IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ
You are here: Home / பொதுவானவை / ரமலான் நோன்பு நாள் -24 ஜெபக்குறிப்புகள்

ரமலான் நோன்பு நாள் -24 ஜெபக்குறிப்புகள்

August 5, 2013

 
ஷரியா சட்டம் என்றால் என்ன?
 
நாம் வாழ்கிற இந்நவீன உலகத்தை புரிந்துகொள்ளல்.

ஷரியா என்பது அரசியல், இறையியல். இராணுவம் போன்றவற்றை வளர்ச்சியடைய செய்யும்படியாக  மில்லேனியத்திற்கும் (முகம்மதுக்கு பின்பு) அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஒரு முறையே ஷரியா. மில்லியன்
கணக்கிலான இஸ்லாமியருக்கு இது ‘மார்க்கமாக”உள்ளது. ஷரியா சட்டமூலமானது 35 நாடுகளில் அதிக
கடுமையாக கையாளப்படுகிறது. விசேஷமாக மேற்குலகு நாடுகளிலே இஸ்லாமிய குடும்ப விவகாரங்கள் தொடர்பாக
அவர்கள் ‘இரட்டை” முறையை கையாளுகிறார்கள். அநேகமாக பயிற்சி பெற்ற இஸ்லாமியருக்கு ஷரியாவின்
பின் உள்ள மத சடங்காச்சாரங்கள் என்ன என்றுதெரியாது. (ஜெபம், உபவாசம், தசமபாகம் மற்றும் பல
கொடுத்தல்). 

ஷரியாவின் பிரயோகம்.

ஷரியாவில் இஸ்லாமிய உப சட்டங்களான ஃபிக் (அர்த்தம்- புரிந்துகொள்ளல்) எனும் விடயங்கள் உள்ளடங்கியுள்ளது. அவை இஸ்லாமிய தொழுகை,  உறவுகள், உரிமைகள், வணிகம், காணிச்சட்டம், உள்நாட்டு சட்டம், குற்றவாளி சட்டம், முகாமைத்துவம், வரி செலுத்தல், யாப்பு, சர்வதேச உறவுகள், யுத்தங்கள் மற்றும் ஒழுக்கநெறிகளோடு ஏனைய உப கூட்டங்களை உள்ளடக்கியுள்ளது. அது சுருக்கமாக ஜீவனுக்கான முழுமையான மார்க்கமாக உள்ளது. நடைமுறை  காரியங்களான உணவுத்திட்ட நியதிகள் மற்றும் வங்கி முறைகள் போன்ற அரசாங்கத்தால் அழைக்கப்படும் கலிபெட் முறையையும் உள்ளடக்கியதாயுள்ளது. உலகம் முழுவதும் உள்ள மில்லியன் அளவிலான இஸ்லாமியர்கள் இந்த ஷரியாவிலே உள்ள கடினமான விடயங்களை பின்பற்றுவதில்லை (பெரும்பாலும் இதனை அறியாதிருக்கிறார்கள்). எப்படியாயினும் இஸ்லாமியருக்கான சட்ட மற்றும் அரசியல் முறையாக இது காணப்படுகிறதோடு, ஷரியா பூமி மீதெங்கும் வித்தியாசமான வழிகள் மற்றும் முறைகளிலே பயன்படுத்தப்படுகிறது. அதன் பிரதான மூலங்களாக
குரான் மற்றும் சுன்னா என்பன காணப்படுகின்றன. சட்ட மூலங்களின் படி, எல்லா இடங்களிலும் உள்ள இஸ்லாமிய எழுத்தாளர்க்கு மொழிபெயர்க்கவும் விவாதிக்கவும் கூடிய விதத்திலே வாசல்களை திறந்துள்ளது. ஒரு புறம் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலே ஷரியா மிகவும் கடினமாக பயன்படுத்தப்படுகிறது. மறுபுறம் ஷரியாவிலுள்ள
கடினத்தன்மையை இஸ்லாமிய எழுத்தாளர்கள் நீக்கி எம்முடைய உலகளாவிய உலகத்திலே இதனை கொண்டு நாம் ஜீவிப்பது கடினம் என்கிறார்கள். சில இஸ்லாமிய தலைவர்கள் ஷரியாவின் கடினத்தன்மையை குறித்து பிரசங்கிப்பதினிமித்தம் இஸ்லாமியர் அதற்கு பயப்படுகிறார்கள் ஆனாலும் அதற்கு அடிமைகளாக
வாழ அவர்கள் ஆயத்தமில்லை.

sharia-law-p34-30-days-prayer-300x199

எவ்வாறு கிறிஸ்தவர்கள் பிரதிகிரியை காண்பிக்க வேண்டும்?

ஊடகங்களின் அறிக்கையை கொண்டு மாத்திரம் பிரதிகிரியை காண்பிக்காதீர்கள். சில வேளை எமது பிழையான கணக்குகள் மற்றும் புரிந்துணர்வுகளால் இஸ்லாமியரை குறித்து பிழையான எண்ணங்கள் உருவாவதற்கு ஏதுவாகின்றன. இப்பிழையான எண்ணங்கள், பயங்கள், மற்றும் இடையூறான விடயங்களிலிருந்து நாம் மனந்திரும்ப வேண்டியது
அவசியமாகும். பரிசுத்த ஆவியானவர் இஸ்லாமியரின் இருதயத்திற்கூடாக மெய்யான கிறிஸ்தவத்தை  புரிந்துகொள்வதற்கு வாஞ்சையை ஏற்படுத்துகிறார் என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியமாகும்.ஆண்டவர் இஸ்லாமியர் மத்தியிலே கிறிஸ்தவ சாட்சிகள் மற்றும் நேரடி வெளிப்பாடுகள் மூலமாக கிரியை செய்கிறார். ஆகவே இஸ்லாமியர் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்றுகொள்ள வேண்டும் என்ற மெய்யான வாஞ்சையான  இருதயத்தோடு நாம் உண்மையாக ஜெபம் செய்வோம்.

ENGLISH :http://www.30-days.net/muslims/muslims-in/mid-near-east/what-is-sharia-law/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network