கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.கடந்த நாட்களில் கேப்டன் அம்ருத்தீன் என்பவர் எழுதிய “இயேசுவை அறிவோம்”என்ற புத்தகத்தை பற்றியும் அதில் அவருடைய பொய் முகமூடியை பற்றியும் விமர்சித்து இருந்தோம்..அதன் லிங்க் http://iemtindia.com/?paged=2
அதை தொடர்ந்து நாம் அவருக்கு அனுப்பிய மெயிலுக்கு அவர் நமக்கு ஒரு மழுப்பலான பதிலை அனுப்பியுள்ளார்.அதனையும் இங்கு வெளியிடுகிறோம்…..
தேதி : 02-12-2013
Cell : 09381027061
E-mail : capt.amiruddin@hotmail.com
“இஸ்லாம் அழைக்கிறது”
(Call and Guidence)
12/50, நல்ல தம்பி தெரு,
திருவல்லிக்கேணி, சென்னை – 600 005.
To,
Brother. S. வெங்கடேசன்
கோயம்பத்தூர்.
அன்புடையீர்,
“சாந்தியும் சமாதானமும் உங்களுக்கு உண்டாகட்டும்” (யோவான் 20:19)
தங்களின் 26-08-2013 தேதி கடிதம் மிக மிகத் தாமதமாக ஏறத்தாழ ஓராண்டு கழிந்தபின் என் பார்வைக்கு கிடைத்தது. இடைப்பட்ட காலத்தில் பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் சரியாக செயல்படாததும், மேலும் எனது உடல் நிலையில் ஏற்பட்ட சுகக்குறைவுமே அதற்கு காரணமாகும். அதனால் விளைந்த தவறுதலுக்காக நான் பெரிதும் வருந்துகிறேன்.
“இயேசுவை அறிவோம்” என்ற வெளியீட்டு முகவுரையில் “நாம் எழுதிய பகிரங்க கடிதத்திற்கு அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை” என்ற வாசகம் இடம் பெற்றிருப்பதை நான் இதன் மூலம் திரும்ப பெற்றுக் கொள்கிறேன். அடுத்த பதிப்பில், இன்ஷா அல்லாஹ், அதனை முற்றிலுமாக நீக்கி விடுவேன் என்றும் உறுதியளிக்கிறேன்.
“இஸ்லாம் அழைக்கிறது” மையம் கடந்த ஜனவரி 2013-லிருந்தே பல்லாவரத்தில் செயல்படுவதில்லை. இக்கடிதத்தில் மேலே கண்ட விலாசத்திலிருந்தே செயல்படுகிறது. இதன் பொறுப்பாளராக இருந்தவர் இப்போது அந்த பொறுப்பிலும் இல்லை. அவரது செல் எண். 98410 47267 இப்போது எங்கள் மையமத்தின் தொடர்பு எண் அல்ல என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பதில் பரிசீலனையில் இருக்கிறது. விரைவாகவே முறையான மேல் விளக்கம் தங்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். (இன்ஷா அல்லாஹ்)
அன்புடன்
கேப்டன் அமீருத்தீன்,
p.aruldoss says
jerrythomas@zakir naik vivatham eppothu