IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

TNTJ வினருடன் திருப்பூரில் நடந்த விவாதம்.

October 9, 2013

அன்புக்குறிய நண்பர்களே இந்த பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உங்களனைவருக்கும் உண்டாவதாக.
கடந்த 26/9/13 அன்று திருப்பூரில் என்ன நடந்தது?
திருப்பூரை சேர்ந்த ஸ்டீபன் என்ற நமக்கு அறிமுகமான கிறிஸ்தவ சகோதரர் தன்னுடைய அப்துல்லா பாபு (இவர் வீடியோவில் தான் TNTJ ஆதரவாளன் என்று பொய் சொன்னார்.ஆனால் நம்மிடம் இந்த விவாதம் நடந்து இரண்டு நாளுக்கு பிறகு தொலைபேசியில் தொடர்ப்கொண்ட போது தனக்கு இது போன்ற எந்த அமைப்புகளிலும் உடன்பாடு இல்லை எனவும்,அன்றைய தினம் தன்னை பகடைகாயாக பயன்படுத்திவிட்டார்கள் எனவும்,தனக்கு பிடித்த ஒரே இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக் மட்டும்தான் என்றும், நடந்த சம்பவங்களுக்கு மனம்வருந்துவதாகவும் தெரிவித்தார்) என்ற முஸ்லீம் நண்பர் தன்னிடம் பைபிள் பற்றி பல கேள்விகள் கேட்பதாகவும்,அவர் கேட்கும் விதத்தில் பதில் அளிக்க தனக்கு கொஞ்சம் சிரமம் இருப்பதாலும் நீங்கள் வந்து இந்த கேள்விகளுக்கு பதில் தர முடியுமா என்று கேட்டிருந்தார்.நானும் அவர் கேட்டுக்கொண்டபடியினால் ஒரு குறிப்பிட்ட நாளில் நான் வருகிறேன்.உங்கள் வீட்டில் வைத்து நாம் பேசிக்கொள்ளலாம் என்று சொல்லியிருந்தோம்.அந்த குறிப்பிட்ட 26 ந் தேதி வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பே ஸ்டீபன் என்ற அந்த சகோதரன் நம்மை போனில் அழைத்து தன் முஸ்லீம் நண்பர் ஒரு இஸ்லாமிய அமைப்பில் இருப்பதாகவும் அந்த அமைப்பினரிடம் உங்கள் பெயரை சொல்லி இது போன்ற ஒரு கிறிஸ்தவ நண்பர் பேச வருகிறார் என்று சொன்னதற்கு அந்த அமைப்பினர் சொன்னார்களாம் “அவர் இஸ்லாமை நன்கு அறிந்தவர் அதனால் அவரிடம் நாங்கள் பேசவரவில்லை” என்று சொல்லிவிட்டார்களாம் என்று கூறினார்.அதன் பிறகு போனில் அழைத்து அவர் நாளை நம் மீட்டிங்கை வீடியோ செய்யலாமா என்று கேட்கிறார்.நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.அதற்கு நாம் என்ன பிரதர் வீட்டில் வைத்து விளக்கம் கொடுக்க வேண்டும் என்று சொன்னீர்கள் அதற்குள் ஏன் இதுபோல் வீடியோ எடுக்கவேண்டும் என்கிறீர்கள் என்று கேட்டவுடன், தெரியவில்லை அவருடைய நண்பர்கள் அப்படி கேட்கிறார்களாம் என்று நம்மிடம் சொன்னார்.அதற்கு நாமும் சரி பிரதர் தாராளமாக எடுக்கட்டும் அவர்கள் எடுப்பதாக இருந்தால் நாமும் வீடியோ எடுப்போம் என்று கூறிவிட்டோம்.அந்த சகோதரன் வீடியோ எடுக்க வேண்டும் என்று சொன்னவுடனேயே நமக்கு பொறிதட்டியது இது நிச்சயம் TNTJ சகோதரர்களின் வேலையாகத்தான் இருக்கும் என்று. இருந்தும் நாம் அவரிடம் அதைபற்றி விசாரிக்கவில்லை.மறுநாள் 26 ந் தேதி மாலை அந்த பேச்சு நடப்பதாக இருந்த வீட்டுக்குள் நுழைந்தவுடன் அங்கு கல்யாணத்தில் பந்தி போடும் டேபிள்கள் இரண்டு போடப்பட்டு சேர்கள் அடுக்கப்பட்டிருந்த ஸ்டைலை பார்த்தவுடனே தெரிந்துகொண்டோம் இவர்களின் பித்தலாட்டங்கள் என்னவென்று.இருந்தும் நாங்கள் அதை வெளிக்காட்டிகொள்ளாமல், முன்பாக சும்மா பில்டப் கொடுத்து அமர்ந்திருந்தவர்களிடம் பேச்சை ஆரம்பியுங்கள் என்று சொன்னவுடன் “குர்ஆன் இல்லை எடுத்து வருகிறார்கள்.வந்தவுடன் ஆரம்பிக்காலாம்” என்றனர்.நாமும் விடாமல் எந்த குர்ஆன் வேண்டும் சொல்லுங்கள் எங்களிடம் உள்ளது என்று கேட்டவுடன் அவர்கள் முகத்தில் அசடு வழிந்தது.சிறிந்து நேரத்தில் TNTJ வின் மாநில நிர்வாகி ஹபிபுல்லா,பாருக்,கோவை யூசுப் மற்றும் TNTJ வின் புதிய பிரச்சார பிரங்கி!?! ஜெய்சங்கர் என்ற பைசல் ஆகியோர் அடங்கிய குழு வந்தது.வந்தவுடன் ”வெங்கடேஸ் சார் நீங்களா?அரை மணிநேரத்துக்கு முந்தான் தெரிந்தது நீங்கள் தான் வந்துள்ளீர்கள்” என்று கதைவிட்டனர்.அதன் பிறகு என்ன நடந்தது என்பதை இந்த வீடியோக்களில் பார்க்கலாம்.

திருபூரில் நாம் ஒரு முஸ்லீமுடன் விவாதிக்க சென்றோமா?

நண்பர்களே முதலில் நாம் திருப்பூரில் விவாதம் செய்வதற்காகவே செல்லவில்லை என்பதை தெரியப்படுத்திக்கொள்ளுகிறோம்.ஒரு முஸ்லீம் பைபிளை பற்றி உண்மையை அறிய சில கேள்விகளை கேட்கிறார் என்று நெருங்கிய நண்பர் வட்டத்தில் இருந்து அழைத்திருந்தார்கள்.அதை விளக்கவே நாம் சென்றோம்.அங்கு சென்றவுடன் TNTJ வினர் அதை விவாதமாக மாற்றிவிட்டனர்.நாமும் அதை ஏற்று அவர்களுடன் விவாதித்தோம்.ஆனால் நாம் அந்த விவாதத்தில் சொன்னதை திரும்ப திரும்ப போட்டு ஒரு நகைச்சுவையை தவ்ஹீத் ஜமாத்தினர் நடத்தி இருந்தனர்.அதாவது விவாத ஒப்பந்தம் போட்டு தனி மனிதர்களுடன் நாம் விவாதிக்கமாட்டோம் என்று சொன்னதை சரியாக கேட்கவில்லை என்று நாம் நினைக்கிறோம்.எதேச்சையாக ஒரு நபரை சந்தித்து பேசும் போது அது விவாதமாக மாறுவதற்கும் ,முன்பே நாம் ஒப்பந்தம் போட்டு விவாதிப்பதற்கும் வித்தியாசம் உண்டு.நாம் தெளிவாக சொல்லி உள்ளோம் முன்பே விவாதம் ஒப்பந்தம் போட்டு விவாதிப்பது என்பது தனி மனிதர்களிடம் நிச்சயம் செய்ய முடியாது என்பதை தெளிவாக விளக்கியுள்ளோம்.எனவே அவர்கள் அதை கவனமாக கேட்கும் படி கேட்டுக்கொள்ளுகிறோம்.

அடுத்து ஜெய்சங்கர் அவர்களிடம் நாம் அங்கு எதையும் புதிதாக சொல்லவில்லை.ஏற்கனவே வெளியிடப்பட்ட வீடியோவில் என்ன சொன்னோமோ அதைத்தான் திரும்ப அவருக்கு முன்பாகவும் சொன்னோம்.அவரை பொருத்த வரை தனிப்பட்ட விவாதம் என்பது அவசியம் இல்லாதது.ஏன் என்றால் அவரை பற்றிய தனிப்பட்ட வாதம் எதையும் சான் அமைப்பு செய்யவில்லை என்பதை நாம் முன்பே தெளிவுபடுத்தி உள்ளோம்.ஆனால் அவர் பைபிளை பற்றி பேச நம்மை அழைத்ததை ஏற்றுகொண்ட நாம் அவரை குர்ஆன்,ஹதீஸ் பற்றி பேச தவ்ஹீத் ஜமாத்தின் அங்கீகார கடிதத்துடன் வரச்சொல்லி இருந்தோம். திருப்பூரில் வந்த ஜெய்சங்கர் தன்னை TNTJ ஆதரவாளன் மட்டும் தான் என்று சொல்லி பல்டி அடித்து நம்மை சிரிக்கவைத்தார்.அதன் பிறகு அவர் எவ்வளவு கெஞ்சி கூத்தாடி பேச வாய்ப்பு கேட்டும் அவருடைய உளரளை தாங்க முடியாத TNTJ நிர்வாகிகள் அவரை பேசவிடாமல் செய்த காட்சி அவருடைய பரிதாப நிலையை மக்களுக்கு எடுத்துக்காட்டியது.

ஜெய்சங்கரை பேசவிடாமல் தடுக்கும் தவ்ஹீத் நிர்வாகிகள் வீடியோ

Comments

  1. sandy man says

    November 16, 2013 at 10:48 PM

    சகோதரரே,

    இயேசு கிருஸ்து சிலுவையில் அறையப்படவில்லை என இஸ்லாம் கூறுகிறது. நீங்களும், அனேக கிருஸ்துவ சர்ச்சுகளும் -வெற்று சிலுவையை முகப்பு படமாகவும், அடையாள சின்னமாகவும் வைத்து இருக்கிறீர்கள். இவ்வாறு வெற்று சிலுவையை சின்னமாக வைத்து கொள்வதால் நீங்களும் இஸ்லாமியர் சொல்வதையே ஆதரிக்கிறீர்கள். இவ்வாறு செய்து விட்டு இஸ்லாமியர்கள் சொல்வது தவறு என்றும் சொல்கிறீர்கள். உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா?

    இவ்வாறு வெற்று சிலுவையை சின்னமாக வைத்து கொள்ளுவதற்கு பைபிளில் வேத வசன ஆதாரம் உண்டா?

    (வெற்று சிலுவை சின்னத்தை பயன்படுத்துவதற்க்கு எதாவது விளக்கம் வைத்திருப்பின் சொல்லவும், அதே விளக்கம் திருக்குரானுக்கு எப்படி பொருந்தாது என்பதையும் சொல்லவும்.)

    Reply
  2. J. ஷாபு says

    December 28, 2013 at 3:11 PM

    சிலுவை என்பது கிருஸ்தவ மார்க்கத்தை போருத்தவரை ஓரு பேருமை கூரிய தகுதி வாய்ந்த அடையாளம். எப்படியேனில் வேரு எந்த மதத்திலையும் மணிதர்களுக்காக தேவன் இந்த அளவுக்கு உயிரையே கோடுப்பதற்க்காக புமியில் இரங்கி பாடுபட்டார் என்று இல்லை. அதனால் அதை எடுத்துக்காட்டவே உலக பிரகரமாக ஓரு அடையளமாக சில கிருஸ்தவர்கள் வைத்தூள்ளனர். (எந்த கிறுஸ்தவணும் சிலுவையே வணங்க கூடாது அப்படி வணங்கிணால் அவன் கிறுஸ்தவன் இல்லை இயேசுவையே வனங்க வேண்டும்.)வெற்று சிலூவையே அடையளமாக வைத்துக் கோண்டால் இஸ்லாமியர்களின் கூற்றை அதரிப்பதாக அமைந்து விடுமா என்ன? பைபிளில் என்ன சோல்லப்பட்டுள்ளது என்பதே முக்கியம். மற்றும் அப்படி வேற்று சிலுவையே முகப்பு படமாகவும் அடையள சின்ணமாகவும் கோண்டுள்ள தேவலையத்தில் உள்ள பாதரியார்களிடம் தாங்கள் கேட்டாலே அவர்கள் நண்றாக உங்களுக்கு புரிய வைத்திறுப்பார்கள் பைபிளை கோண்டு அளகாக இயேசு நமக்காக பாடுபட்டார் சிலூவையில் மரித்தார் மூண்றாம் நாள் உயீரோடு எழந்தார் என்று. கடைசியாக ஓர் அனைவருக்கும் தேரிந்த ஓர் அரிவுரை வேருமனே தேவலையத்தின் வேளியே நின்று பார்த்தால் மட்டும் போதாது சகோதரர் SANDY MAN அவர்களே பார்த்து, கேட்டு, தீற விசறிப்பதே உங்களுக்கு நல்லது.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network