இந்தோனேதானேசிய மறைவான கலை ஆவணஙகள்
நீங்கள் எப்போதாவது எரிகிற தழல் மீதோ கத்திகளிலோ அல்லது கூர்மையான ஆயுதங்ளாலோ தங்கள் மீது தாக்கியும் எவ்வித சேதமும் இல்லாதிருக்கிற மனிதரை பார்த்துள்ளீர்களா? இதனை ‘டெபஸ்” என்று அழைப்பார்கள். இது ஒரு
கலை, அத்துடன் கூட வல்லமையை வெளிப்படுத்தும்படியாக செய்யப்படும் ஒரு திரவிய கலையாம். ‘டெபஸ்” சில நேரங்களிலே திருமணங்கள் மற்றும் ஏனைய வைபவங்களிலே நடத்தப்படும். யார் தூய்மையாயிருக்கிறார்களோ அவர்களுக்கு மாத்திரமே கடவுள் இந்த வல்லமையை தருகிறார் என்று அவர்கள் நம்புகிறார்கள். மேலும் இந்தோனேசியாவின் பன்டன் பகுதி மனுஷரின் பிரதான தனித்துவமான செயற்பாடாக காணப்படுகிறது. பன்டன் மனிதர்களிடையே இந்த அனுபவமற்றவர்களை கண்டு கொள்வது மிகவும் கடினமான ஒரு விடயமாகும்.
பெயரிலே உள்ளது என்ன?
பன்டன் என்பதற்கு பல்வேறு அர்த்தங்கள் காணப்படுகின்றன. அது 2000 ஆம் ஆண்டிலே நிர்மாணிக்கப்பட்ட ஏறத்தாழ ஒன்பது மில்லியன் ஜனக்கூட்டத்தினர் வாழ்கிற (ஜாவா தீவின் மேற்கு ஓரத்திலே) இந்தோனேசியாவின் இளம் மாகாணங்
களிலே ஒன்றாகும். பன்டன் என்பது 1526 ஆம் ஆண்டுகளிலே இஸ்லாமிய போராளிகள் மந்திர வல்லமை கொண்ட டெமாக்கின் ஜவனிய சுல்தானியின் நினைவாக இந்த பெயர் நிலை நாட்டப்பட்டது. ஜகார்த்தா பிரபல்யமான துறைமுகமாக முன் இதுவே இந்தோனேசியாவின் பிரபல்யமான துறைமுகமாகவும் ஒரு காலத்திலே வாசனை திரவியங்களை விநியோகம் செய்த ஸ்தலமாக காணப்பட்டது. பழைய பன்டனிலே, துறைமுக அடையாளங்கள், வெளிச்சவீடு மற்றும் பழைய பள்ளிவாசலை காணக்கூடியதாயுள்ளது. பன்டன் என்பவர்கள் பன்டான் மாகாணத்திலே இன்னும் சுவிசேஷம் போய் சேராத ஜனத்தினராவார்கள்!
மேலே குறிப்பிடப்பட்ட மாய செயற்பாடுகளையும் அவர்கள் வைராக்கியம் கொண்ட இஸ்லாமியத்தையும் உடையவர்களாக காணப்படுகிறார்கள். அநேக முக்கிய நபர்களை கொண்ட வைராக்கிய குழுக்கள் பன்டன் மத பாடசாலைகளுக்கு வருகிறார்கள். ஒரு சில விசுவாசிகள் பன்டனில் பின்தங்கிய இடத்தில் வாழ்கிறார்கள்.. பன்டன் மாகாண ஜகர்த்தாவின் பிரதான இடங்களில் மெய்யாக அநேக கிறிஸ்தவர்கள்வாழ்கிறார்கள். எவ்வாறாயினும் ஒரு சில விசுவாசிகளும் மற்றும் சபைகளுமே பன்டனிலுள்ள சுவிசேஷம் அறிவிக்கப்படாத மக்களை அடைய முயற்சிக்கிறார், அண்மை காலத்திலே அதில் ஒரு வளர்ச்சியை நாம் காணக்கூடியதாயுள்ளது. கல்வி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கையினூடாக புதிய வாசல்கள் திறக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.
ஜெபக்குறிப்புகள்
பன்டன் மக்கள் மாயை மற்றும் மத ரீதியான கட்டுகளிலிருந்து விலகி சுவிசேஷத்திற்குதங்களை திறக்க வேண்டும் என்று ஜெபம் செய்வோம். (யோவான் 8:32 சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.)
இந்தோனேசியாவிலுள்ள விசுவாசிகள் பன்டன் மக்களை நோக்கி அன்புடன் பார்க்க வேண்டும் என்றும், முழுமையாக அவர்களுக்கு ஊழியஞ்செய்ய வேண்டும் என்றும் ஜெபம் செய்வோம். பன்டன் மக்கள் மத்தியிலே விசேஷமாக வாழ, ஊழியஞ்செய்ய மற்றும் சாட்சியாக அழைக்கப்பட்டவர்களுக்காக ஜெபிப்போம். (லூக்கா 10:2 அப்பொழுது அவர் அவர்களைநோக்கி அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம், ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும் படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.)
ENGLISH : http://www.30-days.net/muslims/muslims-in/asia-east/indonesia/debus-martial-art-banten/
Leave a Reply