே பிரசித்தமாயிற்று; நான் உன்மேல் வைத்த என் மகிமையினாலே அது குறைவற்றதாய் இருந்ததென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
15. நீயோவென்றால் உன் அழகை நம்பி, உன் கீர்த்தியினால் சோரமார்க்கமாய் நடந்து, வழிப்போக்கரில் உனக்கு நேர்பட்ட யாவரோடும் வேசித்தனம்பண்ணி,
16. உன் வஸ்திரங்களில் சிலவற்றை எடுத்து, பலவருணச் ஜோடிப்பான மேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்பண்ணினாய்; அப்படிக்கொத்த காரியங்கள் ஒருக்காலும் சம்பவித்ததுமில்லை, சம்பவிப்பதுமில்லை.
17. நான் உனக்குக் கொடுத்த என் பொன்னும் என் வெள்ளியுமான உன் சிங்கார ஆபரணங்களை நீ எடுத்து, உனக்கு ஆண்சுரூபங்களை உண்டாக்கி, அவைகளோடே வேசித்தனம்பண்ணி,
18. உன் சித்திரத்தையலாடைகளை எடுத்து, அவைகளை மூடி, என் எண்ணெயையும் என் தூபவர்க்கத்தையும் அவைகளின்முன் படைத்து,
19. நான் உனக்குக் கொடுத்த என் அப்பத்தையும், நீ சாப்பிடும்படி உனக்குக் கொடுத்த மெல்லிய மாவையும் நெய்யையும் தேனையும் நீ அவைகளின்முன் சுகந்தவாசனையாகப் படைத்தாய்; காரியம் இப்படி ஆயிற்றென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
20. நீ எனக்குப் பெற்ற உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் எடுத்து, அவர்களை அவைகளுக்கு இரையாகப் பலியிட்டாய்.
21. நீ செய்த வேசித்தனங்கள் போதாதென்று, நீ என் பிள்ளைகளை அவைகளுக்குத் தீக்கடக்கப்பண்ண ஒப்புக்கொடுத்து, அவர்களைக் கொலைசெய்தாய்.
22. நீ உன் எல்லா அருவருப்புகளிலும் வேசித்தனங்களிலும் நடக்கும்போது, நிர்வாணமும் அம்மணமுமாயிருந்ததும், உன் இரத்தத்திலே மிதிக்கப்பட ஏதுவாய்க்கிடந்ததுமான உன் சிறுவயதின் நாட்களை நினையாமற்போனாய்.
23. ஐயோ! உனக்கு ஐயோ! என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ செய்த பொல்லாப்புக்களெல்லாம் தவிர,
24. நீ உனக்கு மண்டபங்களைக் கட்டி, உனக்குச் சகல வீதிகளிலும் உயர்ந்த மேடைகளை உண்டுபண்ணினாய்.
25. நீ சகல வழிமுகனையிலும் உன் உயர்ந்த மேடைகளைக் கட்டி, உன் அழகை அருவருப்பாக்கி, வழிப்போக்கர் யாவருக்கும் உன் கால்களை விரித்து, உன் வேசித்தனங்களைத் திரளாய்ப் பெருகப்பண்ணி,
26. சதை பெருத்த உன் அயல் தேசத்தாராகிய எகிப்திய புத்திரரோடே வேசித்தனம்பண்ணி, எனக்குக் கோபம் உண்டாக்கும்படி உன் வேசித்தனங்களைப் பெருகப்பண்ணினாய்.
27. ஆதலால், இதோ, நான் என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உனக்கு நியமித்த போஜனத்தைக் குறுக்கி, உன் முறைகேடான மார்க்கத்தைக் குறித்து வெட்கப்பட்ட உன் பகையாளிகளாகிய பெலிஸ்தருடைய குமாரத்திகளின் இச்சைக்கு உன்னை ஒப்புக்கொடுத்தேன்.
28. நீ திருப்தியடையாததினால் அசீரிய புத்திரரோடும் வேசித்தனம்பண்ணினாய்; அவர்களோடே வேசித்தனம்பண்ணியும் நீ திருப்தியடையவில்லை.
29. நீ கானான் தேசத்திலே செய்த வேசித்தனத்தை கல்தேயர்மட்டும் எட்டச் செய்தாய்; அதினாலும் நீ திருப்தியடையாமற்போனாய்.
30. வெட்கங்கெட்ட வேசியின் கிரியைகளாகிய இவைகளையெல்லாம் நீ செய்து,
31. சகல வழிமுகனையிலும் உன் மண்டபங்களைக் கட்டி, சகல வீதிகளிலும் உன் மேடைகளை உண்டாக்கினபடியால், உன் இருதயம் எவ்வளவாய்க் களைத்துப்போயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ பணையத்தை அலட்சியம்பண்ணுகிறதினால், நீ வேசியைப்போல இராமல்,
32. தன் புருஷனுக்குப் பதிலாக அந்நியரைச் சேர்த்துக்கொள்ளுகிற விபசார ஸ்திரீயைப்போல இருக்கிறாய்.
33. எல்லா வேசிகளுக்கும் பணையங்கொடுக்கிறார்கள்; நீயோ உன் நேசர்கள் சுற்றுப்புறங்களிலிருந்து உன்னிடத்தில் வேசித்தனஞ்செய்ய வரும்படி அவர்களுக்கெல்லாம் நீயே பணையங்கொடுத்து, அவர்களுக்கு வெகுமதிகளைத் தருகிறாய்.
34. இவ்விதமாய் உன் வேசித்தனங்களுக்கும் வேறே ஸ்திரீகளின் வேசித்தனங்களுக்கும் வித்தியாசமுண்டு; வேசித்தனம்பண்ண அவர்கள் உன்னை பின் செல்லமாட்டார்கள்; பணையம் உனக்குக் கொடுக்கப்படாமல் நீயே பணையம் கொடுக்கிறபடியால் நீ செய்வது விபரீதம்.
35. ஆகையால், வேசியே, கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.
36. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் வேசித்தனத்தின் அசுத்தம் பாய்ந்தபடியினாலும், நீ உன் காமவிகாரிகளோடும் அருவருப்பாகிய உன் நரகலான விக்கிரகங்களோடும் வேசித்தனம்பண்ணி, இவைகளுக்கு உன் பிள்ளைகளின் இரத்தத்தைப் படைத்ததினால் உன் நிர்வாணம் திறக்கப்பட்டபடியினாலும்,
37. இதோ, நீ சம்போகம்பண்ணின உன் எல்லாக் காமவிகாரிகளையும், நீ நேசித்த யாவரையும், நீ பகைத்திருக்கிற அனைவரோடும் நான் கூடிவரச்செய்து, சுற்றிலுமிருந்து அவர்களை உனக்கு விரோதமாகச் சேர்த்து, அவர்கள் உன் நிர்வாணத்தையெல்லாம் காணும்படி உன் நிர்வாணத்தை அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்து,
38. விபசாரிகளையும் இரத்தஞ்சிந்தினவர்களையும் நியாயந்தீர்க்கிறபடியே உன்னை நியாயந்தீர்த்து, உக்கிரகத்தோடும் எரிச்சலோடும் இரத்தப்பழியை உன்பேரில் சுமத்தி,
39. உன்னை அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் உன் மண்டபங்களை இடித்து, உன் மேடைகளைத் தரையாக்கிப்போட்டு, உன் வஸ்திரங்களை உரிந்து, உன் சிங்கார ஆபரணங்களை எடுத்துக்கொண்டு, உன்னை அம்மணமும் நிர்வாணமுமாக விட்டுப்போய்,
40. உனக்கு விரோதமாக ஒரு கூட்டத்தைக் கொண்டுவந்து, உன்னைக் கல்லெறிந்து, உன்னைத் தங்கள் பட்டயங்களால் குத்திபோட்டு,
41. உன் வீடுகளை அக்கினியால் சுட்டெரித்து, அநேக ஸ்திரீகளின் கண்களுக்கு முன்பாக உன்னில் நியாயத்தீர்ப்புகளைச் செய்வார்கள்; உன் வேசித்தனத்தை ஒழியப்பண்ணுவேன்; நீ இனிப் பணையங்கொடுப்பதில்லை.
42. இவ்விதமாய் என் எரிச்சல் உன்னை விட்டு நீங்கும்படி நான் என் உக்கிரத்தை உன்னில் ஆறப்பண்ணி, இனி கோபமாயிராமல் அமருவேன்.
43. நீ உன் இளவயதின் நாட்களை நினையாமல், இவைகளெல்லாவற்றினாலும் எனக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், இதோ, நான் உன் வழியின் பலனை உன் தலையின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அதினாலே இனி உன் எல்லா அருவருப்புகளினாலும் இப்படிப்பட்ட முறைகேடான காரியத்தைச் செய்யமாட்டாய்.
44. இதோ, பழமொழி சொல்லுகிறவர்கள் எல்லாரும்: தாயைப்போல மகள் என்று உன்னைக்குறித்து பழமொழி சொல்லுவார்கள்.
45. நீ, தன் புருஷனையும் தன் பிள்ளைகளையும் அருவருத்த உன் தாயின் மகள்; நீ, தங்கள் புருஷரையும் தங்கள் பிள்ளைகளையும் அருவருத்த உன் சகோதரிகளின் சகோதரி; உங்கள் தாய் ஏத்தித்தி; உங்கள் தகப்பன் எமோரியன்.
46. உன் இடதுபுறத்திலே, தானும் தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சமாரியா உன் தமக்கை; உன் வலதுபுறத்திலே, தானும் தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சோதோம் உன் தங்கை.
47. ஆகிலும் நீ அவர்களுடைய மார்க்கங்களிலே நடவாமலும், அவர்களுடைய அருவருப்புகளின்படி செய்யாமலும், அது மகா அற்பகாரியம் என்கிறதுபோல நீ உன் எல்லா வழிகளிலேயும் அவர்களைப் பார்க்கிலும் கேடாய் நடந்தாய்.
48. நீயும் உன் குமாரத்திகளும் செய்தது போல, உன் சகோதரியாகிய சோதோமும் அவளுடைய குமாரத்திகளும் செய்யவில்லை என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
49. இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை.
50. அவர்கள் தங்களை உயர்த்தி, என் முகத்துக்கு முன்பாக அருவருப்பானதைச் செய்தார்கள்; அதை நான் கண்டபோது, அவர்களை ஒழித்துவிட்டேன்.
51. நீ செய்த பாவங்களில் அரைவாசியும் சமாரியா செய்யவில்லை; நீ உன் சகோதரிகளைப்பார்க்கிலும் உன்பாவங்களைப் பெருகப்பண்ணி, நீ செய்த உன் எல்லா அருவருப்புகளினாலும் அவர்களை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணினாய்.
52. இப்போதும் உன் சகோதரிகளைக் குற்றவாளிகள் என்று தீர்த்த நீ அவர்களைப்பார்க்கிலும் அருவருப்பாகச் செய்த உன் பாவங்களினிமித்தம் உன் இலச்சையைச் சுமந்துகொள்; உன்னைப் பார்க்கிலும் அவர்கள் நீதியுள்ளவர்கள்; உன் சகோதரிகளை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணின நீ வெட்கமடைந்து, உன் இலச்சையைச் சுமந்துகொள்.
53. நான் சோதோமும் அவள் குமாரத்திகளும் சிறையிருக்கிற அவர்களுடைய சிறையிருப்பையும், சமாரியாவும் அவள் குமாரத்திகளும் சிறையிருக்கிற சிறையிருப்பையும் திருப்பும்போது, அவர்கள் நடுவில் நீ சிறையிருக்கிற உன்னுடைய சிறையிருப்பையும் திருப்புவேன்.
54. அதினால் நீ அவர்களுக்கு ஆறுதலாக இருந்து, உன் இலச்சையைச் சுமந்து; நீ செய்த எல்லாவற்றினாலும் வெட்கமடைவாய்.
55. உன் சகோதரிகளாகிய சோதோமும் அவள் குமாரத்திகளும் தங்கள் முந்தின சீருக்குத் திரும்புவார்கள்; சமாரியாவும் அவள் குமாரத்திகளும் தங்கள் முந்தின சீருக்குத் திரும்புவார்கள்; நீயும் உன் குமாரத்திகளும் உங்கள் முந்தின சீருக்குத் திரும்புவீர்கள்.
56. உன்னை வெறுக்கும் சீரியாவின் குமாரத்திகளும், அவளைச் சுற்றிலும் இருக்கிற பெலிஸ்தரின் குமாரத்திகளும் அவமானம் பண்ணினபோது உன் பொல்லாப்பு வெளியாயிற்றே.
57. அதற்குமுன் உன் கெர்வத்தின் நாளிலே உன் சகோதரியாகிய சோதோமின் பெயரை உன் வாயினாலே உச்சரிக்கவுமாட்டாய்.
58. உன் முறைகேட்டையும் உன் அருவருப்புகளையும் நீ சுமப்பாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
59. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உடன்படிக்கையை முறித்துபோடுகிறதினால் ஆணையை அசட்டைபண்ணின நீ செய்ததுபோல நான் உனக்கும் செய்வேன்.
60. ஆகிலும் உன் இளவயதில் உன்னோடே பண்ணின என் உடன்படிக்கையை நான் நினைத்து, நித்திய உடன்படிக்கையை உனக்கு ஏற்படுத்துவேன்.
61. அப்பொழுது உன் தமக்கைகளையும் உன் தங்கைகளையும் நீ சேர்த்துக்கொள்ளுகையில், உன் வழிகளை நினைத்து நாணுவாய்; அவர்களை நான் உனக்குக் குமாரத்திகளாகக் கொடுப்பேன்; உன்னுடைய உடன்படிக்கையைப் பார்த்துக் கொடுப்பதில்லை.
62. உன்னோடே என் உடன்படிக்கையைப்பண்ணி ஏற்படுத்துவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிவாய்.
63. நீ செய்த எல்லாவற்றையும் நான் மன்னித்தருளும்போது, நீ நினைத்து வெட்கி, உன் நாணத்தினால் உன் வாயை இனித் திறக்கமாட்டாதிருப்பாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
இந்த வசனங்களை வாசிக்கும் போது கடவுள் பயம்தான் வருகிறது. இதில் காமம் என்று சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லை. பாவத்திலேயே வாளூம் முஸ்லீம் மக்களூக்காக நாம் ஜெபிப்போம்.
amam ivvarana vaarthaihal ulla bible irai vetham.. vedikayaha illaya? ivvarana oru kevalamana vasanathai ungalal quranil irunthu kaata mudiuma?
1. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2. மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள்.
3. அவர்கள் எகிப்திலே வேசித்தனம்பண்ணினார்கள்; தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள்; அங்கே அவர்களுடைய ஸ்தனங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் கொங்கைகள் தொடப்பட்டது.
எசேக்கியேல் 23 அதிகாரம்
Good Answer, Keep it up