உபத்திரப்பட்ட அகதிகள்: உலகின் மிகப்பெரிய முகாம்
‘ஹா ரஜோ திங்! – ஒருபோதும் கைவிட வேண்டாம்”
கென்யாவின் டடாப் என்னும் இடத்திலுள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் முகாமில் உஷ்ண பாலைவனக்காற்று வீசி கூடாரங்களை அசைக்க ஆரம்பித்தது.கதிஜா அங்கே காணப்பட்ட அரை மில்லியன் சோமாலிய அகதிகளுடன் இருந்தாள். இருபது வருட உள்நாட்டு யுத்தத்தில் போராடிய கதிஜா குழந்தைகளின் கரத்தை பிடித்தவாறு ஓடுகிறாள்.அவள் மற்றவர்களைப்போல, அதிகளவு தூரம் போகவில்லை. இவளும் ஒரு அகதியாக இந்த முகாமிலே ஒதுக்கப்பட்டவளாக காணப்பட்டாள். இன்னும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபடியால் அவர்களுக்கு தங்களது வீட்டிற்கு செல்ல முடியவில்லை, ஒரு சில நாடுகள் அழைக்கிற வண்ணமாக அவர்களாலே அதற்குள் போகவும் முடியவில்லை. டடாப் என்னும் இடத்திலுள்ள முகாமே ஐக்கிய நாடுகளின் மிகவும் பெரிய உலகளாவிய அகதிகளின் முகாமாகும். ஏற்கனவே பிறந்து வளர்ந்த சந்ததியினருக்கு டடாப் என்னும் ஸ்தலமானது அகதிகள் வாழும் மிகவும் கடினமான ஸ்தானமாக காணப்படுகிறது. இந்த முகாமிலே பாதுகாப்பு மிகப் பெரிய விடயமாக காணப்பட்டது. அல்- ஷபாப் என்னும் தீவிரவாத இயக்கம் பயத்தை கொடுத்துள்ளது. வாழ்க்கையானது முகாமிற்குள் சுமக்க முடியாதுள்ளது.
பெண்கள் துஷ்பிரயோகப்படல், சிறு பையன்கள் அல் ஷபாபிற்காக யுத்தம் செய்யும்படி இணைக்கப்படல்,ஐக்கிய நாட்டு உதவியாளர்கள் கடத்தப்படல்,நிலக்கண்ணி வெடிப்பால் வாகன வெடிப்பு ஏற்படல் என அனைத்திலும் ஒரு குறைவு காணப்பட்டது.ஒருவராலும் அவளை பாதுகாக்க முடியவில்லை அம் முகாமிலே காணப்பட்ட சோமாலியர் மத்தியில் ஒரு சில கிறிஸ்தவர்களை உங்களாலே காண முடியும், அவர்களில் கதிஜாவும் ஒருவளாவாள். அது இலகுவானதல்ல. அவளுடன் அநேகம் பின்பற்றும் கிறிஸ்தவர்கள் அல்- ஷபாபினாலே கொலை செய்யப்பட்டுள்ளனர். வேதாகமத்தை வைத்துக் கொண்டு இரகசிய சபைக்கு செல்கிற யாரை கண்டாலும் இலகுவாக குரல் வளையை அறுத்து கொலை செய்து விடுவார்கள். இந்த அடிப்படை இஸ்லாமியர் ஷரியா விதியை பின்பற்றுகிறபடியாலே உபத்திரவத்தினாலே அவர்களை விட்டு ஓட அவளுக்கு நேரிட்டது. உள்நாட்டு அதிகாரிகளினாலே அவளை பாதுகாப்பதற்கு முடியாது. டடாப்பை விட்டு வெளியேறினாலே கதிஜாவும் அவளது பிள்ளைகளும் சுதந்திரவாளிகளாக காணப்படுவார்கள். இறுதியாக அவள் நைரோபியை நோக்கி வந்தாள். நாம் சோமாலியா தேசத்திற்காக தேவனுடைய அவதானத்தை பெற்றுகொள்ள வேண்டியது அவசியம். அவர் வேதனைப்படுகிற இத் தேசத்திற்கு சமாதானத்தை அருளுவார். நேரம் வரும்போது அநேக சோமாலியர்கள் தங்களது வாழ்வை எம்முடைய ஆண்டவரும் இரட்சகருமான இயேசுவின் அன்பான கரத்திலே ஒப்படைப்பார்கள்.
ஜெப குறிப்புகள்
சுவிசேஷத்திற்கான ஒரு திறப்பு குறித்து ஜெபம் செய்யுங்கள்.அதற்கூடாக விசுவாசிகள் டாடாப் மற்றும் சோமாலியாவிலே சமாதானத்தை காண கூடும்.
விசுவாசிகள் ஆவியிலே பெலனுள்ளவர்களாய் வளர்வதோடு, தங்களுடைய விசுவாசத்திலே உறுதியாயிருப்பவர்கள் உபத்திரவம் மற்றும் தனிமையாக்கம் போன்றவற்றினாலே ஏற்படக்கூடிய அழுத்தத்திலிருந்து தங்கள் விசுவாசத்தை உறுதியாக பற்றிக்கொள்ள கூடும். தனிப்பட்ட தொடர்பு, எழுத்தாக்கங்கள் மற்றும் இணையத்தளத்தில் செய்யப்படும் சுவிசேஷ பணிக்காக ஜெபம் செய்யுங்கள்.
ENGLISH :http://www.30-days.net/muslims/muslims-in/africa-east/somalia-persecution/
Leave a Reply