IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

ரமலான் நோன்பு நாள் -26 ஜெபக்குறிப்புகள்

August 5, 2013

லைலத்துல் காதிர் – ‘இரவின் வல்லமை”  இதற்காக ஏற்கனவே ஜெபம் செயயும்படியாக நாங்கள் உங்களிடம் கேட்டுள்ளோம். இதனை நாம் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து வலியுறுத்த விரும்புகிறோம். இது பிரதானமானது! மற்றும் இது மாற்றத்தை ஏற்படுத்துகிறது! ஆகவே நாம் கரம் கோர்த்து ‘இந்த இரவு வல்லமை” குறித்து ஜெபிக்க போகிறோம். இந்த காலத்திலே அநேக இஸ்லாமியர் இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையை அழைப்பார்கள். சிலர் தூதர்கள் வந்து விசேட வேண்டுதல்களை அனுமதிக்கும் படியாக எதிர்பார்ப்பார்கள். வேறு சிலர் தூதர்கள் வருகிற காலத்தை குறித்து அறிக்கை செய்யும்படியாகஎதிர்பார்ப்பார்கள். (இந்த ‘இரவு கட்டளையிடும் இரவு” என்று சிலர் கருதுகிறார்கள்.) இந்த இரவிலே ஜெபம் செய்த பின்பு தாங்கள் கர்ப்பந்தரிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். ஆண்கள் சுகம் மற்றும் ஆவிக்குரிய வல்லமையை எதிர்பார்ப்பார்கள். ஆனாலும் மிகவும் பிரதானமாக, அநேக இஸ்லாமியர் கடவுளிட மிருந்து ஒரு உதவியையும் அவரிடமிருந்து ஒரு தொடுகையையும் எதிர்பார்க்கிறார்கள். கடந்த வருடங்களில் நாம் அனேக வல்லமையுள்ள சாட்சிகளை கேட்டுள்ளோம் அதாவது இஸ்லாமியர் மேசியாவை கண்டு இயேசுவை அந்த இரவிலே சந்தித்துள்ளார்கள் என்பதாக அறிந்துள்ளோம். சிலருக்கு தரிசனம் அல்லது ஒரு சொப்பனம் மூலமாக அது ஏற்பட்டது, ஆனாலும் அநேகருக்கு முதன் முறையாக ஒரு நண்பன் அல்லது கிறிஸ்தவ நிகழ்ச்சியினூடாக நற்செய்திக்கு செவிகொடுக்கத் தக்க சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. யாவரும் சேர்ந்து ஆவிக்குரிய சம்பூரணத்தன்மை மற்றும் ஒருமைத்தன்மையை தேடுகிற இஸ்லாமிய -ருக்hகக சேர்ந்து ஜெபம் செய்வோம்.

night-power-p36-30-days-prayer-510x115

குறிப்பு: அனேக இஸ்லாமியருக்கு வல்லமையின் இரவு என்பது ரமதான மாதத்திலே கடைசி பத்து நாட்களிலே நடைபெறுகிறது. அனேக மதகுருமார் அது 27வது நாளிலே நடைபெறுகிறது என்று நம்புகிறார்கள். ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனத்துடன் ஆரம்பமாகிறது, ஆதலால் இந்த இரவு 27வது நாளின் ஆரம்பமாகும். குர்ஆனின் 97 ஆவது அதிகாரத்தின் படியாக முகம்மது குரானைப்பற்றிய வெளிப்பாட்டை இந்த இரவிலே பெற்றதாக கூறப்படுகிறது. இந்த இரவிலே எறெடுக்கப்படும் விண்ணப்பங்கள் விசேஷமாக கவனிக்கப்படும் என்று இஸ்லாமியர் நினைக்கிறார்கள். சிலர் இந்த இரவிலே ஏறெடுக்கப்படும் ஜெபமானது தினந்தோறும் பண்ணும் ஜெபத்தை விட வித்தியாசமானது என்பதாக கருதுகிறார்கள்.

ஜெப குறிப்புகள்

ஆண்டவரே மெய்யாக உங்களுடைய உதவியை நாடுகிறவர்களுக்காக ஜெபிக்கிறேன். அவர்களுக்கு தேவையான உதவியை நீர் மேசியாவாகிய இயேசுவினூடாக கிடைக்கும் படியாக செய்வீராக (சங்கீதம் 34:18, சகரியா 9:9)

இஸ்லாமியர் மத்தியிலே ஊழியஞ்செய்கிறவர்களுக்கு நற்செய்தியை கூறத்தக்கதான விசேட சந்தர்ப்பங்கள் கிடைக்கும்படியாக ஜெபம் செய்வோம் ஆண்டவரே இரட்சிக்க கூடாதபடிக்கு உம்முடைய கை குறுகி போகவில்லை மற்றும் கேட்க முடியாதபடிக்கு உமது செவி குறைந்து போகவில்லை. உம்முடைய கரத்தை நீட்டி பாவத்தையும் உமது இரட்சிப்பையும் வெளிப்படுத்துவீராக (ஏசாயா 59:1, ஏசாயா 52:10)

இஸ்லாமியரை வஞ்சனைக்குள் வழிநடத்தக்கூடிய அந்தகார வல்லமைகளுக்கு விரோதமாக ஜெபம் செய்வோம் (எபேசியர் 6:12, சங்கீதம் 44:4-7)

வல்லமையின் இரவு தொடர்பான பின்னணி விபரங்களை அறிந்துகொள்ள எமது சர்வதேச இணையத்தளமான www.30days.net   அழைக்கவும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network