IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ
You are here: Home / பொதுவானவை / ரமலான் நோன்பு நாள் -22 ஜெபக்குறிப்புகள்

ரமலான் நோன்பு நாள் -22 ஜெபக்குறிப்புகள்

August 1, 2013

புதியவரை வரவேற்றல்: திறந்த மனதோடு உபசரிப்பு வீடுகள்

ஜெக்   ஃப்லெட். அவன் ஒரு விஷத்தன்மை வாய்ந்தவன் என்று ஒரு சகோதரன அவனைப்பார்த்து கூறிவிட்டான். ஜெக்குடைய தகப்பனார் ஒரு இஸ்லாமிய மதகுருவாவார். அவர் தன்னுடைய மகன் இயேசுவை பின்பற்றுகிறவனாக வந்துள்ளதாக கண்டுகொண்டார். சில வருடங்களுக்கு பின்பு ஜெக் இறையியற் படிப்பை கற்கும்படியாக கனடா நாட்டிற்கு
வந்திறங்கினான். தனிமையாக குடும்பத்தை விட்டு மிகவும் கடுமையான ஒரு தேசத்திற்கு வந்துள்ளான். யுத்தம், ஒழுக்கமின்மை முரண்பாடுகள், சமய உபத்திரவங்கள், இயற்கை அனர்த்தங்கள் நிமித்தம் ஜனங்கள் அங்கிருந்து விலகி வட அமெரிக்க நாடுகளுக்கு வருகிறார்கள். எவ்வாறு எவ்வித ஆயத்தமுமில்லாத வெளிநாட்டவர்கள் இந்த நாட்டிலே
காணப்பட முடியும், அவர்கள் மெய்யாகவே இங்கே வரவேற்கப்படவில்லையா? 

hospitality-ministry-p31-30-days-prayer-300x200

2008 ஆம் ஆண்டு புதியவர்களுக்காக ஒரு நிலையம் கனடாவிலே திறந்து வைக்கப்பட்டது. (ஜெக்கும் இதிலே ஒரு அங்கமாக காணப்பட்டான்) இதன் நோக்கமானது இஸ்லாமியரை அன்புடன் வரவேற்று இந்த புதிய நாட்டிலே வாழும்படியாக அவர்களுக்கு நடைமுறை உதவிகளை வழங்குவதாகும். நட்புறவு மிகவும் வலியுறுத்தப்பட்டு புதியவர்கள் ஒரு வீட்டை கட்டும்போது அதற்கு உதவி செய்தல், ஆங்கிலம் கற்றுகொடுத்தல், பிள்ளை பராமரிப்பை பெறல் வீட்டு வேலை போன்றவற்றிற்கு உதவுதல் போன்றவையாகும். இன்று தாய்மாருக்கு குழந்தைகளை நீராட்டுவதற்கு ஆண், பெண் பிள்ளைகளுக்காக உதைப்பந்தாட்ட முகாம்களை நடத்துவதற்கு, முழு குடும்பத்திற்கான சமூக பண்டிகைகள் கொண்டாடுவதற்கு மற்றும் வேறு சில காரியங்களை இந் நிலையம் புதிய விருந்தினருக்காக நடாத்தி வருகிறது. இஸ்லாமியர் கிறிஸ்தவ நண்பர்களுடன் இணைவது போல இருதய இருதயத் தொடர்பு ஒன்று சேர்க்கப்படுகிறது. சிலர் ஏற்கனவே ஈசா-அல்-மாஷீஹ் (மேசியாவாகிய இயேசுவை) பின்பற்ற தொடங்கி விட்டார்கள். மற்றவர்கள் சமாதான பிரபுவிடம் போய் சேரும் வழியிலே காணப்படுகிறார்கள். சர்வதேச குழுவினர் அவர்களுக்கு ஊழியஞ்செய்த போது சுவிசேஷம் என்னும் வித்தானது நாட்டப்பட்டு விட்டது.சேன் இஸ்லாமிய மதகுருவாக மாற பயிற்சியிலே ஈடுபட்டார். தன்னுடைய இருபத்திரண்டாவது வயதிலே அவன் இயேசுவை பின்பற்றுபவனாக மாறினதால் அவனது தாய் அவன் மரித்து விட்டான் என்று எண்ணி, புதைத்தும் விட்டாள்! இன்று சேன் புதிதாய் வரும் விருந்தினர் மத்தியிலே ஊழியஞ் செய்யும் சர்வதேச குழுவிலே ஒரு அங்கத்தவனாக உள்ளான். இந்த நிலையத்திலே சேன் சந்திக்கிற அநேக நபர்கள் அவனது சொந்த நாட்டிலிருந்து வருகிறவர்களாவார்கள். ஆச்சரியமாக அந்நாட்டிலிருந்து வருகிறவர்களில் அநேகர் அவனது குலத்தை சேர்ந்தவர்களாக காணப்படுகிறார்கள். இன்று அவனது தாய் ஆபிரிக்காவிலே தன் மகன் வெளிநாட்டிலிருந்து வருகிறவர்களுக்கு உதவி செய்கிறான் என்ற பெருமையுடன் காணப்படுகிறாள்.
 

ஜெப குறிப்புகள்

விலகி வந்துள்ள இஸ்லாமியர் புதிய மக்களோடு கலாச்சாரம் மற்றும் மொழியிலே இணைந்து காணப்படுவதை கடினமாக காண்கிறார்கள். முதிர்ச்சியான கிறிஸ்தவர்கள் அவர்களின் நண்பர்களாகவும் புதிய குடும்பமாக காணப்பட வேண்டும என்று ஜெபம் செய்வோம்.

ஆண்டவர் விசுவாசிகளை சமாதானத்தின் ஜனத்தாரை சந்திக்க வழிநடத்தும்படியாக ஜெபம் செய்வோம் (லூக்கா 10), மேலும் இஸ்லாமியருக்கு சமாதான பிரபுவை அறிமுகஞ்செய்ய ஒரு கருவிகளாக இவர்கள் காணப்பட வேண்டும் என்று ஜெபம் செய்வோம்.

மேற்கத்திய வாழ்த்துதலான ‘ஹாய்” என்று சொல்லும்போது வட அமேரிக்காவிலுள்ள அனேக இஸ்லாமியருக்கு அது ஆச்சரியமாக உள்ளது. இன்று ‘ஹாய்” என்னும் வார்த்தையானது சமர்ப்பிக்க நீண்ட நட்புறவு அவசியமாயுள்ளது.
அதற்கு ஒரு முயற்சியை செய்யுங்கள்.!

ENGLISH :http://www.30-days.net/muslims/muslims-in/america-north/canadas-hospitality-opens-hearts/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network