SAN அனுப்பிய மின்னஞ்சலின் தமிழாக்கம்
அன்பார்ந்த TNTJ நண்பர்களே,
2012,மார்ச் 20 ஆம் தேதியில் நீங்கள் அனுப்பின மின்னஞ்சலைப் பெற்றோம். விவாதத்துக்குத் தயார் என்று பாசாங்கு செய்து கொண்டு அதே சமயத்தில், குர்-ஆன் மீதான விவாதத்திலிருந்து தப்பிக்க கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் நீங்கள் தொடர்ந்து முயற்சிப்பதைக் கண்டு ஆச்சரிய்ப்படுகிறோம். கைழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி நடக்க நீங்கள் தொடர்ந்து மறுப்பதினாலும், (நேரடி ஒளிபரப்பு இல்லாமல்) தனி விவாதம் செய்வதற்கு நீங்கள் தயாராக இல்லாத காரணத்தினாலேயே நாங்கள் கொச்சியில் வைத்து விவாதம் நடத்த முயற்சிக்கிறோம் என்பதை நீங்கள் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த விவாதம் நடைபெற வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்பினால், சட்டப்படி செல்லத்தக்க அனைத்து வாய்ப்புகளுக்கும் நீங்கள் தயாராக இருந்திருக்க வேண்டும், SAN எல்லா வாய்ப்புகளுக்கும் (கையெழுத்திடபட்ட ஒப்பந்தத்தின் படி சென்னை போலீசை சந்திப்பது, மின்னஞ்சலில் ஒத்துக் கொண்டபடி தனிப்பட்ட முறையில் வீடியோ பதிவுடன் கூடிய விவாதம் செய்வது மற்றும் வேறொரு இடத்தில் விவாதத்தை நடத்துவது என அனைத்திற்கும்) தயாராக இருந்தது; ஆனால் TNTJ முதலில் சொல்லப்பட்ட இரண்டு வாய்ப்புகளைக்கும் மறுப்பு தெரிவித்து விட்டு இப்போது மூன்றாவது வாய்ப்பையும் மூட முயற்சி செய்துகொண்டே, விவாதத்திற்குத் தயார் என பாசாங்கு செய்து கொண்டு இருக்கிறது. முதல் இரண்டு வாய்ப்புகளுக்கு நீங்கள் தயாராக இல்லாத பட்சத்தில், நாங்கள் விவாதத்துக்குத் தயார் எனக் கூற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. குர்-ஆன் குறித்த விவாதத்திற்கு நாங்கள் தயார் என நீங்கள் சொல்லிக் கொள்வது நகைப்புக்குரியதாக இருக்கிறது.
மேலும், நீங்கள் ஏன் பாசாங்கு செய்துகொண்டு, எங்களுடன் குர்-ஆன் குறித்து விவாதம் செய்ய விரும்பாமல் இருக்கிறீர்கள் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. பரிசுத்த வேதாகமம் குறித்த விவாதத்தில் உங்களின் இரட்டை நிலையை வெளியரங்கப்படுத்தி மறுப்பு கூறின படியால், குர்-ஆன் குறித்த உங்கள் வெற்று வாதங்களை நாங்கள் முற்றிலும் பகிரங்கமாக அம்பலப்படுத்தி, குர்-ஆன் இறைவனுடைய வார்த்தையாக ஒருபோதும் இருக்க முடியாது என சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்து விடுவோம் என நீங்கள் அறிந்திருந்தீர்கள் என்பது நிச்சயம். இந்தக் காரணத்தினால் வீடியோ பதிவுடனான தனி விவாதம் குறித்த ஒப்பந்தத்தை மீறி வேண்டுமென்றே அதன் இணைய நேரடி ஒளிபரப்பு பற்றி விளம்பரப்படுத்தினீர்கள் அல்லவா? விவாத ஒப்பந்தத்தை மீறி பேனர்களையும், சுவரொட்டிகளையும் ஒட்டி எங்களைக் கோபப்படுத்தி விவாதத்திலிருந்து தப்பிக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள் அல்லவா? உங்கள் சீண்டுதல்களை நாங்கள் கண்டு கொள்ள வில்லை. ஏனெனில் நாங்கள் விவாதம் நடைபெற வேண்டும் என்றும் உங்கள் வீண் ஜம்பத்தையும் வெற்று விவாதங்களையும் தோலுரித்துக் காட்ட விரும்பினோம். உங்களின் நடவடிக்கைகள் போலீஸ் உத்தரவுக்கு எதிராகச் சென்ற போதுதான் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அது மாத்திரமல்ல, நீங்கள் எங்களுடன் விவாதம் செய்ய பயப்படுவதுடன், ஜனவரி 28ல் நீங்கள் நிகழ்த்திய விவாத நாடக வீடியோவைக் கூட வெளியிட பயப்படுகிறிகள் எனத் தோன்றுகிறது. அதன் பிரதியையோ அல்லது நல்ல தரத்துடன் அனைவரும் காணும்படி இணையதளத்தில் அந்த வீடியோவை பதிவேற்றம் செய்தால், வாதம் என்ற பெயரில் நீங்கள் முன்வைத்த ஒவ்வொரு சிறிய குறிப்பையும் நாங்கள் மறுப்பு கூறி, அம்பலப்படுத்துவோம் என்பதையும். அது TNTJ வின் அறிவுத்திறன் மீதான நம்பகத்தன்மையை முழுவதுமாக அழித்துவிடும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எப்போதாவது தைரியம் வந்து, ஜனவரி 28 ஆம் தேதி நீங்கள் நிகழ்த்திய நாடகத்தின் பிரதியை எங்களுக்கு தரும் போது, உங்கள் வெற்று வாதங்கள் தோலுரித்துக் காட்டப்படும் என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள்.
இரண்டு நாள் விவாதம் அல்லது பரிசுத்த வேதாகமம் குறித்த விவாதம் பற்றி குறிப்பிட்டது போல நாங்கள் மாற்றம் செய்யச் சொன்ன போது, நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கும் எதையும் நாங்கள்
எழுத வில்லை. பரிசுத்த வேதாகமம் குறித்த விவாதம் இரண்டு நாட்களாக சென்னையில் வைத்து நடைபெற்றது என SAN மற்றும் TNTJ இருவருமே ஒத்துக் கொள்கிறோம். ஜனவரி 28 ல் நீங்கள் நிகழ்த்திய நாடகத்தை விவாதம் என்று கருத வேண்டுமா என்பதில் தான் முரண்பாடு ஏற்பட்டது. உங்கள் நாடகத்தை, TNTJ வைத் தவிர உலகத்தில் வேறு எவரும் விவாதம் என ஒப்புக் கொள்ள மாட்டார். இப்போது, ஒரு விவாதம் இரண்டு நாள் சென்னையில் அமைதியாக நடந்தது என்று நாங்கள் சொன்ன மாற்றத்தை, சென்னையில் சில நாட்கள் விவாதம் நடைபெற்றது என நீங்கள் மாற்ற விரும்பினீர்கள். இரண்டு நாட்கள் என்பதை சில நாட்கள் என்று நீங்கள் குறிப்பிட விரும்புவது இரண்டு நாட்களுக்கும் அதிகமாக என்ற பொருளைக் குறிக்கிறது என எண்ணுகிறோம். ஆனாலும் கூட, இதைக் காரணம் காட்டி நீங்கள் விவாதம் செய்வதிலிருந்து தப்பித்து விடக் கூடாது என்பதற்காக, SAN & TNTJ இருவரும் நாட்களின் எண்ணிக்கையை குறிப்பிடுவதை விட்டுவிட்டு, SAN & TNTJ சென்னையில் அமைதியாக இதுபோன்ற விவாதத்தை நடத்தி இருக்கிறது என எழுதுவோம்.
உங்களுடைய கருத்துக்கள் மற்றும் மாற்றங்ளுக்கும் நாங்கள் திறந்தமனதுடன் இருக்கிறோம். TNTJ தங்கள் லெட்டர்பேடிலும் SAN தனது லெட்டர் பேடிலும் கடிதம் தர வேண்டி இருப்பதால், நாங்கள் நியாயமான மாற்றங்களை முன் வைக்கிறோம். ஆனால், SAN பிரதிநிதி கொச்சி போலீசிடம் கடிதம் சமர்ப்பிக்கச் செல்லும்போது அக்கடிதம் SAN பிரதிநிதியால் விளக்கக் கூடியதாக இருக்க வேண்டும். TNTJ எழுதிய கடிதத்தில் உள்ளவற்றைப் பற்றி போலீஸ் ஏதாவது கேட்டால், SAN பிரதிநிதி தனக்கு அதில் உள்ளவையுடன் உடன்பாடில்லை என்று சொல்ல முடியாது. அப்படி நாங்கள் கூறினால், நாங்களே ஒப்புக்கொள்ளாத ஒன்றை ஏன் கடிதத்தை ஏன் சமர்ப்பிக்க வேண்டும் என்று போலீஸில் கேட்பார்கள்.
கொச்சி போலீஸுக்கு எழுதப்பட்ட மாதிரி வரைவில் தலைப்பில் தனிப்பட்ட என்று தவறுதலாக எழுதப்பட்ட சிறிய பிழையை வைத்துக் கொண்டு முழு உலகத்தையும் முட்டாளாக்க முயலும் உங்கள் முயற்சிகளைக் கண்டு பரிதாபப் படுகிறோம். எங்கள் முந்தைய மின்னஞ்சல்களை வாசிப்பவர், பிழையற்றது என்று கூறிக்கொண்டு ஆனால் தெளிவற்ற ஆயத்துகளை உள்ளடக்கிய, அதன் பொருளை அதை வெளிப்படுத்திய எல்லாம் அறிந்த பாசாங்கு செய்பவரைத் தவிர வேறு எவரும் அறியார், அப்புத்தகத்தில் உள்ளவைகளை விட எங்கள் மின்னஞ்சல்களில் நாங்கள் என்ன நோக்கத்தில் எழுதினோம் என்பதை தெளிவாக புரிந்து கொள்வார்.
மேலும், (மற்ற விவாத வாய்ப்புகளுக்கு தயாராகக் கூட இல்லாமல், கொச்சி போலீஸுக்கு கடிதம் கொடுத்தல் போன்ற அற்பமான காரியங்ட்களிலும் கூட சாக்குபோக்குகளைச் சொல்லிக் கொண்டு) குர்-ஆன் பற்றிய விவாதத்திலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் நீங்கள், உண்மையான சகல தீர்க்கதரிசிகளின் பரிசுத்த தேவனை இன்னமும் நீங்கள் எப்படி தூஷிக்கலாம்? குர்-ஆன் குறித்த விவாதத்திலிருந்து தப்பிக்க வழிமுறைகளைத் தேடும் இந்த பரிதாபமான நிலைக்கு உங்களின் இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் தள்ளிவிட்டதை நீங்கள் அறியவில்லையா? மேலும், ஒரு சிறிய எழுத்துப் பிழையை வைத்துக் கொண்டு பிரச்சனையை பெரிதாக TNTJ க்கு என்ன உரிமை இருக்கிறது? உங்கள் கூற்றுப் படியே ஹதீஸ் சேகரிப்பாளர்களான சஹிஹ் புகாரி மற்றும் சஹிஹ் முஸ்லீம் போன்றவர்கள் அனேக தவறுகளைச் செய்யவில்லையா? உங்கள் கூற்றுப்படியே, ஹதீஸ் அறிவிப்பாளர்கள் சம்பவத்தைக் கூறும்போது தவறுகளைச் செய்யவில்லையா? கடந்த 1400 வருடஙக்ளாக அந்த ஹதீஸ்களை உண்மையானவை என்று ஒப்புக்கொண்டு உங்கள் கூற்றுப்படியே முஸ்லீம்கள் தவறு செய்ய வில்லையா? நடைமுறைக்கு ஒவ்வாதது எனக் கூறி இன்றைக்கு ஒன்றை ஏற்றுக் கொண்டு நாளைக்கே அதை குப்பைத் தொட்டியில் போடுகிற குழுவைச் சேர்ந்தவர்கள் தானே நீங்கள்? மிகவும் முக்கியமான நம்பிக்கை சார்ந்த காரியங்களில் கூட இரவும் பகலும் பெரும் தவறு செய்கிற உங்களுக்கு, ஒரு வாக்கியத்தை எடுத்து இன்னொன்றுக்கு எதிராகப் பேச என்ன உரிமை இருக்கிறது?
கொச்சி போலீஸுக்கு கொடுக்கும் கடிதத்தில் எந்த இடத்திலும் தனிப்பட்ட என்ற வார்த்தை இடம் பெறக் கூடாது. அதற்குப் பதிலாக உள்ளரங்க விவாதம் என்று எழுதலாம். மேலும், தனிப்பட்ட வீடியோ பதிவுடன் கூடிய விவாதத்திற்கு நீங்கள் தயாராக இல்லாத பட்சத்தில், நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் உள்ளரங்க விவாதத்தில் தனிப்பட்ட என்ற வார்த்தையை நீங்கள் சேர்க்க விரும்பும் காரணம் என்ன? தனிப்பட்ட வீடியோ பதிவுடன் கூடிய விவாதத்திற்கு கூட நீங்கள் தயாராக இல்லை என்ற உண்மையை மக்களிடம் இருந்து மறைக்க வேண்டும் என்பதற்காகவா? நீங்கள் தனிப்பட்ட வீடியோ பதிவுடன் கூடிய விவாதத்திற்கு தயாராக இருந்தால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். போலீஸ் அனுமதி இல்லாமலேயே நாம் அதைச் செய்யலாம். விவாதத்தை (நீங்கள் வலியுறுத்துகிறபடி) நேரடி ஒளிபரப்பு செய்ய விரும்பினால், கொச்சி போலீஸிடம் கொடுக்கும் கடிதத்தில் எந்த இடத்திலும் தனிப்பட்ட என்ற வார்த்தை இடம் பெறக் கூடாது. இன்னும் கால தாமதம் ஏற்ப்பட்டால் ஏப்ரல் 28&29 ஆகிய தேதிகளில் இடம் ஒழுங்கு செய்வது கடினம். மேலும் அதிக தாமதம் உண்டானால் விவாத தேதிகளும் அதற்கேற்றாற்ப்போல் மாற்றப்படும். முதல் இரண்டு வாய்ப்புகள் இன்னமும் திறந்தே இருக்கின்றன என்பதையும் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தந்த்தின் படி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் நாங்கள் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
கொச்சி போலீஸிடம் நீங்கள் கொசுக்க வேண்டிய கடிதத்திற்கும், குர்-ஆன் குறித்த விவாதத்திற்கும் காத்திருக்கிறோம்.
Thanks and regards,
SAN
Leave a Reply