கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களே TNTJ தலைவர் மவ்லவி பிஜே அவர்கள் தங்களுடைய பயான்களில்(பிரசங்கம்) ஹஜரத் முஹமது அவர்கள் காலத்தில் முந்தைய வேதங்கள் பாதுகாக்கப்படவில்லை என்று பேசிவந்தார்.அது மட்டுமல்லாமல் குர்ஆன் விளக்கவுரையிலும் 4வது எண்ணில் முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டுள்ளது என்று குரான் கூறுகிறது என்று சொல்லி சில வசனங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.
மவ்லவி பிஜே அவர்கள் ஹஜரத் முஹம்மது அவர்கள் காலத்தில் முந்தைய வேதங்கள் பாதுகாக்கப்படவில்லை என்றும் பேசிய வீடியோ காட்சி
மவ்லவி பிஜே அவர்களின் விளக்கவுரையில் அளித்த விளக்கத்தின் ஒரு பகுதி….
/////ஏனெனில் முந்தைய வேதங்களை நம்பச் சொல்லும் திருக்குர்ஆன் “அந்த வேதங்களில் மனிதக் கருத்துக்கள் சேர்ந்து விட்டன; மாற்றப்பட்டன; மறைக்கப்பட்டன; திருத்தப்பட்டன” எனவும் பல இடங்களில் கூறுகிறது. (பார்க்க : திருக்குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41)/////
முழுமையாக வாசிக்க இந்த லிங்கில் செல்லவும் : http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/4-munnar-arulapattathu/
ஆனால் பைபிள் இறைவேதமா என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் இதை தவறு என்று சுட்டிக்காட்டி நம்தரப்பில் இருந்து அதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் வைக்கப்பட்டது.அதை மறுக்க முடியாமல் வேறு வழி இன்றி குரான் இறங்கிய காலங்களில் முந்தைய வேதங்கள் திருத்தப்படாமல் இருந்தது என்பதை ஒத்துகொண்டனர்.இஸ்லாமிய அறிஞர்களின் பரிதாபமான நிலை இதுதான்.தங்கள் மக்களிடம் ஏதோ ஒரு பொய்யை சொல்லி தங்கள் மார்கத்தை காப்பாற்ற வேண்டிய அவல நிலை உள்ளதை இது வெளிக்காட்டுகிறது…
விவாதத்தில் ஆதாரங்கள் வைக்கப்பட்ட ஆதார வீடியோ
அதை மறுக்க முடியாமல் ஒப்புகொள்ளும் வீடியோ
கேள்வி 1: அதே சூரா 3:39 ல் “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தை கொண்டு வந்து ஓதிக் காண்பியுங்கள”; என்று சொல்லுகிறது. அல்லாஹ் யூதர்களைப் பார்த்து கலப்படமாக்கப்பட்ட புத்தகத்தையா கொண்டு வர கேட்கிறார்?
சுரா 4:46 மறுபடியும், நாவினால் திரித்து கூறுவதைப் பற்றித் தான் பேசுகிறது மூல வாக்கிய கலப்படமல்ல. மேலும் அதே சுரா 4:136 – தூதர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட வேதங்களை நிராகரிக்கிறவர்கள் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார்கள் என்று சொல்லுகிறது. சூரா 5:13 மற்றும் 41 திரித்து உபயோகிப்பதைப் பற்றித் தான் பேசுகிறது மூல வாக்கிய கலப்படத்தைப்பற்றி அல்ல.
கேள்வி 2: சூரா 5:43-44 யூதர்கள் தங்களிடம் தோராவைக் கொண்டிருக்கும் போது ஏன் ஹஜரத் முகமதுவிடம் வருகிறார்கள் என்று கேட்கிறது. பிறகு அல்லாஹ் யூதர்களை அவர்களிடம் உள்ள தோராவின் படி அவர்களுக்குள் நியாயந்தீர்த்துக் கொள்ள சொல்லுகிறார் மேலும் அப்படி செய்யாதவர்கள் காஃபிர்கள் என்றும் கூறுகிறார். அந்த தோரா ஏற்கனவே கறைபடுத்தபட்டிருக்குமென்றால் அந்த கறைபட்ட புத்தகத்தை வைத்துக் கொண்டே தங்களுக்குள் நியாயந்தீர்த்துக்கொள்ளுமாறு யூதர்கள் ஏன் கேட்கப்பட்டனர்?
கேள்வி 3: சூரா 5:46-47 கிறிஸ்தவர்கள் தங்களிடம் இருக்கும் இன்ஜிலைக் கொண்டு நியாந்தீர்த்துக் கொள்ளட்டும் என்றும் அப்படிச் செய்யாதவர்கள் காஃபிர்கள் என்றும் சொல்லுகிறது. அந்த இன்ஜில் கறைபட்டிருக்குமென்றால், அல்லாஹ் ஏன் கிறிஸ்தவர்களை இன்ஜிலைக் கொண்டு நியாயந்தீர்க்க சொல்லுகிறார்? இன்றைய முஸ்லீம் பிரசங்கியார்களுக்கு தெரிந்தது அல்லாஹ்விற்கு தெரியவில்லையா?
ஏறக்குறைய மூல வாக்கிய கலப்படத்தை குறிப்பதாக இருப்பது சூரா 2:75, 79. இங்கேயும் குரான் ஒரு தகுதிநிலையை வைக்கிறது. இது வெறும் யூதர்களை அதுவும் ஒரு சாராரான யூதர்களைப் பற்றித்தான். ஏன் இது முக்கியமான ஒன்று? இது கிறிஸ்தவர்களைப் பற்றியோ அல்லது முழு யூதர்களைப் பற்றியோ அல்ல.
சூரா 3:199 மற்றும் சூரா 7:159 ல் வேத்தையுடையவர்களில் ஒரு சிலர் இருக்கின்றனர் அவர்கள் நிச்சயமாக அற்ப விலைக்கு வசனங்ளை விற்க மாட்டார்கள் என்று தெளிவாக சொல்லுகிறது. இன்னுமாக சூரா 15:91 ல் குரானே ஒரு சாரார் ஜனங்களினால் பலவாறாக பிரிக்கப்பட்டுள்ளது. டிஎன்டிஜேயின் நியாயத்தின்படி எடுக்க வேண்டுமென்றால், குரானே கறைபடுத்தப்பட்டுள்ளது ஏனென்றால் ஜனங்களில் ஒரு சாராரார் அவ்வாறு செய்திருக்கிறனர் என்று தான் சொல்ல வேண்டும்.
இன்னும் குரானை ஒருவர் சரியாக ஆராய்ந்து பார்த்தால், பரிசுத்த வேதாகமம் கறைப்படுத்தப்படவில்லை என்று வாதிடுகிற ஏராளமான பகுதிகளைத் தான் காண முடியும்.
கேள்வி 4 யூதர்களுடைய மற்றும் கிறிஸ்தவர்களுடைய வேதத்தைப் பற்றி குரான் பேசும் போது “அவனுடைய கரங்களுக்கிடையில்” என்ற ஒரு வார்;த்தைபிரோயகத்தை அடிக்கடி உபயோகப்படுத்துகிறது. உதாரணமாக சுரா 34:31ல் “இந்த குர்ஆனையும் ………
Question 4: When Quran speaks about the scripture of the Jews and the Christians, it often uses a terminology “between his hands”. For example, Surah 34: 31 says “and the unbelievers say we will not believe in the Quran, nor is that which is between his hands.” Between his hands is a clear expression to mean that which currently exists. Similar verses can be found in Surah 10:37, and 12:111. If the Torah and Injil were already corrupted, why is the Quran using the terminology ‘between his hands?’
கேள்வி 5: சூரா 7:157 ல் முகமதுவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்களிடம் உள்ள தோராவிலும் இன்ஜிலிலும் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் ஏன் அந்த புஸ்தகங்களுக்கு முறையிடுகிறான்? அந்த புஸ்தகங்கள் கறைபட்டுவிட்டதென்று அல்லாஹ்வுக்கு தெரியாதா?
கேள்வி 6: சூரா 10:94 ல் ஹஜரத் முகமதுவிற்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அவருக்கு முன் வேதத்தை வாசிப்பவர்களிடத்தில் போய் பரிசோதித்துக் கொள்ளுமாறு அல்லாஹ் ஹஜரத் முகமதுவிற்கு கட்டளையிடுகிறான். அவ்வாறு ஹஜரத் முகமது பரிசோதிக்கவும் செய்தார். இப்னு காதீருடைய விளக்கவுரை தொகுப்பு 4: பக்கம் 178-179 ஒரு திடமான ஹதீஸை பதிவு செய்கிறது, அங்கே தோராவை படிக்கின்ற மக்களிடம் சென்று ஹஜரத் முகமது தன்னைப்பற்றிய விவரணத்தை அவர்கள் தாங்கள் படிக்கிற புத்தகத்தில் காண்கிறார்களா என்று பரிசோதித்தார். தோராவும் இன்ஜிலும் கறைபடுத்தப்பட்டதென்றால் வேதத்தை படிக்கின்ற மக்களிடத்தில் போய் பரிசோதிக்கும் படி தன்னுடையை தூதருக்கும் ஏன் அல்லாஹ் கட்டளையிட வேண்டும்? அல்லாஹ் அறியாமையிலிருக்கிறாரா அல்லது தன்னுடைய தூதரையே வழிதவறச் செய்கிறாரா?
கேள்வி 7: சூரா 3: 84-85 அல்லாஹ் தான் ஞானத்தையும் வேதத்தையும் கொடுத்த தூதர்களிடத்தில் அவர்கள் அவர்களுக்கு பின்வரும் ஒரு தூதருக்கு துணை செய்ய வேண்டும் என்ற ஒரு ஆணையை வாங்கிக்கொண்டான். அந்த தூதர்கள் எல்லோரும் மரித்துவிட்டபடியால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட புத்தகத்தின் மூலமாக அல்லாமல் வேறு எப்படி பின்னால் வரப்போகும் தூதருக்கு அவர்கள் துணை செய்யமுடியும்? அவர்களுடைய புத்தகங்கள் கறைபட்டிருக்குமென்றால் அல்லாஹ்வின் ஆணை என்னவாகும்?
கேள்வி 8: சூரா 3:55 ல் இயேசுவை பின்பற்றினவர்கள் மறுமை நாள் வரை மேற்கொள்ளுவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். சூரா 61:4 ல் அவர்கள் தாம் மேற்கொண்டவர்கள் என்று மறுபடியும் அறிக்கையிடுகிறான். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இன்ஜில் தொலைந்து போயிற்றென்றால், அல்லாஹ் அவர்களை மறுமை நாள் வரை மேற்கொள்ள செய்வேன் என்ற தன்னுடைய வாக்கில் தோற்றுப் போகவில்லையா? அவர்கள் தாம் மேற்கொண்டவர்கள் என்று அல்லாஹ் அறிக்கையிட்ட போது தவறாகிப் போகவில்லையா?
கேள்வி 9:சூரா 28:48-49 ல் காஃபிர்களைப் பார்த்து தோரா மற்றும் குரானைக் காட்டிலும் சிறந்த நேர்வழிகாட்டக் கூடிய ஒரு வேதத்தை கொண்டுவரும் படி அல்லாஹ் சவால் விடுகிறான். தப்சீர் இப்னு காதிர் (சுருக்கப்பட்டுள்ளது) தொகுப்பு 7 பக்கம் 418 இதற்கு சாட்சியிடுகிறது. தோரா ஏற்கனவே கறைபடுத்தப்பட்டிருக்குமென்றால் தோராவைப் போன்று ஒரு புத்தகத்தை கொண்டுவரும்படி ஏன் அல்லாஹ் சவால் விடவேண்டும்? நம்முடைய முஸ்லீம் நண்பர்கள் இதை சிந்தித்து பதில் சொல்லட்டும்.
கேள்வி 10:சூரா 15:9 ல் தானே இந்த திக்ர்ரை (நினைவூட்டும் வேதத்தை) இறக்கி வைத்தேனென்றும் அதை தானே பாதுகாப்பேன் என்றும் அல்லாஹ் சொல்லுகிறான், அந்த திக்ர் (நினைவூட்டும் வேதம்) கறைபடுத்தப்பட்டதென்று ஏன் விவாதிக்கிறார்கள்? தன்னுடைய சொந்த வேதத்தையே பாதுகாக்கமுடியாத படி அல்லாஹ் அவ்வளவு பலஹீனமானவரா?
இந்த திக்ர் குரானுக்கு மட்டும் தான் பொருந்தும் என்று முஸ்லீம்கள் நம்பினால், இந்தக் கேள்விகளுக்கு அவர்கள் கட்டாயம் பதிலளிக்க வேண்டும்?
கேள்வி 11: சூரா 21:48 மற்றும் சூரா 40:53-54 ல் குரான் மோசேயின் புஸ்தகங்களுக்கும் திக்ர் என்பதை அப்பியாசிக்கிறது மேலும் சூரா 21:105 ல் சங்கீதத்திற்கும், சூரா 16:43ல் யூதர்களுடைய கிறிஸ்தவர்களுடைய வேதத்திற்கும் அப்பியாசிக்கிறது. சூரா 21:7? . திகர் என்றதற்கான அர்த்தத்ததை குரானே கட்டுப்படுத்தாத போது எந்த ஒரு முஸ்லீம் அறிஞரும் எப்படி கட்டுபடுத்த முடியும்?
கேள்வி 12 : புகாரி 3 ………….’வராக’ அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹீப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இஞ்ஜீல் வேதத்தை, ஹீப்ரு மொழியில் அவர் எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுகிறவராகவும் கண் பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார். ……..
கேள்வி 13 : சுன்ன அபுதாவது ஆங்கில எண் புக் 38 ஹதீஸ் 4434
ஹசரத் முகமது அவர்கள் யூதர்களிடம் தோராவை கொண்டுவரும் படி சொல்லி அதை அங்குள்ள ஒரு மெத்தையிலே வைத்து இவ்விதமாக சொன்னார் “உன்னை நம்புகிறேன்,நீ வெளிப்படுத்தியதையும் நான் விசுவாசிக்கிறேன் என்று சொன்னார்.”
தப்சீர் இப்ன் கத்திர் வால்யும் 3 பக்கம் 181-182
தோரா கறைபடுத்தப்பட்டது என்றால் அந்த புத்தகத்தை கொண்டுவரவும்,அதை மெத்தையில் வைத்து அதன் வெளிப்பாடுகளை ஏற்றுகொள்ளுகிறேன் என்று அவர் சொல்லி இருப்பாரா?
கேள்வி 14 : புகாரி 3635. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
யூதர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம், தம் சமுதாயத்தாரிடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து தவ்ராத்தில் என்ன காண்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். ………..
கறைபடுத்தப்பட்ட புத்தகத்தில் இருப்பதையா ஹசரத் முகமது அவர்கள் கேட்டார் சிந்தித்து பார்க்க வேண்டும் அருமையான இஸ்லாமிய நண்பர்கள்…..
Leave a Reply